என் மலர்
அரியலூர்
ஆண்டிமடம் அருகேயுள்ள ராங்கியம் காலனித் தெருவைச் சேர்ந்தவர் பழனிவேல் கூலிதொழிலாளி. இவரது மகள் அல்லிராணி (வயது20). 10-ம் வகுப்பு வரை படித்துவிட்டு கோயம்புத்தூர் அடுத்த கோவில்பாளையத்தில் ஒரு தனியார் பஞ்சுமில்லில் சுமார் 2 வருடங்களாக வேலை பார்த்து வந்தவர், பொங்கலுக்கு சொந்த ஊரான ராங்கியம் வந்துள்ளார்.
பெற்றோர்கள் அல்லிராணிக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்துள்ளனர். அப்போது சிலம்பூரிலிருந்து பெண் கேட்டு வந்தனர். இருவீட்டாரும் சம்மதம் தெரிவித்து அதற்கான ஏற்பாடு செய்தனர். நேற்று முன்தினம் அல்லிராணியை வீட்டில் விட்டுவிட்டு, பழனிவேல் ஜெயங்கொண்டம் வனத்துறைக்கு வேலைக்கு சென்றுவிட்டார்.
மேரி பொருட்கள் வாங்க வெளியில் சென்றுவிட்டு மாலையில் வீட்டிற்கு வந்து பார்த்தபோது அல்லிராணியை காணவில்லை எங்கு தேடியும் கிடைக்கவில்லை.
இது குறித்து மேரி ஆண்டிமடம் போலீசில் புகார் கொடுத்தார். அதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் அசோகன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அரியலூர் மாவட்டத்தில் புதுவாழ்வு திட்ட மற்றும் மகளிர் திட்டம் இணைந்து வருகின்ற 28-ந்தேதி (சனிக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை ஜெயங்கொண்டம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது.
இது குறித்து மாவட்ட கலெக்டர் சரவணவேல்ராஜ் கூறியதாவது:-
வேலைவாய்ப்பு முகாமில் 25-க்கு மேற்பட்ட தனியார் தொழில் நிறுவனங்கள் கலந்து கொண்டு தகுதியான இளைஞர்களை தேர்வு செய்ய இருக்கிறது. அந்த முகாமில் (108 ஆம் புலன்சுக்கு ஓட்டுநர், செவிலியர்), மெக்கானிக், வெல்டர், பிட்டர், டர்னர், எலக்ட்ரிஷியன், பிளம்பர், ஏ.சி. மெக்கர்னிக், ஆயத்த ஆடை (தையல் பயிற்சி முடித்தவர்கள்), ஆகிய வேலைகளுக்கு இளைஞர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். விண்ணப்பதாரர்கள் 18-35 வயதுக்குள் இருக்க வேண்டும். வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்வோர் பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம்-2, கல்வித்தகுதி, அனுபவ சான்று அசல் மற்றும் நகலுடன் கலந்து கொள்ள வேண்டும் என கலெக்டர் சரவணவேல்ராஜ் தெரிவித்துள்ளார்.
ஆண்டிமடம் அருகே வரதராஜன்பேட்டை ஆரோக்கியபுரத்தைச் சேர்ந்தவர் தேவதுரை மனைவி அந்தோணியம்மாள் (28). இவருக்கும் அதே ஊரைச்சேர்ந்த அபிஷேகராயர் மகன் வின்செண்ட் பவுல் (35) என்பவருக்கும் முன்விரோதம் இருந்துவந்துள்ளதாக தெரிகிறது.
நேற்று வின்செண்ட் பவுல் தனது உறவினர்களான பெரியநாயகசாமி மகன் ஜான்கென்னடி (22), அந்தோணிசாமி மகள் நிரோஸ் ஆகியோருடன் சென்று வீட்டில் இருந்து அந்தோணியம்மாளை வெளியே வரச்சொல்லி அசிங்கமாக திட்டி, கட்டையால் தாக்கி, வீட்டு ஓடுகளை உடைத்துவிட்டு சென்று விட்டதாக அந்தோணியம்மாள் ஆண்டிமடம் போலீசில் கொடுத்த புகாரின்பேரில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பரமசிவம் வழக்கு பதிந்து வின்செண்ட் பவுலை கைது செய்து விசாரித்து வருகின்றார்.
