என் மலர்
அரியலூர்
அரியலூரில் பள்ளி அருகே பெட்டிக்கடைகளில் சிகரெட் விற்ற 2 பேரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அரியலூர்:
சென்னை உயர்நீதிமன்றம் பள்ளி அருகே சிகரெட், புகையிலை போன்ற பொருட்களை விற்கக்கூடாது என உத்தரவிட்டது. அதன் அடிப்படையில் அரியலூரில் பள்ளிக்கூட பகுதியில், 300 அடி தூரத்திற்குள் உள்ள கடைகளில் சிகரெட் மற்றும் புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா என அரியலூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மதியழகன் தலைமையில் போலீசார் தீவிர சோதனை நடத்தினர்.
இதில் ஜெயராமபுரம் கிராமத்தில் பள்ளி அருகே கவுதமன் (வயது 54) என்பவர் நடத்தி வந்த பெட்டிக்கடையில் ரூ.560 மதிப்புள்ள 7 சிகரெட் பாக்கெட்டுகளையும், பொய்யாதநல்லூர் கிராமத்தில் பள்ளி அருகே பெட்டிக்கடை வைத்திருந்த தெய்வகுமார் (45) என்பவரது கடையில் ரூ.320 மதிப்புள்ள 4 சிகரெட் பாக்கெட்டுகளையும் போலீசார் கைப்பற்றி 2 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஜெயங்கொண்டம் அருகே கார்மோதி ஸ்கூட்டியில் சென்றவர் படுகாயமடைந்தார்.
ஜெயங்கொண்டம்:
ஜெயங்கொண்டம் அருகில் உள்ள கல்லாத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் வடிவேல் (65). இவர் நேற்று முன்தினம் ஜெயங்கொண்டம் கடைவீதிக்கு சென்றுவிட்டு ஊருக்கு தனது ஸ்கூட்டியில் சென்றார். அப்போது பின்னால் வந்த கார் மோதியது.
இதில் வடிவேல் படுகாயமடைந்து ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை பெற்று கும்பகோணம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
இது குறித்து வடிவேலின் மனைவி கஸ்தூரி ஜெயங்கொண்டம் போலீசில் புகார் அளித்ததின் பேரில் சப்–இன்ஸ்பெக்டர் செல்லமுத்து வழக்குபதிந்து கார் டிரைவர் விருத்தாசலம் லூகாஸ் தெருவை சேர்ந்த செல்வராஜ் மகன் எபிநேசர் (42) என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றார்.
அரியலூர் மாவட்டம், அரியலூர் இரயில் நிலையத்தை இணைக்க ஏதுவாக நெடுஞ்சாலைத் துறை மூலம் 100 மீட்டர் அகலத்தில் ஒரு வழிப்பாதை அமைக்க திட்டமிடப்பட்டு, அடிப்படை பணிகள் நடைபெற்று வருகிறது. இப்பணிகளை மாவட்ட கலெக்டர் எ.சரவணவேல்ராஜ் நேரில் ஆய்வு செய்தார்.

அரியலூர் புறவழிசாலையிலிருந்து இரயில் நிலையத்தினை இணைக்கும் புதிய இணைப்பு சாலையினை புறவழி சாலையில் இருந்து அரியலூர் கோவிந்தபுரம் சாலையில் இணைக்கும் சுமார் 100 மீட்டர் ஒரு வழிப்பாதையை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு பயன்படுத்தும் வகையில் புதிய பாதை சீரமைக்கும் பொருட்டு அங்குள்ள முட்புதற்களை உடனடியாக அகற்றி சாலை அமைக்க ஆயத்த பணிகளை தொடங்க உடனடியாக அலுவலர்களுக்கு உத்தரவிட்டு, பணிகளை நேரில் பார்வையிட்டு மாவட்ட கலெக்டர் எ.சரவணவேல்ராஜ் ஆய்வு செய்தார்.
இந்நிகழ்ச்சியில், திட்ட இயக்குநர் ஊரக வளர்ச்சி முகமை சரஸ்வதி கணேசன், கோட்டாட்சியர் மோகனராஜன், செயற் பொறியாளர் செந்தில், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் அ.செந்தில், வட்டாட்சியர் அமுதா, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கபிலன், சேகர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

