என் மலர்tooltip icon

    அரியலூர்

    ஜெயங்கொண்டத்தில் அதிக இடங்களில் தி.மு.க. வெற்றிபெற்று நகராட்சியை தன் வசமாக்கியுள்ளது.
    அரியலூர்:

    ஜெயங்கொண்டம் நகராட்சியில் 21 வார்டுகளுக்கு, 38 வாக்குச்சாவடிகளில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்பட்டது. அதில் தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சியினர் 13 இடங்களில் வெற்றி பெற்று, ஜெயங்கொண்டம் நகராட்சி திமுக வசம் வந்துள்ளது.  வெற்றி பெற்றவர்களின் விவரம்:
    1-வது வார்டு- தங்கமாணிக்கம் (அதிமுக)
    2-வது வார்டு -வெற்றிவேலன் (திமுக)
    3-வது வார்டு - ரெங்கநாதன் (பா.ம.க)
    4-வது வார்டு - மனோன்மணி (பா.மக.)
    5-வது வார்டு - சேகர் (அதிமுக)
    6-வது வார்டு - செல்வராஜ் (அதிமுக)
    7-வது வார்டு- புகழேந்தி (திமுக)
    8-வது வார்டு- கருணாநிதி (திமுக)
    9-வது வார்டு - சரவணன் (விசிக)
    10-வது வார்டு - சுமதி (விசிக)
    11- வது வார்டு - சுப்பிரமணி (அதிமுக)
    12-வது வார்டு - அம்பிகாபதி (திமுக)
    13-வது வார்டு- மீனாட்சி (திமுக)
    14-வது வார்டு - ராஜ மாணிக்கம் (திமுக)
    15-வது வார்டு - ருக்ஷனாபேகம் (திமுக)
    16-வது வார்டு - ராபர்ட் சுந்தரபாய் (சுயேட்சை)
    17-வது வார்டு -ஜோதி லட்சுமி (பா.ம.க)
    18-வது வார்டு - கிருபாநிதி (திமுக)
    19-வது வார்டு - லாவன்யா கருணாநிதி (திமுக)
    20-வது வார்டு - பிரேமா (பா.ம.க,)
    21-வது வார்டு - ஆனந்த் (திமுக)
    மணப்பாறை நகராட்சியில் உள்ள 27 வார்டுகளில் தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் தலா 11 வார்டுகளில் வெற்றி பெற்றுள்ளனர். சுயேட்சைகள் 5 வார்டுகளில் வெற்றிவாகை சூடியுள்ளனர்.
    அரியலூர்:

    அரியலூர் மாவட்ட நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அரியலூர் நகராட்சியில் 18 வார்டுகளுக்கு, 34 வாக்குச்சாவடிகளில் பதிவான வாக்குகள் அனைத்தும் வாக்கு எண்ணும் மையமான அரியலூர் நகராட்சி அலுவலகத்தில் அரியலூர் நகராட்சியில் 4 மேஜைகளில் 9 சுற்றுகளாக இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டது.

    இதில் தி.மு.க. 7 இடங்களிலும், அ.தி.மு.க. 7 இடங்களிலும், சுயேட்டைகள் 4 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது. இதில் நகராட்சியை கைப்பற்றும் முயற்சியில் இரண்டு கட்சிகளும் ஈடுபட்டு வருகிறது. சுயேட்சையாக வெற்றி பெற்ற 4 கவுன்சிலர்கள் எந்த கட்சிக்கு ஆதரவு தருகிறார்களோ அந்த கட்சியே நகராட்சியை கைப்பற்றும். எனவே அரியலூர் நகராட்சியை பொறுத்தவரை சுயேட்சைகள் கையில்தான் உள்ளது.

    அரியலூர் நகராட்சியில் உள்ள 18 வார்டுகளில் வெற்றி பெற்றவர்களின் விவரம்:-

    1-வது வார்டு-ஜேசுமேரி லீனஸ் (சுயேட்சை)

    2-வது வார்டு- செல்வராணி பரமேஷ்வரன் (தி.மு.க.)

