என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பண்ருட்டி அருகே பெண் மீது தாக்குதல்: கணவன், மனைவி மீது வழக்கு
    X

    பண்ருட்டி அருகே பெண் மீது தாக்குதல்: கணவன், மனைவி மீது வழக்கு

    • இந்நிலையில் வீடு கட்டுமான பணிக்காக குமாரின் வீட்டருகே மண் கொட்டி வைக்கப்பட்டிருந்தது.
    • சாலையில் மண்ணை ஏன் கொட்டி வைத்திருந்திருக்கிறீர்கள் என்று குமாரின் மனைவி தில்லையம்மாளிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.

    கடலூர்:

    பண்ருட்டியை அடுத்த சொரத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் குமார். இவருக்கும் அதே ஊரைச் சேர்ந்த வடிவேல் என்பவருக்கும் விளைநிலம் தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில் வீடு கட்டுமான பணிக்காக குமாரின் வீட்டருகே மண் கொட்டி வைக்கப்பட்டிருந்தது. இதைக் கண்டு ஆத்திரமடைந்த வடிவேல், சாலையில் மண்ணை ஏன் கொட்டி வைத்திருந்திருக்கிறீர்கள் என்று குமாரின் மனைவி தில்லையம்மாளிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.

    அப்போது அங்கு வந்த வடிவேல் மனைவி மீனா மற்றும் உறவினர்கள் வடிவேலுவுடன் சேர்ந்து தில்லையம்மாளை தாக்கினர். இதில் படுகாயமடைந்த தில்லையம்மாள் பண்ருட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இது தொடர்பான புகாரில் வடிவேல், அவரது மனைவி மீனா மற்றும் 2 பேர் மீது முத்தாண்டிக்குப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து அவர்களை தேடி வருகின்றனர்.

    Next Story
    ×