அரியலூர் மாவட்டத்தில் ஓய்வூதியர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 29-ந்தேதி நடைபெறுவதாக கலெக்டர் சரவணவேல்ராஜ் தெரிவித்துள்ளார்.
அரியலூர்:
அரியலூர் மாவட்டத்தில் 2016ஆம் அண்டு ஜூன் மாதத்திற்கு மாவட்ட அளவிலான ஓய்வூதியர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள பிரதான கூட்ட அரங்கில் வரும் 29-ந்தேதி காலை 10.30 மணியளவில் நடைபெறவுள்ளது.
எனவே, ஓய்வூதியம் பெறுபவர்கள் தங்களது குறைகள் குறித்த மனுக்களை வருகிற 26-ந்தேதிக்குள் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இரண்டு பிரதிகளுடன் விண்ணப்பிக்குமாறு மாவட்ட கலெக்டர் சரவணவேல்ராஜ் தெரிவித்துள்ளார்.

கொலை வழக்கில் 7 வருடம் தலைமறைவாக இருந்த ஓட்டல் ஊழியரை கைது செய்த போலீசார் திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.
செந்துறை:
செந்துறை நின்னியூரை சேர்ந்தவர் மணி. இவர் மீது கொலை வழக்கு உள்ளது. அது தொடர்பாக அவரை போலீசார் தேடி வந்தனர். ஆனால் அவர் 7 வருடமாக போலீசில் சிக்காமல் இருந்து வந்தார்.
இதையடுத்து மாவடட எஸ்.பி. அனில்குமார் கிரி உத்தரவின் பேரில்அரியலூர் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் முத்துகருப்பன் மேற்பார்வையில் இன்ஸ் பெக்டர் ஜெபராஜ் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை யினர் தீவிர விசாரணை நடத்தி மணியை தேடி வந்தனர்.
இந்நிலையில் புதுவண்ணார் பேட்டையில் உள்ள ஒரு ஓட்டலில் மணி வேலை பார்த்து வருவதாக கிடைத்த தகவலை அடுத்து அங்கு போலீசார் சென்றனர். பின்னர் அங்கு வேலை செய்து கொண்டிருந்த மணியை கைது செய்து அரியலூர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
நீதிபதி 15 நாட்கள் காவலில் வைக்க உத்தரவிட்டதையடுத்து திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

அரியலூர் மாவட்டத்தில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் ரூ.54 லட்சத்தில் நலத்திட்ட உதவிகளை மாவட்ட கலெக்டர் எ.சரவணவேல்ராஜ் வழங்கினார்.
அரியலூர்:
அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகக் கூட்டரங்கில், மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் எ.சரவணவேல்ராஜ் தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தில் இலவச வீட்டுமனைப்பட்டா, முதியோர் உதவித்தொகை போன்ற பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 307 மனுக்களை பொது மக்களிடமிருந்து பெற்ற மாவட்ட கலெக்டர் மனுக்களின் மீது சம்மந்தப்பட்ட அலுவலர்கள் உடனடியாக நடவடிக்கைகள் மேற்கொள்ள உத்தரவிட்டார்.
மேலும், புதுவாழ்வுத் திட்டத்தின் சார்பில் 13 கிராம ஊராட்சிகளுக்கு ஊக்க நிதிக்காக ரூ.54 லட்சம் மதிப்பிலான காசோலைகளையும், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் துறையின் சார்பில் ரூ.82 ஆயிரத்து 500 மதிப்பில் 7 மாற்றுத்திறனாளிகளுக்கு மூன்று சக்கர வண்டிகளும், 8 மாற்றுத்திறனாளிகளுக்கு சக்கர நாற்காலிகளும் என ஆகமொத்தம் 28 நபர்களுக்கு ரூ.54 லட்சத்து 82 ஆயிரத்து 500 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட கலெக்டர் எ.சரவணவேல் ராஜ் வழங்கினார்.
கூட்டத்தில், திட்ட இயக்குநர் ஊரக வளர்ச்சி முகமை சரஸ்வதி கணேசன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) பா.லலிதாவதி, துணை ஆட்சியர் (சமூகநல பாதுகாப்புத் திட்டம்) மங்கலம், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் அ.செந்தில், திட்ட மேலாளர் புதுவாழ்வுத் திட்டம் கதிர்வேல், மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் குமார் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