ஜெயங்கொண்டம்:
ஜெயங்கொண்டம் அருகே உடையார்பாளையம் தெற்கு தெருவைச் சேர்ந்தவர் அண்ணாமலை (வயது 47). இவரது மகள் கயல்விழி (19). ஜெயங்கொண்டம் தனியார் கல்லூரியில் பி.ஏ. ஆங்கிலம் இரண்டாமாண்டு படித்து வருகிறார்.
நேற்று முன்தினம் காலை வழக்கம்போல் கல்லூரிக்கு சென்ற கயல்விழி நேற்றுவரை வீடு திரும்பவில்லை.
இதுகுறித்து அண்ணாமலை தனது உறவினர்கள், நண்பர்கள் ஆகியோரது வீடுகளில் தேடியும் கிடைக்காததால், சககல்லூரி மாணவர்களிடம் விசாரித்தனர்.
அப்போது தஞ்சை மாவட்டம், பந்தநல்லூர் அருகேயுள்ள இருமூளை கிராமம், மேலவெளியைச் சேர்ந்த ராஜேந்திரன் மகன் ராஜா அழைத்து சென்றிருக்கலாம் என சந்தேகத்தின் பேரில் அண்ணாமலை உடையார்பாளையம் போலீசில் கொடுத்த புகாரின்பேரில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் அன்பழகன் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றார்.
உடையார்பாளையம்:
உடையார்பாளையம் அருகே சுத்தமல்லி கிராமத்தை சேர்ந்தவர் சிங்காரம் மகன் தெய்வசிகாமணி(வயது 65).விவசாயியான இவர் சுத்தமல்லி-தா.பழூர் சாலை அருகே தனது விவசாய நிலத்தை பார்வையிட்டு பின்னர் அதே சாலையில் வீடு திரும்பிக்கொண்டிருந்தார்.
அப்போது அதே வழியில் கொலையனூர் கிராமத்தை சேர்ந்த சுப்பிரமணியன் மகன் தேவேந்திரன்(21). தா.பழூரை நோக்கி சென்றுகொண்டிருந்தார்.அப்போது சுத்தமல்லி அருகே சென்றுகொண்டிருந்தபோது எதிரே நடந்து வந்துகொண்டிருந்த தெய்வசிகாமணி மீது எதிர்பாரத விதமாக தேவேந்திரன் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த தெய்வசிகாமணி சம்பவஇடத்தில் பலியானார்.
இது குறித்து உடையார்பாளையம் போலீசார் வழக்கு பதவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அரியலூர் பஸ் நிலையத்தில் 60வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் உடல்நிலை சரியில்லாத நிலையில் சுற்றி திரிந்தவர் திடீரென மயங்கி கீழே விழுந்தார். தகவல் கிடைத்ததும் அரியலூர் போலிசார் விரைந்து சென்று மயங்கி கிடந்தவரை அரியலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர், மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர், அங்கு சிகிச்சை பலனில்லாமல் இறந்துவிட்டார், அவர் எந்த ஊரை சார்ந்தவர் பெயர் மற்றும் முகவரி தெரியவில்லை பச்சை கலர் நைட்டி அனிந்துள்ளார்.
இவரை பற்றி ஏதேனும் தகவல் கிடைத்தால் அரியலூர் காவல் நிலையத்திற்கு 04329-222009 என்ற தொலைபேசி எண்ணுக்கு தகவல் தெரிவிக்க வேண்டுமென தெரிவிக்கப்படுகிறது. அரியலூர் போலீஸ் சப்இன்ஸ்பெக்டர் நந்தகுமார் வழக்கு பதிவு செய்து விசாரனை நடத்தி வருகின்றார்.
அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துத்துறை சார்பில் 28-வது சாலை பாதுகாப்பு வார விழாவையொட்டி மாவட்ட கலெக்டர் சரவணவேல்ராஜ், விழிப்புணர்வு பேரணியை தொடங்கி வைத்து கூறியதாவது:-
சாலை பாதுகாப்பு வார விழா மூலம் வாகன ஓட்டிகள், பயணிகள் மற்றும் பாதசாரிகள் ஆகியோர் கடைபிடிக்க வேண்டிய சாலை பாதுகாப்பு வழி முறைகள், உத்தரவு சின்னங்கள், எச்சரிக்கை சின்னங்கள் மற்றும் தகவல் சின்னங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஜனவரி 17 முதல் (23-ந்தேதி) வரை “சாலை பாதுகாப்பு வார விழாவாக” கொண்டாடப்பட்டு வருகிறது.
“உங்களின் பாதுகாப்பே உங்கள் குடும்ப பாதுகாப்பு, சாலையில் எச்சரிக்கையுடன் செல்வீர்” “ஓடும் வாகனத்துடனே தொடர்ந்து ஓடாதே” “சாலையில் கால்நடைகள் உலாவிட அனுமதிக்காதீர்” “சாலை குறியீடு பலகை மீது விளம்பரம் ஒட்டவோ, எழுதவோ கூடாது” “சாலை மற்றும் நடைபாதைகளை ஆக்கிரமித்து போக்குவரத்து இடையூறு செய்ய வேண்டாம்” சிறுவர்கள், வயதானவர்கள் மற்றும் ஊனமுற்றோர்களுக்கு சாலையை கடக்க உதவி செய்யுங்கள்” என்ற விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய விளம்பர பதாகைகளை கைகளில் ஏந்திவாறு மேற்கண்ட வாசகங்களை உரக்க கூறிக் கொண்டு, விழிப்புணர்வு பேரணி தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
அதன் அடிப்படையில் இந்த பேரணியை அனைத்து பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பொதுமக்கள் கூடும் இடங்களில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
எனவே, இம்மாவட்டத்தில் பொதுமக்கள் அனைவரும் சாலை விதிகளை மதித்து, விபத்துகள் நடைபெறாத மாவட்டமாக அரியலூர் மாவட்டத்தினை மாற்ற அனைவரும் ஒத்துழைப்பு நல்க வேண்டும் என மாவட்ட கலெக்டர் சரவண வேல்ராஜ், கூறினார்.
நிகழ்ச்சியில், வட்டார போக்குவரத்து அலுவலர் அழகிரிசாமி, வட்டார போக்குவரத்து அலுவலர்கள், ஊர்காவல் படையைச் சார்ந்தவர்களும் மற்றும் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.
தா.பழூர் வட்டாரத்தில் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை திட்டத்தில் தோட்டக்கலை துறையின் மூலம் காய்கறி சாகுபடியில் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை தலைப்பின் கீழ் பண்ணைப் பள்ளி முதல் பயிற்சி வகுப்பு காரைக்குறிச்சி கிராமத்தில் நடைப்பெற்றது.
இந்நிகழ்ச்சியில் தோட்டக்கலை துணை அலுவலர் ராமச்சந்திரன் தலைமையேற்று பேசினார்.
இதில் வேளாண் அறிவியல் மைய தொழில்நுட்ப வல்லுநர் ராஜா ஜோஸ்லின் பேசுகையில் மண் பரிசோதனை, விதை நேர்த்தி, உயிர் உரங்களின் பயன்பாடு, நன்மை செய்யும் பூச்சிகள், தீமை செய்யும் பூச்சிகளை எவ்வாறு கண்டரிவது என விளக்கமாகவும் செயல்முறையாகவும் வயல்வெளியில் விரிவாக எடுத்துக்கூறினார். அட்மா திட்ட வட்டார தொழில்நுட்ப மேலாளர் சகாதேவன் வரவேற்று அட்மா திட்ட செயல்பாடுகள் குறித்து எடுத்துக்கூறினார். தோட்டக்கலை உதவி தோட்டக்கலை அலுவலர் சாந்தி நன்றி கூறினார்.