    3-வது வார்டு - சத்யன் (தி.மு.க.)

    4-வது வார்டு - கண்ணன் (அ.தி.மு.க.)

    5-வது வார்டு- சாந்தி கலைவாணன் (தி.மு.க.)

    6-வது வார்டு - ரேவதி ராமு (.தி.மு.க)

    7-வது வார்டு -கலியமூர்த்தி (சுயேட்சை)

    8-வது வார்டு - ராஜேந்திரன் (அ.தி.மு.க.)

    9-வது வார்டு - மகாலட்சுமி (அ.தி.மு.க.)

    10-வது வார்டு - இன்பவள்ளி (அ.தி.மு.க.)

    11- வது வார்டு இஸ்மாயில் (அ.தி.மு.க.)

    12-வது வார்டு - மலர்கொடி மனோகரன் (சுயேட்சை)

    13-வது வார்டு - வெங்கடாஜலபதி (அ.தி.மு.க.)

    14-வது வார்டு - ஜெயந்தி குணா (தி.மு.க.)

    15-வது வார்டு - ராணி (தி.மு.க.)

    16-வது வார்டு - ராஜேஸ் (தி.மு.க.)

    17-வது வார்டு -ஜீவா (அ.தி.மு.க.)

    18-வது வார்டு - புகழேந்தி (சுயேட்சை)

    இதேபோல் மணப்பாறை நகராட்சியில் உள்ள 27 வார்டுகளில் தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் தலா 11 வார்டுகளில் வெற்றி பெற்றுள்ளனர். சுயேட்சைகள் 5 வார்டுகளில் வெற்றிவாகை சூடியுள்ளனர். இதனால் அங்கும் நகராட்சியை கைப்பற்ற போவது யார்? என்ற கேள்வி எழுந்துள்ளது.
    அரியலூர் மாவட்ட நகராட்சி- பேரூராட்சிகளுக்கான வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பு அறைகளில் வைக்கப்பட்டு பூட்டி ‘சீல்' வைக்கப்பட்டன.
    அரியலூர்:

    அரியலூர் மாவட்ட நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் மொத்தம் 101 வாக்குச்சாவடிகளில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், கட்டுப்பாட்டு கருவிகள் நேற்று முன்தினம் மாலை 6 மணிக்கு ஓட்டுப்பதிவு முடிந்தவுடன் வாக்குச்சாவடி அலுவலர்களால் ‘சீல்' வைக்கப்பட்டன.

    அரியலூர் நகராட்சியில் உள்ள வாக்குச்சாவடிகளில் பதிவான வாக்குகள் அடங்கிய வாக்குப்பதிவு எந்திரங்கள், அதன் வாக்கு எண்ணும் மையமான அரியலூர் நகராட்சி அலுவலகத்துக்கும், ஜெயங்கொண்டம் நகராட்சி, உடையார்பாளையம், வரதராஜன்பேட்டை ஆகிய பேரூராட்சிகளில் பதிவான வாக்குகள் அடங்கிய வாக்குப்பதிவு எந்திரங்கள், அதன் வாக்கு எண்ணும் மையமான ஜெயங்கொண்டம் பாத்திமா பெண்கள் மேல்நிலைப்பள்ளிக்கும் லாரிகளில் போலீஸ் பாதுகாப்புடன் கொண்டு வரப்பட்டன. 

    அரியலூர் நகராட்சி வாக்குப்பதிவு எந்திரங்கள், நகராட்சியில் தனி பாதுகாப்பு அறைகளில் பாகம் வரிசையாக வாக்குப்பதிவு எந்திரங்கள் அடுக்கி வைக்கப்பட்டன. பின்னர் வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்ட பாதுகாப்பு அறைகள் வேட்பாளர்கள், அவர்களின் முகவர்கள் முன்னிலையில், அந்தந்த தேர்தல் நடத்தும் அலுவலர்களால் பூட்டி ‘சீல்' வைக்கப்பட்டன.

