என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருவெண்ணைநல்லூர் அரசு கல்லூரியில்  விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ்
    X

    விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு எஸ்.பி ஸ்ரீநாதா கேடயங்களையும் வழங்கினார்.

    திருவெண்ணைநல்லூர் அரசு கல்லூரியில் விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ்

    • விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு கேடயம், கோப்பைகள் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டது.
    • விழாவிற்கு கல்லூரி முதல்வர் தமிழரசி தலைமை தாங்கினார்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் விளையாட்டு போட்டிகள் மற்றும் கவின் கலை மன்ற விழா நடைபெற்றது. விழாவிற்கு கல்லூரி முதல்வர் தமிழரசி தலைமை தாங்கினார். இன்ஸ்பெக்டர் செல்வராஜ், வரலட்சுமி, லலிதா, இந்திரா, முப்பாலிகை ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்திரா வரவேற்றார். விழாவிற்கு விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா கலந்து கொண்டு விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு கேடயம், கோப்பைகள் மற்றும் பரிசுகளை வழங்கும் விழாவில் பேசிய ஸ்ரீநாதா போதை பழக்கத்தால் ஏற்படும் தீய விளைவுகள் குறித்து மாணவ-மாணவிகளிடம் போதைப் பொருள் பற்றி விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். முன்னாள் முதல்வர் நாகலட்சுமி நன்றி கூறினார். இதில் சண்முகம், அருண், புவனேஸ்வரி, தயாளமூர்த்தி, சண்முகசுந்தரம், பாலகுமார், விஜயகுமாரி உள்ளிட்ட ஆசிரியர்கள் மற்றும் 700-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×