விபத்தில் சிக்கிய மோட்டார் சைக்கிள்கள் தீப்பிடித்து எரிந்ததில் முதியவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
ஜெயங்கொண்டம்:
அரியலூர் மாவட்டம் செந்துறை சிறுகடம்பூர் பகுதியை சேர்ந்தவர்கள் நாராயணசாமி (வயது65), ராஜேந்திரன். இவர்கள் இருவரும் நேற்று காலை மோட்டார் சைக்கிளில் ஜெயங்கொண்டம் நோக்கி சென்றனர்.
ஜெயங்கொண்டம் சூரிய மணல் பெட்ரோல் பல்க் அருகே செல்லும் போது அந்த வழியாக ராஜசேகர், வெங்கட்குமார் ஆகியோர் மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்தனர். அதே போல் அப்பகுதியை சேர்ந்த 11-ம்வகுப்பு மாணவி சாந்தி (16) பெட்ரோல் பல்க்கில் இருந்து சாலையை நோக்கி மொபட்டில் வந்தார்.
இந்நிலையில் எதிர்பாராத விதமாக 3 மோட்டார் சைக்கிள்களும் நேருக்கு நேர் மோதியது. இதில் நாராயணசாமி, ராஜசேகர் ஆகியோரின் மோட்டார் சைக்கிள்கள் தீப்பிடித்து எரிந்தன. இதில் சாந்தி லேசான காயமடைந்தார். மற்ற 4பேருக்கும் பலத்த தீக்காயம் ஏற்பட்டது.
விபத்தில் காயமடைந்த 5 பேரும் அங்குள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றனர். பின்னர் சாந்தியை தவிர மற்ற 4பேரும் மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி இன்று காலை நாராயணசாமி இறந்தார். இது குறித்து ஜெயங்கொண்டம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சட்டமன்ற தேர்தலில் ஜெயங்கொண்டம் தொகுதியில் அ.தி.மு.க சார்பில் போட்டியிட்ட ராமஜெயலிங்கம் வெற்றிபெற்றதை அடுத்து வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார்.
ஜெயங்கொண்டம்:
சட்டமன்ற தேர்தலில் ஜெயங்கொண்டம் தொகுதியில் அ.தி.மு.க சார்பில் போட்டியிட்ட ஜே.கே.என்.ராமஜெயலிங்கம் வெற்றிபெற்றார்.
இதையடுத்து அவர் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து வருகிறார். நேற்று ஆண்டிமடம் ஒன்றியத்திற்குட்பட்ட கருக்கை, ஆத்துக்குறிச்சி, விழுதுடையான், ஓலையூர், அழகாபுரம், சிலம்பூர், இடையக்குறிச்சி, கொடுக்கூர், குவாகம், வல்லம், சிலுவைச்சேரி உட்பட 15 கிராமங்களுக்கு சென்று வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார்.
உடன் மாவட்ட துணை செயலாளர் தங்கபிச்சமுத்து, ஒன்றிய செயலாளர் சிங்காரம், பொதுக்குழு உறுப்பினர் எம்ஜிராமச்சந்திரன், ஜெயங்கொண்டம் நகர செயலாளர் செல்வராஜ், ஒன்றிய அம்மாபேரவை செயலாளர் செந்தில்ராஜன், கூட்டுறவு சங்கத்தலைவர் சம்பத், ஒன்றிய மாணவரணி செயலாளர் மருதமுத்து, ஒன்றிய அவைத்தலைவர் செல்வையா, மாவட்ட அண்ணா தொழிற்சங்க இணை செயலாளர் ஜெயசங்கர், அழகாபுரம் கூட்டுறவு சங்கத் தலைவர் செல்வராசு மற்றும் கவுன்சிலர் ரமேஷ், மகாபாரிவள்ளல், வருண், விஜய், தனஞ்செயன், லோகு உட்பட 100க்கும் மேற்பட்டோர் உடனிருந்தனர்.