    அரியலூர் மாவட்ட நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் அனைத்தும் நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 8 மணி முதல் அந்தந்த வாக்கு எண்ணும் மையங்களில் எண்ணப்பட உள்ளன. வாக்கு எண்ணும் பணி காலை 8 மணிக்கு தொடங்கி, முதலில் தபால் வாக்குகள் தேர்தல் நடத்தும் அலுவலரின் முன்னிலையில் எண்ணப்பட உள்ளது. அதனைத்தொடர்ந்து மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தின் மூலம் பதிவு செய்யப்பட்ட வாக்குகளை பல்வேறு சுற்றுகளாக எண்ணப்பட உள்ளன.

    மேலும் வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையங்களில் மூன்றடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள வளாகம் முழுவதும் கண்காணிப்பு கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது
    தேர்தல் விரோதத்தில் வக்கீல் ஒருவர் பட்டப்பகலில் வீட்டு முன்பு குத்திக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அரியலூர் மாவட்டத்தில் பெரும் பரபரப்பையும், பதட்டத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
    ஜெயங்கொண்டம்:

    அரியலூர் மாவட்டத்தில் உள்ள அரியலூர், ஜெயங்கொண்டம் நகராட்சிகள், உடையார்பாளையம், வரதராஜன்பேட்டை பேரூராட்சிகளில் கடந்த 19-ந்தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அமைதியான முறையில் நடந்து முடிந்தது.

    இதில் உடையார்பாளையம் பேரூராட்சி 13-வது வார்டில் பிரபு என்பவரது மனைவி இலக்கியா என்பவர் சுயேட்சை வேட்பாளராக போட்டியிட்டார். இவருக்கு ஆதரவாக அதே பகுதியை சேர்ந்த சின்னசாமி மகன் அறிவழகன் (வயது 36) என்பவர் செயல்பட்டு வந்துள்ளார்.

    திருமணமாகாத அவர் ஜெயங்கொண்டம் நீதிமன்றத்தில் வக்கீலாக பணியாற்றி வந்தார். சுயேட்சை வேட்பாளர் இலக்கியாவுக்காக அறிவழகன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வந்தார். இது எதிர்த்து போட்டியிட்டவர்களுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது.

    இதற்கிடையே தேர்தல் முடிவடைந்த நிலையில் அறிவழகனை தீர்த்துக்கட்ட ஒரு கும்பல் திட்டம் தீட்டியது. இந்த நிலையில் இன்று காலை அறிவழகன் தனது வீட்டின் முன்பு நின்றுகொண்டிருந்தார். மேலும் அவர் கோர்ட்டுக்கு புறப்படுவதற்காக தயாரானார்.

    அப்போது அந்த பகுதிக்கு ஒரு ஆட்டோ மின்னல் வேகத்தில் வந்தது. அறிவழகன் வீட்டு முன்பு நின்ற அந்த ஆட்டோவில் இருந்து திபுதிபுவென ஒரு கும்பல் இறங்கியது. அவர்கள் திடீரென்று தாங்கள் வைத்திருந்த ஒருவிதமான பொடியை அறிவழகன் முகத்தில் தூவினர். இதனை சற்றும் எதிர்பாராத அவர் நிலைகுலைந்தார். அப்போது அந்த கும்பல் கத்தியால் அறிவழகனை சரமாரியாக குத்திவிட்டு அதே ஆட்டோவில் தப்பிச்சென்றது.

    இதில் அறிவழகன் ரத்த வெள்ளத்தில் தனது வீட்டின் முன்பு துடிதுடித்து பரிதாபமாக இறந்தார். இதைப் பார்த்த அவரது பெற்றோர் மற்றும் அக்கம் பக்கத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக இதுபற்றி உடையார் பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    அதன்பேரில் ஜெயங்கொண்டம் துணை போலீஸ் சூப்பிரண்டு கலைகதிரவன் மற்றும் போலீசார் விரைந்து வந்து கொலையுண்ட அறிவழகன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஜெயங்கொண்டம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து கொலையாளிகளை தனிப்படை அமைத்து தேடி வருகிறார்கள்.

