என் மலர்
செய்திகள்

கொலை வழக்கில் 7 வருடம் தலைமறைவாக இருந்த ஓட்டல் ஊழியர் கைது
கொலை வழக்கில் 7 வருடம் தலைமறைவாக இருந்த ஓட்டல் ஊழியரை கைது செய்த போலீசார் திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.
செந்துறை:
செந்துறை நின்னியூரை சேர்ந்தவர் மணி. இவர் மீது கொலை வழக்கு உள்ளது. அது தொடர்பாக அவரை போலீசார் தேடி வந்தனர். ஆனால் அவர் 7 வருடமாக போலீசில் சிக்காமல் இருந்து வந்தார்.
இதையடுத்து மாவடட எஸ்.பி. அனில்குமார் கிரி உத்தரவின் பேரில்அரியலூர் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் முத்துகருப்பன் மேற்பார்வையில் இன்ஸ் பெக்டர் ஜெபராஜ் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை யினர் தீவிர விசாரணை நடத்தி மணியை தேடி வந்தனர்.
இந்நிலையில் புதுவண்ணார் பேட்டையில் உள்ள ஒரு ஓட்டலில் மணி வேலை பார்த்து வருவதாக கிடைத்த தகவலை அடுத்து அங்கு போலீசார் சென்றனர். பின்னர் அங்கு வேலை செய்து கொண்டிருந்த மணியை கைது செய்து அரியலூர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
நீதிபதி 15 நாட்கள் காவலில் வைக்க உத்தரவிட்டதையடுத்து திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

Next Story