அரியலூர் அருகே நிலத்தகராறில் விவசாயி வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அரியலூர்:
அரியலூர் மாவட்டம் திருமானூர் அருகே உள்ள செட்டிக்குழி கிராமத்தை சேர்ந்தவர் சுப்பிரமணியன் (வயது 55). விவசாயி. இவருக்கு சொந்தமாக அங்கு நிலம் உள்ளது. அதன் அருகே சின்னத்துரை (60) என்பவருக்கு சொந்தமாகவும் நிலம் உள்ளது.
இந்நிலையில் இருவருக்கும் இடையே நிலம் தொடர்பாக தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்தது. நேற்றிரவும் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த சின்னதுரை, அவரது மகன் ராஜமாணிக்கம் ஆகிய 2பேரும் சேர்ந்து சுப்பிரமணியனை அரிவாளால் வெட்டினர். இதில் பலத்த வெட்டுக் காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இது குறித்து தகவல் அறிந்ததும் திருமானூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவீந்திர பிரகாஷ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரியலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி சின்னதுரை, அவரது மகன் ராஜமாணிக்கம் ஆகிய 2பேரையும் கைது செய்தனர். தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

ஜெயங்கொண்டம் அருகே வெவ்வேறு இடங்களில் அடுத்தடுத்து நிகழ்ந்த சாலை விபத்தில் 3 பேர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்
ஜெயங்கொண்டம்:
ஜெயங்கொண்டம் அருகே காக்காபாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் முருகேசன் மகன் சுப்ரமணி. வேன் டிரைவர்.
இவரது மினி வேனில் முருங்கைக் காய் லோடு ஏற்றிக் கொண்டு கும்பகோணம் – ஜெயங்கொண்டம் சாலையில் கோடங்குடி கிராமம் அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது ஜெயங்கொண்டம் சேவகத் தெருவைச் சேர்ந்த கணேசன் அதே ரோட்டில் மோட்டார் சைக்கிளில் வந்துள்ளார்.
வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் மினி வேன் பின்னால் மோதியது. இதில் கணேசன் படுகாயமடைந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு ஜெயங்கொண்டம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இதுகுறித்து மினி வேன் டிரைவர் சுப்ரமணி தா.பழூர் போலீஸ்நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் சிறப்பு சப்–இன்ஸ்பெக்டர் சாமிக்கண்ணு வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
அதேபோல் ஜெயங்கொண்டம் அருகே கஞ்சங்கொல்லை ஆட்டுக்காரத் தெருவைச் சேர்ந்தவர் சரவணன். இவர் சம்பவத்தன்று மோட்டார் சைக்கிளில் சொந்த வேலைகாரணமாக அந்த பகுதியில் உள்ள சென்னை – கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது நெல்லித்தோப்பு அருகே திருப்பனந்தாள் கிராமம் வடக்குத் தெருவைச் சேர்ந்த முருகன் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார் இந்த நிலையில் இவர் மீது சரவணன் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் பலமாக மோதியது. இதில் படுகாயமடைந்த சரவணன் கும்பகோணம் தனியார் ஆஸ்பத்திரியில், முருகன் ஜெயங்கொண்டம் அரசு ஆஸ்பத்திரியிலும் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து மீன்சுருட்டி போலீஸ் சிறப்பு சப்–இன்ஸ்பெக்டர் செல்வராயர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