    தேர்தல் விரோதத்தில் வக்கீல் ஒருவர் பட்டப்பகலில் வீட்டு முன்பு குத்திக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அரியலூர் மாவட்டத்தில் பெரும் பரபரப்பையும், பதட்டத்தையும் ஏற்படுத்தி உள்ளது. அந்த பகுதியில் பாதுகாப்புக்காக போலீசார் நிறுத்தப்பட்டுள்ளனர்.
    இரண்டாவது முறையாக தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தல்படி வாக்களிக்க வந்துள்ளேன். அன்று எங்கள் குடும்பத்தில் 3 பேர் வாக்களித்தோம்.


    ஜெயங்கொண்டம் நகராட்சி 16-வது வார்டுக்குட்பட்ட 2 வாக்குச்சாவடிகளில் இன்று மறு வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இரண்டாவது முறையாக வாக்களிக்க வந்த ஸ்டேட் பேங்க் காலனியை சேர்ந்த எழிலரசன் என்பவர் கூறுகையில், கடந்த 19-ந்தேதி சனிக்கிழமையும் நான் வாக்களித்தேன். இன்று இரண்டாவது முறையாக தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தல்படி வாக்களிக்க வந்துள்ளேன். அன்று எங்கள் குடும்பத்தில் 3 பேர் வாக்களித்தோம். பணி காரணமாக எனது மகன் வெளியூருக்கு சென்று விட்டார். எனவே இன்று இரண்டு வாக்குகள் மட்டுமே பதிவு செய்துள்ளோம். மற்றபடி எங்களுக்கு மறு வாக்குப்பதிவில் எந்தவித சிரமமும் இல்லை என்றார்.

    காலை 9 மணி நிலவரப்படி ஜெயங்கொண்டம் நகராட்சி 16-வது வார்டில் 9 சதவீதம் வாக்குகள் பதிவாகி இருந்தன.

    ஜெயங்கொண்டம் நகராட்சியில் உள்ள 16-வது வார்டில் ஆண்கள் மற்றும் பெண்கள் என இரு வாக்குச்சாவடிகளிலும் இன்று மறுவாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கியது.
    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் நகராட்சிக்கு உட்பட்ட 16-வது வார்டுக்கு இன்று மறுவாக்குப்பதிவு நடைபெற்றது.

    ஜெயங்கொண்டம் நகராட்சியில் உள்ள 21 வார்டுகளுக்கு மொத்தம் 108 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இதற்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு கடந்த சனிக்கிழமை நடைபெற்றது. ஜெயங்கொண்டம் நகராட்சியில் மொத்தமுள்ள 28,042 வாக்காளர்களில் 21,435 வாக்காளர்கள் வாக்களித்துள்ளனர். இது 76.44 சதவீதமாகும்.

    இந்தநிலையில், ஜெயங்கொண்டம் நகராட்சியில் உள்ள 16-வது வார்டுக்கு மறு தேர்தல் நடத்த மாநில தேர்தல் ஆணையம் நேற்று உத்தரவிட்டது.

    ஜெயங்கொண்டம் நகராட்சி 16-வது வார்டில் பிரதான கட்சிகளில் தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டு வேட்பாளராக இதயராணி கை சின்னத்திலும், அ.தி.மு.க. வேட்பாளராக மலர்விழி இரட்டை இலை சின்னத்திலும், பா.ம.க. வேட்பாளராக இந்திராகாந்தி மாம்பழம் சின்னத்திலும் போட்டியிடுகிறார்கள்.

