என் மலர்
செய்திகள்

பள்ளி அருகே பெட்டிக்கடைகளில் சிகரெட் விற்ற 2 பேர் கைது
அரியலூரில் பள்ளி அருகே பெட்டிக்கடைகளில் சிகரெட் விற்ற 2 பேரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அரியலூர்:
சென்னை உயர்நீதிமன்றம் பள்ளி அருகே சிகரெட், புகையிலை போன்ற பொருட்களை விற்கக்கூடாது என உத்தரவிட்டது. அதன் அடிப்படையில் அரியலூரில் பள்ளிக்கூட பகுதியில், 300 அடி தூரத்திற்குள் உள்ள கடைகளில் சிகரெட் மற்றும் புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா என அரியலூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மதியழகன் தலைமையில் போலீசார் தீவிர சோதனை நடத்தினர்.
இதில் ஜெயராமபுரம் கிராமத்தில் பள்ளி அருகே கவுதமன் (வயது 54) என்பவர் நடத்தி வந்த பெட்டிக்கடையில் ரூ.560 மதிப்புள்ள 7 சிகரெட் பாக்கெட்டுகளையும், பொய்யாதநல்லூர் கிராமத்தில் பள்ளி அருகே பெட்டிக்கடை வைத்திருந்த தெய்வகுமார் (45) என்பவரது கடையில் ரூ.320 மதிப்புள்ள 4 சிகரெட் பாக்கெட்டுகளையும் போலீசார் கைப்பற்றி 2 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story