என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  களக்காடு அருகே உள்ளாட்சி தேர்தல் தகராறில் 3 பேர் மீது தாக்குதல் தந்தை-மகன்களுக்கு வலைவீச்சு
  X

  களக்காடு அருகே உள்ளாட்சி தேர்தல் தகராறில் 3 பேர் மீது தாக்குதல் தந்தை-மகன்களுக்கு வலைவீச்சு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • களக்காடு அருகே உள்ள நடுச்சாலைப்புதூர் வடக்குத்தெருவை சேர்ந்தவர் தங்கத்துரை மகன் முத்துக்குமார் (வயது 28).
  • கடந்த ஆண்டு நடந்த உள்ளாட்சி தேர்தலில் பஞ்சாயத்து உறுப்பினர் பதவிக்கு முத்துக்குமாரின் சகோதரர் முத்துராஜும், அதே ஊரைச் சேர்ந்த லெட்சுமணன் மகன் பிரவினும் போட்டியிட்டனர்.

  களக்காடு:

  களக்காடு அருகே உள்ள நடுச்சாலைப்புதூர் வடக்குத்தெருவை சேர்ந்தவர் தங்கத்துரை மகன் முத்துக்குமார் (வயது 28). விவசாயி. கடந்த ஆண்டு நடந்த உள்ளாட்சி தேர்தலில் பஞ்சாயத்து உறுப்பினர் பதவிக்கு முத்துக்குமாரின் சகோதரர் முத்துராஜும், அதே ஊரைச் சேர்ந்த லெட்சுமணன் மகன் பிரவினும் போட்டியிட்டனர். இதில் முத்துராஜ் வெற்றி பெற்றார்.

  இதுதொடர்பாக இரு தரப்பினருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வருகிறது. இந்நிலையில் சம்பவத்தன்று முத்துக்குமார் தனது வீட்டு முன் நின்று கொண்டு அவரது உறவினர்கள் அனந்தகிருஷ்ணன், கணேசன் ஆகியோரிடம் பேசிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த பிரவின், அவரது சகோதரர் ராபின்சன், தந்தை லெட்சுமணன் ஆகியோர்களுக்கும், முத்துக்குமாருக்கும் தகராறு ஏற்பட்டது.

  இதனால் ஆத்திரம் அடைந்த லெட்சுமணன் மற்றும் அவரது மகன்கள் பிரவின், ராபின்சன் ஆகியோர், முத்துக்குமார் மற்றும் அவரது உறவினர்கள் கணேசன், அனந்தகிருஷ்ணன் ஆகியோரை அவதூறாக பேசி கம்பால் தாக்கினர். மேலும் கொலை மிரட்டலும் விடுத்தனர். காயம் அடைந்த முத்துக்குமார் உள்பட 3 பேரும் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

  இதுபற்றி களக்காடு போலீசில் புகார் செய்யப்பட்டது. சப்-இன்ஸ்பெக்டர் ரெங்கசாமி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி, இதுசம்பந்தமாக லெட்சுமணன் மற்றும் அவரது மகன்களை தேடி வருகிறார்.

  Next Story
  ×