    மேலும் அ.ம.மு.க. வேட்பாளராக ரோஸ்மா பிர‌ஷர் குக்கர் சின்னத்திலும், சுயேட்சை வேட்பாளர்களாக விஜயலட்சுமி மறை முருக்கி (ஸ்பேனர்) சின்னத்திலும், சுந்தராபாய் தீப்பெட்டி சின்னத்திலும் என 6 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

    இதில் குறிப்பாக ஜெயங்கொண்டம் நகராட்சிக்கு உட்பட்ட ஸ்டேட் பேங்க் காலணி, சீனிவாசா நகர், இந்திராநகர், ஜோதிபுரம், கருப்பையா நகர், சிதம்பரம் ரோடு, கல்வி கிராமம் உள்ளிட்ட பகுதிகள் அடங்கிய 16-வது வார்டில் 1,640 வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் 1,034 பேர் கடந்த சனிக்கிழமை நடைபெற்ற தேர்தலில் வாக்களித்துள்ளனர்.

    இந்நிலையில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிடும் விஜயலட்சுமி என்பவருக்கு ஒதுக்கப்பட்டுள்ள மறை முருக்கி (ஸ்பேனர் சின்னம்) அஞ்சல் வாக்குச்சீட்டுகளில் ஆணி சின்னமாக பதிவிடப்பட்டுள்ளதாகவும், மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் பதிவு செய்யப்பட்ட மறை முருக்கி (ஸ்பேனர்) சின்னம் சரியாக பதிவிடப்படவில்லை எனவும் குற்றச்சாட்டு எழுந்தது.

    இப்புகார் தேர்தல் ஆணையத்துக்கு சென்றதையடுத்து இந்த வார்டில் மறுவாக்குப் பதிவு நடத்த தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. மேலும் சனிக்கிழமை அன்று தேர்தல் நடைபெற்ற ஜெயங்கொண்டம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் அதே இடத்தில் இன்று மறுவாக்குப்பதிவு நடத்திடவும் ஏற்பாடுகள் நடந்தன.

    அதன்படி ஜெயங்கொண்டம் நகராட்சியில் உள்ள 16-வது வார்டில் ஆண்கள் மற்றும் பெண்கள் என இரு வாக்குச்சாவடிகளிலும் இன்று மறுவாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கியது. கடந்த சனிக்கிழமை வாக்களித்தவர்கள் சிரமமாக கருதாமல் வாக்குச் சாவடிக்கு வந்து தங்களது வாக்கினை இரண்டாவது முறையாக பதிவு செய்தனர். இதனால் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    தொடர்ந்து மாலை 5 மணி வரை பொதுவாக்காளர்களும், மாலை 5 முதல் 6 மணி வரை கொரோனா பாதிக்கப்பட்டவர்களும் வாக்குப்பதிவு செய்வதற்கான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் செய்துள்ளது.

    கடந்த சனிக்கிழமை நடைபெற்ற தேர்தலின்போது வாக்காளர்களுக்கு அடையாள மையானது வலது கை ஆட்காட்டி விரலில் வைக்கப்பட்டது. இன்று மறு வாக்குப் பதிவின்போது அழியாத மை இடது கை நடு விரலின் மீது வைக்கப்பட்டது.

    மேற்கண்ட வாக்குப்பதிவு நடைபெறும் வாக்குச்சாவடி மையம் அமைந்துள்ள ஜெயங்கொண்டம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் பயிலும் பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் வாக்குப்பதிவு நடைபெறும் 16-வது வார்டில் உள்ள அரசு அலுவலர்கள் மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரிபவர்கள் வாக்களிக்கும் வகையில் இன்று (21-ந்தேதி) விடுமுறை அறிவித்து மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான ரமண சரஸ்வதி தெரிவித்துள்ளார்.
    வாக்கு எண்ணும் மையங்களில் அரியலூர் கலெக்டர் திடீரென ஆய்வு செய்தார்
    அரியலூர்:

    அரியலூர் மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று 19-ந்தேதி  நடைபெற்றது. உள்ளாட்சித் தேர்தலில் பதிவான வாக்குகள் அடங்கிய மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பலத்த காவல்துறை பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு, பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. 

    மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள அரியலூர் நகராட்சி அலுவலகத்தில் உள்ள வாக்கு எண்ணும் மையம், ஜெயங்கொண்டம் பாத்திமா பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் தனித்தனியாக அமைக்கப்பட்டுள்ள ஜெயங்கொண்டம் நகராட்சி, உடையார்பாளைம் பேரூராட்சி மற்றும் வரதராஜன்பேட்டை பேரூராட்சிகளின் வாக்கு எண்ணும் மையங்களை மாவட்ட கலெக்டர் ரமணசரஸ்வதி இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.


    இந்த வாக்கு எண்ணும் மையங்களில் கண்காணிப்பு கேமரா வசதி மற்றும் கண்காணிப்பு அறை, வாக்கு எண்ணும் மையத்தில் வார்டு வாரியாக வாக்குகள் எண்ணும் வகையில் அமைக்கப்பட்டுள்ள மேசை, நாற்காலிகள், வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் அமரும் இடம், 

    சுற்றுகளின் எண்ணிக்கை, தேர்தல் நடத்தும் அலுவலர்கள் அமரும் இடம், முடிவு அறிவித்தல் மற்றும் வெற்றிச்சான்றிதழ் வழங்கும் இடம், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாக கொண்டு வரும் வழி, ஒவ்வொரு வார்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டவுடன் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் வெளியேறும் வழி, காவல் துறை பாதுகாப்பு வசதிகள், அடிப்படை வசதிகள் உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் குறித்து மாவட்ட  கலெக்டர் சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் கேட்டறிந்து ஆய்வு செய்தார். 

    இந்த ஆய்வின்போது, வாக்கு எண்ணிக்கை நாளான 22-ந்தேதி தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் அறிவிப்பின்படி, உரிய விதிமுறைகளுக்குட்பட்டு, வாக்கு எண்ணிக்கையின்போது சிறப்பாக பணியாற்ற வேண்டும் என அலுவலர்களுக்கு கலெக்டர் ரமண சரஸ்வதி அறிவுறுத்தினார்.

    அரியலூர் மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க வசதியாக பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்ததற்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது.
    அரியலூர்:

    நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் அரியலூர் மாவட்டத்தில் 75.69 சதவீதம் வாக்கு பதிவாகியுள்ளது. மாவட்டத்தில் அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடை பெற்றுள்ளது.

    அரியலூர் மற்றும் ஜெயங்கொண்டம் நகராட்சிகளிலும், உடையார்பாளையம் மற்றும் வரதராசன்பேட்டை பேரூராட்சிகளிலும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் அமைதியாக நடை பெற்றது. 

    இந்த தேர்தலில் வாக்காளர்கள் வாக்களிக்கும் வகையில் 102 வாக்கு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. அங்கு மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க ஏதுவாக சாய்தளம் அமைக்கப்பட்டிருந்தது.

    இதனால் தாங்கள் எந்தவித சிரமமும் இன்றி வாக்குச்சாவடிகளுக்கு வந்து வாக்கினை பதிவு செய்ததாக கூறியதோடு, சிறப்பான ஏற்பாடுகளுக்கு பாராட்டுகளையும் தெரிவித்துள்ளனர்.

    ஓரிரு வாக்குச்சாவடிகளில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் சிறு சிறு கோளாறுகள் ஏற்பட்டன. பின்னர், அவை சரி செய்யப்பட்டு, சற்று காலதாமதத்துடன் வாக்குப்பதிவு தொடங்கியது.
    ஒரு சில வாக்குச் சாவடிகளில் மாலை 7 மணிக்கு பெண்கள் வாக்களிக்க காத்திருந்ததைத் தொடர்ந்து, அவர்களுக்கு அடையாள வில்லைகள் வழங்கி வாக்குப்பதிவு தொடர்ந்து நடைபெற்றது. 

