என் மலர்
செய்திகள்

ஜெயங்கொண்டம் அருகே கல்லூரி மாணவி மாயம்
ஜெயங்கொண்டம் அருகே கல்லூரி மாணவி மாயமானது குறித்து தந்தை போலீசில் புகார் அளித்துள்ளார்.
ஜெயங்கொண்டம்:
ஜெயங்கொண்டம் அருகே உடையார்பாளையம் தெற்கு தெருவைச் சேர்ந்தவர் அண்ணாமலை (வயது 47). இவரது மகள் கயல்விழி (19). ஜெயங்கொண்டம் தனியார் கல்லூரியில் பி.ஏ. ஆங்கிலம் இரண்டாமாண்டு படித்து வருகிறார்.
நேற்று முன்தினம் காலை வழக்கம்போல் கல்லூரிக்கு சென்ற கயல்விழி நேற்றுவரை வீடு திரும்பவில்லை.
இதுகுறித்து அண்ணாமலை தனது உறவினர்கள், நண்பர்கள் ஆகியோரது வீடுகளில் தேடியும் கிடைக்காததால், சககல்லூரி மாணவர்களிடம் விசாரித்தனர்.
அப்போது தஞ்சை மாவட்டம், பந்தநல்லூர் அருகேயுள்ள இருமூளை கிராமம், மேலவெளியைச் சேர்ந்த ராஜேந்திரன் மகன் ராஜா அழைத்து சென்றிருக்கலாம் என சந்தேகத்தின் பேரில் அண்ணாமலை உடையார்பாளையம் போலீசில் கொடுத்த புகாரின்பேரில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் அன்பழகன் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றார்.
Next Story






