என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தூத்துக்குடியில் ஒப்பந்ததாரர் மீது தாக்குதல்-  கார் கண்ணாடி உடைப்பு
    X

    தூத்துக்குடியில் ஒப்பந்ததாரர் மீது தாக்குதல்- கார் கண்ணாடி உடைப்பு

    • ராகவானந்தத்திற்கு சொந்தமான காரில் நேற்று இரவு நண்பர்கள் 2 பேரும் மது குடிக்க சென்றதாக கூறப்படுகிறது.
    • அப்போது அவர்களுக்கிடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி ஹவுசிங் போர்டு காலனியை சேர்ந்தவர் ராகவானந்தம் (வயது56). ஒப்பந்ததாரர்.

    இவரது நண்பர் அண்ணாநகரை சேர்ந்த முருகன். இந்நிலையில் ராகவானந்தத்திற்கு சொந்தமான காரில் நேற்று இரவு நண்பர்கள் 2 பேரும் மது குடிக்க சென்றதாக கூறப்படுகிறது.

    பின்னர் அவர்கள் வீடுகளுக்கு திரும்பினர். அப்போது அவர்க ளுக்கிடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த முருகன், ராகவானந்தத்தை தாக்கினார். இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

    பின்னர் கற்களால் காரின் கண்ணாடியை உடைத்துவிட்டு அங்கிருந்து தப்பி சென்றுவிட்டார். காயமடைந்த ராகவானந்தம் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது தொடர்பான புகாரின் ேபரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×