இதனை முன்னிட்டு கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், அஷ்டலட்சுமி ஹோமம், சம்கிதா ஹோமம், அஷ்த்திர ஹோமம் மற்றும் கடந்த 5ம் தேதியன்று பாலாலயமும் நடைபெற்றது. 400 வருடங்களுக்கு பின்னர் 19ம்தேதி கொடிமரம் அமைக்கப்பட்டதாகவும் கூறுகின்றனர். இதில் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
தற்போது கோவிலில் கும்பாபிஷேகத்திற்காக கலசத்திற்கு செல்லும் படிக்கட்டு அமைக்கும் பணியின் தரம், கோவிலை சுற்றி பாதுகாப்பு, கோவிலுக்கு வரும் பக்தர்கள் தரிசனம் செய்ய நிற்கும் இடம், சிற்பங்களின் பாதுகாப்பு, இதற்காக நடைபெற்று வரும் பணிகளை சென்னை மண்டல தொல்லியல்துறை கண்காணிப்பாளர் லெட்சுமி ஆய்வு செய்து அலுவலர்களுக்கு ஆலோசனைகளை வழங்கினார்.
அவருடன் தொல்லியல்துறை உதவி பொறியாளர் சரவணன், தஞ்சை மண்டல தொல்லியல்துறை பாதுகாப்பாளர் சந்திரசேகர், உதவி ரசாயன அலுவலர் பிரசோப்ராஜ், உதவி தோட்டக்கலைத்துறை அலுவலர் சுந்தரமூர்த்தி, இந்து சமய அறநிலையத்துறை கோவில் நிர்வாக செயல் அலுவலர் ரமேஷ், கங்கைகொண்டசோழபுரம் மேம்பாட்டு குழும தலைவர் பொறியாளர் கோமகன், பொருளாளர் மகாதேவன், காங்சி சங்கரமட கமிட்டியினர் ஜடாதரன், ரவிஷங்கர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள அணைக்குடம் கிராமத்தை சேர்ந்தவர் அழகேசன், இவரது மகள் சந்திரகலா (வயது17). இவர் சேலம் பஞ்சப்பூர் அருகே உள்ள ஒரு தனியார் பஞ்சு மில் விடுதியில் தங்கியிருந்து வேலை பார்த்து வருகிறார்.
இந்த நிலையில் அவர் பொங்கல் விடுமுறைக்கு தனது சொந்த ஊரான அணைக்குடம் கிராமத்திற்கு வந்திருந்தார். அப்போது உடல் நலக்குறைவு காரணமாக ஜெயங்கொண்டம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு எடுப்பதற்காக சென்றுள்ளார்.
பின்னர் ஆஸ்பத்திரியில் சென்ற சந்திரகலா மாலை நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த தந்தை அழகேசன் உறவினர்கள், நண்பர்கள் வீட்டில் விசாரித்தார். ஆனால் சந்திரகலா எங்கு சென்றார் என தெரியவில்லை. இது குறித்து தா.பழூர் போலீஸ் நிலையத்தில் என்று புகார் செய்தார்.
அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான சந்திரகலாவை தேடி வந்தனர். மேலும் போலீசார் இது குறித்து அனைத்து மாவட்ட போலீசாருக்கும் தகவல் கொடுத்தனர்.
இந்நிலையில் வேலூரில் சந்திரகலா தனியாக நின்றுள்ளார். இதனை பார்த்த போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினர். இதில் அவர் கடத்தப்பட்ட விபரம் தெரிய வந்தது. மேலும் விசாரணையில் திருவண்ணாமலை மேலகாட்டூரை சேர்ந்த வடிவேல் என்பவர் மகன் மார்க்கண்டேன்(24) கடத்தி வந்தது தெரிந்தது.
இதையடுத்து போலீசார் சந்திரகலாவை மீட்டு அவரை கடத்திய மார்க்கண்டேயனை கைது செய்தனர். மேலும் அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அரியலூர் மாவட்டம் தா.பழூர் பகுதியில் இளம்பெண் கடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
தமிழரின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்க கோரி தமிழகம் முழுவதும் கல்லூரி மாணவர்கள் உள்ளிட்டோரின் போராட்டம் தீவிரமாக நடந்து வருகிறது.