அரியலூர் புதிய அகல ரெயில் பாதையில் ரெயிலை இயக்குவதற்கு ஒரு மணி நேரத்துக்கும் மேலாக ரெயில்வே கேட் மூடப்பட்டதால் பொது மக்கள் ஆத்திரமடைந்து ரெயிலை மறித்து கல்வீசி தாக்கினர். இதில் ஹவுரா எக்ஸ்பிரஸ் என்ஜின் கண்ணாடி சேதமடைந்தது.
அரியலூர்:
அரியலூர் ரெயில்வே ஸ்டேஷன் அருகே அரியலூர்-பெரம்பலூர் சாலையில் ரெயில்வே கேட் உள்ளது. இந்த வழியாக அதிக அளவில் ரெயில்கள் இயக்கப்படுவதால் இந்த கேட் தினமும் 50 முறைக்கு மேல் மூடப்பட்டு திறக்கப்படுவது வழக்கம். அரியலூரில் இருந்து ஆர்.எஸ்.மாத்தூர் வரை 2-வது அகல ரெயில் பாதை அமைக்கப்பட்டுள்ளது. இந்த பாதையில் நேற்று மாலை குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரெயிலை இயக்க முடிவு செய்யப்பட்டது.
அதன்படி மாலை 4-30மணிக்கு இந்த ரெயில்வே கேட் மூடப்பட்டது. ஒரு மணி நேரம் தாமதமாக வந்த குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு 5-30மணிக்கு புதிய பாதையில் ரெயில் இயக்கப்பட்டது. அதன் பின்னரும் கேட் திறக்கப்படவில்லை.
அப்போது அல்லி நகரத்தில் நடந்த விபத்தில் காயமடைந்த பெண்ணை ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்த ஆம்புலன்ஸ் ரெயில்வே கேட்டில் சிக்கி காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இதனால் காத்திருந்த பொதுமக்கள் ஆத்திரமடைந்தனர்.
அப்போது குருவாயூர் எக்ஸ்பிரசை தொடர்ந்து ஹவுரா எக்ஸ்பிரஸ் வேகம் குறைக்கப்பட்ட நிலையில் ரெயில்வே ஸ்டேஷனுக்கு வந்து கொண்டிருந்தது. அதைக்கண்டு பொதுமக்கள் மேலும் ஆத்திரமடைந்தனர். அவர்கள் திடீரென்று ஹவுரா எக்ஸ்பிரஸ் ரெயிலை மறித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது சிலர் கற்கள் வீசி தாக்கியதில் ரெயில் என்ஜின் கண்ணாடி உடைந்தது.
இது குறித்த தகவல் அறிந்ததும் ரெயில்வே அதிகாரிகள் அங்கு வந்து பொதுமக்களை சமாதானப்படுத்தினர். இதையடுத்து அங்கிருந்து ரெயில் புறப்பட்டு சென்றது. பின்னர் ரெயில்வே கேட் திறக்கப்பட்டது. இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

அரியலூர் அருகே இளம்பெண் மாயமான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அரியலூர்:
அரியலூர் அருகே தேளூர் கிராமத்தை சேர்ந்தவர் அய்யப்பன். இவர், சிங்கப்பூரில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவருடைய மனைவி விஜயலட்சுமி (வயது 24). இவர்களுக்கு 1 பெண் குழந்தை உள்ளது.
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு விஜயலட்சுமியின் மாமனார் நடராஜன் உள்ளிட்ட குடும்பத்தினர் உறவினரின் துக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக வெளியில் சென்றிருந்தனர். அப்போது விஜயலட்சுமி தனது குழந்தையுடன் வீட்டில் இருந்தார்.
இந்த நிலையில் நடராஜன் தனது குடும்பத்தினருடன் மீண்டும் வீட்டிற்கு திரும்பி வந்த போது விஜயலட்சுமியின் குழந்தை மட்டும் வீட்டிலிருந்தது. இதனால் அதிர்ந்து போன நடராஜன் வீடு முழுவதும் தேடி பார்த்த போது தான் விஜயலட்சுமி மாயமானது தெரிய வந்தது.
இதையடுத்து நடராஜன் மற்றும் அவரது உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடி பார்த்தும் விஜயலட்சுமி கிடைக்கவில்லை. இது குறித்து கயர்லாபாத் போலீஸ் நிலையத்தில் நடராஜன் புகார் கொடுத்தார்.
புகாரின் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கன்னியம்மாள் வழக்குப்பதிவு செய்து, குடும்ப பிரச்சினை காரணமாக கோபித்து கொண்டு விஜயலட்சுமி சென்றாரா? அல்லது வேறு ஏதும் காரணமா? என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகிறார்.