search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பட்டுக்கோட்டையில், காலை உணவு திட்டம் குறித்து பயிற்றுநர்களுக்கு பயிற்சி- கலெக்டர் தொடக்கி வைத்தார்
    X

    பயிற்சியை கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தொடக்கி வைத்து பேசினார்.

    பட்டுக்கோட்டையில், காலை உணவு திட்டம் குறித்து பயிற்றுநர்களுக்கு பயிற்சி- கலெக்டர் தொடக்கி வைத்தார்

    • நசுவினியாறு வடிகால் தூர்வாரும் பணி நடைபெற்று வருவது குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது.
    • பணிகளை விரைவாகவும் தரமாகவும் முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மாவட்டத்தில் நடந்து வரும் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் ஆய்வு செய்தார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவுக்கிணங்க தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை வட்டம் நாடியம்பாள்புரம் பாளமுத்தி ஏனாதி அருகே சுக்கிரன்பட்டி வடிகால் வாய்க்கால் நீர்வளத் துறை சார்பில் தூர்வாரும் பணி நடைபெற்று வருவது ஆய்வு செய்யப்பட்டது.

    பொன்னவ ராயன் கோட்டை அருகே நசுவினியாறு வடிவேல் நீரவளத்துறை சார்பில் தூர்வாரும் பணி நடைபெற்று வருவது குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது.

    மேலும் தூர்வாரும் பணிகள் நடைபெற்று வரும் விபரங்களை சிறப்பு செயலியில் பதிவேற்றப்பட்டு பணிகளின் செயல்பாடுகள் கண்காணிக்கப்படும்.

    இதன் மூலம் மாவட்டம் தோறும் நடைபெற்று வரும் தூர்வாரும் பணிகள் வடிகால் மற்றும் வாய்க்கால்களில் விரைவா கவும் சீராகவும் தூர்வார ப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

    மேற்கண்ட பணிகளை விரைவாகவும் தரமாகவும் முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

    முன்னதாக பட்டுக்கோ ட்டையில் உள்ள மண்டல ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி நிறுவனத்தில் தமிழ்நாடு மாநில ஊரக, நகர்புற வாழ்வாதார இயக்கம் சார்பில் முதலமைச்சரின் காலை உணவு திட்டம் குறித்து பயிற்றுநர்களுக்கான பயிற்சியினை தொடக்கி வைத்து பயிற்சி பெறுபவ ர்களிடம் பயிற்சி குறித்து எடுத்துரைக்கப்பட்டது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்நிகழ்ச்சியில் மண்டல ஊரக வளர்ச்சி நிறுவன கூடுதல் இயக்குநர் மற்றும் முதல்வர் பிரபாகர், கல்லணைக் கால்வாய் கோட்ட செயற்பொறியாளர் பவழக்கண்ணன், கல்லணை கால்வாய் உபகோட்ட உதவி செயற்பொறியாளர் மணிகண்டன் மற்றும் அனைத்து அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×