அந்த வகையில் பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் பெரம்பலூர் பாலக்கரை, பூலாம்பாடி, அன்னமங்கலம், வேப்பந்தட்டை அரசு கலைக்கல்லூரி முன்பு என பல்வேறு இடங்களில் போராட்டம் நடந்தது. இதில் பெரம்பலூர் பாலக்கரை ரவுண்டானா அருகே மாணவ-மாணவிகள் இரவு முழுவதும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
2-வது நாளாக நேற்று பெரம்பலூரில் உள்ள பல்வேறு கல்லூரிகளை சேர்ந்த மாணவ-மாணவிகள் ஒரு அணியாக திரண்டு ஊர்வலமாக வந்தனர். பின்னர் அவர்கள் பெரம்பலூர் பாலக்கரை பகுதியில் தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது ஜல்லிக்கட்டுக்கு அனுமதி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும், பீட்டா அமைப்புக்கு தடை விதிக்கப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர். இந்த போராட்டத்தையொட்டி அங்கு இரும்பு தடுப்புகள் மூலம் வேலி அமைத்து போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
சுட்டெரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாமல் போராட்டத்தில் பங்கேற்ற மாணவ, மாணவிகள் ‘மீசையை முறுக்கு... பீட்டாவை நொறுக்கு...’ என்பது உள்ளிட்ட கோஷங்களை எழுப்பினர். போராட்டத்தில் சாரை சாரையாக திரளான மாணவர்கள் பங்கேற்றதால் பெரம்பலூர் பாலக்கரை பகுதியே ஸ்தம்பித்து விட்டது. போக்குவரத்து ஒழுங்கு பிரிவு போலீசார் அங்கு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு போக்குவரத்து நெருக்கடியை சீர்செய்தனர்.
பெரம்பலூர் புது பஸ்நிலைய பகுதியில் சாமியானா பந்தல் அமைத்து தமிழ் ஆர்வலர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்றும் தமிழ் ஆர்வலர்கள் ஜல்லிக்கட்டுக்கு அனுமதி வழங்க கோரி போராட்டம் நடத்தினர். அப்போது ஒருவரை பிணம் போல் படுக்க வைத்து அவரை பீட்டாவாக கருதி ஒப்பாரி வைத்தனர். அப்போது பீட்டாவை கண்டித்து அவர்கள் கோஷம் எழுப்பினர்.
குன்னம் மற்றும் அதை சுற்றியுள்ள வேப்பூர், கிழுமத்தூர், புதுவேட்டகுடி, வயலூர், கோவில்பாளையம் அண்ணாநகர், திருமாந்துறை ஆகிய கிராமங்களில் மாணவர்கள், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் உள்ளிட்டோர் ஜல்லிகட்டுக்கு தடையை நீக்க கோரியும், வெளிநாட்டு குளிர்பானங்களை தடை செய்ய வலியுறுத்தியும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் குளிர்பான பாட்டில்களை கீழே போட்டு உடைத்தும், குளிர்பானத்தை தரையில் கொட்டியும் தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.
வேப்பந்தட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு அரசு ஊழியர்கள், மதிய உணவு இடைவேளையின்போது ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம் நடத்தினர். வேப்பந்தட்டை பஸ்நிலையத்தில் காளைகளுடன் வந்து இளைஞர்கள் போராட்டம் நடத்தினர். பூலாம்பாடி மேற்கு பஸ்நிலையம், அரும்பாவூர், பாலக்கரை உள்ளிட்ட இடங்களில் இளைஞர்கள், இளம்பெண்கள் உள்ளிட்டோர் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் காரணமாக பூலாம்பாடி பகுதிக்கு நேற்று சரிவர பஸ்கள் விடப்படவில்லை.
அரியலூர் மாவட்டத்திலும் நேற்று 2-வது நாளாக மாணவர்களின் போராட்டம் நடந்தது. மீன்சுருட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள், கிராம முக்கியஸ்தர்கள், சமூக ஆர்வலர்கள் மீன்சுருட்டியில் ஜல்லிக்கட்டு காளையுடன் ஊர்வலமாக சென்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் பீட்டாவை தடை செய்யக் கோரியும், ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாகவும் கோஷம் எழுப்பினர்.
