என் மலர்
செய்திகள்

மண் பரிசோதனை
தா.பழூர் அருகே காய்கறி சாகுபடியில் பண்ணைப்பள்ளி பயிற்சி
தா.பழூர் அருகே தோட்டக்கலை துறையின் மூலம் காய்கறி சாகுபடியில் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை தலைப்பின் கீழ் பண்ணைப் பள்ளி முதல் பயிற்சி வகுப்பு காரைக்குறிச்சி கிராமத்தில் நடைப்பெற்றது.
தா.பழூர்:
தா.பழூர் வட்டாரத்தில் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை திட்டத்தில் தோட்டக்கலை துறையின் மூலம் காய்கறி சாகுபடியில் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை தலைப்பின் கீழ் பண்ணைப் பள்ளி முதல் பயிற்சி வகுப்பு காரைக்குறிச்சி கிராமத்தில் நடைப்பெற்றது.
இந்நிகழ்ச்சியில் தோட்டக்கலை துணை அலுவலர் ராமச்சந்திரன் தலைமையேற்று பேசினார்.
இதில் வேளாண் அறிவியல் மைய தொழில்நுட்ப வல்லுநர் ராஜா ஜோஸ்லின் பேசுகையில் மண் பரிசோதனை, விதை நேர்த்தி, உயிர் உரங்களின் பயன்பாடு, நன்மை செய்யும் பூச்சிகள், தீமை செய்யும் பூச்சிகளை எவ்வாறு கண்டரிவது என விளக்கமாகவும் செயல்முறையாகவும் வயல்வெளியில் விரிவாக எடுத்துக்கூறினார். அட்மா திட்ட வட்டார தொழில்நுட்ப மேலாளர் சகாதேவன் வரவேற்று அட்மா திட்ட செயல்பாடுகள் குறித்து எடுத்துக்கூறினார். தோட்டக்கலை உதவி தோட்டக்கலை அலுவலர் சாந்தி நன்றி கூறினார்.

Next Story