மீன்சுருட்டி அருகே காடுவெட்டி பகுதியில் 200-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஜெயங்கொண்டம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் எதிரே ஜெயங்கொண்டம் மற்றும் சுற்றுப்பகுதிகளை சேர்ந்த கல்லூரி மாணவர்கள் 2-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர். ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கக் கோரியும், ஜல்லிக்கட்டு போராட்டத்தில் கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்கவும் அவர்கள் வலி யுறுத்தினர்.
இதில் கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள், சமூக ஆர்வலர்கள், மாடுபிடி வீரர்கள், காளை உரிமையாளர்கள் என 300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். போராட்டத்தில் பங்கேற்ற இளைஞர்கள் கூறுகையில், இது ஒரு சில மணி நேரம் நடைபெறும் போராட்டம் அல்ல, ஜல்லிக்கட்டுக்கான தடையை நீக்கும் வரை எங்களது போராட்டம் தொடரும் என்று தெரிவித்தனர்.
ஜெயங்கொண்டத்தில் இந்து முன்னனி மாவட்ட செயற்குழு கூட்டம் நடைபெற்றது. மாநில செயற்குழு உறுப்பினர் பாலமுருகன் தலைமை தாங்கினார். பா.ஜ.க. மாவட்ட தலைவர் நடராஜன், மாவட்ட பொது செயலாளர் மகாலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில இணை அமைப்பாளர் பொன்னையன் கலந்து கொண்டு பேசியதாவது:-
ஜல்லிக்கட்டு என்பது நமது தேசத்தினுடைய பாரம்பரியமான ஒரு விளையாட்டு. இது விளையாட்டு அல்ல, இது ஒரு கோவில் வழிபாடு. இது விளையாட்டு என்று சொல்வதால் நாம் தோற்று விடுகிறோமோ என்ற சந்தேகம் வருகிறது. இது உண்மையிலேயே குலதெய்வங்களுடைய வழிபாடுதான். இந்த வழிபாடுகளில் தலையிட எந்த கோர்ட்டுக்கும், எந்த சட்டத்துக்கும் இடமில்லை. இந்த வழிபாடு நடக்க இந்து முன்னணி ஆதரவு தெரிவிக்கும்.
அமெரிக்காவை சேர்ந்த பீட்டா அமைப்பை உடனே தடைசெய்ய வேண்டும். இது ஒருதனிப்பட்ட அமைப்பினுடைய கைக்கூலி நிறுவனமாகும். அரசியல் தலைவர்கள் கைது செய்யப்பட்ட போது எம்.எல்.ஏ., எம்.பி.க்கள் எப்படி போராடினார்களோ அதேபோல் ஜல்லிக்கட்டிற்காக போராடி இருக்க வேண்டும். இவர்களின் சுயநலத்தால் தமிழகம் ஜல்லிக்கட்டை இழந்தது.
ஜல்லிக்கட்டு நடக்க வேண்டுமானால் கோர்ட்டில் வழக்கு தொரட வேண்டும். மத்திய அரசை வலியுறுத்தி போராட வேண்டும். இந்த ஜல்லிக்கட்டை மையமாக வைத்து பலகட்சிகள் அரசியல் செய்கின்றனர். மத்திய அரசை குறைகூறி தப்பித்துக் கொள்ள நினைக்கிறார்கள். அரசியல் கட்சிகள் களத்தில் இறங்கி போராடவேண்டும்.
ஆந்திரா, மகாராஷ்டிராவில் முதல்வர் உட்பட அனைவரும் இறங்கி போராடியதால் வெற்றி கிடைத்தது. இங்கு தங்களுடைய பதவியை காப்பாற்றி கொள்ளவும், தங்களுடைய பணத்தை பாதுகாத்துக் கொள்ளவும் தான் நினைக்கிறார்கள். பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் எச்.ராஜா அவரே இறங்கி ஜல்லிக்கட்டு விட்டார்.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் இந்து முன்னணி மாவட்ட தலைவர் ராஜசேகர் உள்ளிட்ட ஒன்றிய, நகர நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.