    மேற்கண்ட நகர்ப்புற பகுதிகளில் காலை முதல் வாக்குப் பதிவு விறுவிறுப் பாக நடந்ததைத் தொடர்ந்து, சராசரியாக 75.69 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

    இதில் 24,518 வாக்காளர்கள் கொண்ட அரியலூர் நகராட்சியில் 17,453 பேர் வாக்களித்து உள்ளனர். இது 71.18 சதவீதமாகும். அதே போல் 28,042 வாக்காளர்கள் கொண்ட ஜெயங்கொண்டம் நகராட்சியில் 21,435 பேர் வாக்களித்துள்ளனர்.
    கர்ப்பிணி இறந்த சம்பவத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    அரியலூர் :

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள மேலூர் கிராமம் மெயின்ரோட்டு தெருவைச் சேர்ந்த ராமசாமியின் மகள் கனகவல்லி(வயது 29). இவருக்கும் ஸ்ரீபுரந்தான் கிராமத்தை சேர்ந்த கண்ணதாசன்(32) என்பவருக்கும் கடந்த 2017-ம் ஆண்டு திருமணம் நடந்தது. 

    இவர்களுக்கு 3 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் கனகவல்லி சில ஆண்டுகளாக மனநிலை பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்படுகிறது. 

    மேலும் அவர் தற்போது 8 மாத கர்ப்பிணியாக இருந்தார். கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு தனது தந்தை வீட்டிற்கு வந்த கனகவல்லி, ஒரு மாத்திரைக்கு பதிலாக 84 மாத்திரைகளை தின்றதாக கூறப்படுகிறது. 

    இதனால் மயங்கிய அவரை ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து ஜெயங்கொண்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

    வீட்டின் பின்பக்க கதவை உடைத்து 12 பவுன் நகை மற்றும் பணத்தை மர்ம நபர்கள் திருடிச்சென்றனர்.
    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம் வி.கைகாட்டியை அடுத்த விளாங்குடி கிராமத்தை சேர்ந்தவர் ராஜா(வயது 42). பிளம்பர். இவரது மனைவி மனோஅம்பிகா(30). இவர் விளாங்குடியில் பேன்சி பொருட்கள் விற்பனை கடை நடத்தி வருகிறார். 

    இந்நிலையில் வெளியே சென்றிருந்த இவர்கள், நேற்று மாலை தங்களது வீட்டிற்கு வந்து கதவை திறக்க முயன்றபோது உள்பக்கம் தாழ்ப்பாள் போடப்பட்டிருந்தை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் ஜன்னல் வழியாக பார்த்தபோது 2 மர்மநபர்கள் பின்பக்க வாசல் வழியாக  தப்பி ஓடியதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

    இது பற்றி தகவல் அறிந்து அங்கு வந்த கயர்லாபாத் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜவேல் மற்றும் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இதில், வீட்டின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள் பீரோவை உடைத்து அதில் இருந்த சுமார் 12 பவுன் நகைகள், வெள்ளி பொருட்கள், ரூ.81 ஆயிரம் மற்றும் 2 செல்போன்களை திருடிச்சென்றது தெரியவந்தது. 

    இதைத்தொடர்ந்து அங்கு கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு மர்மநபர்களின் கைரேகைகளை சேகரித்தனர். மேலும் இது குறித்து போலீசார் வழக்குப்பதிந்து நகைகளை திருடிச்சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    அரசு பணியிடங்களுக்கான போட்டித் தேர்வுக்காக பயிற்சி வகுப்புகள் தொடங்குகின்றன.
    அரியலூர்:

    அரியலூர் ராஜேஷ் ஐ.ஏ.எஸ். அகடாமியில் 15,000 அரசு பணியிடங்களுக்கான  போட்டித்தேர்வு பயிற்சி வகுப்புக்கான முன்பதிவு நாளை தொடங்குகிறது.  

    தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என். பி.எஸ்.சி.) 2022 ஆம் ஆண்டு 15 ஆயிரம் பணியிடங்களை நிரப்ப உத்தேச கால அட்டவணை வெளியிட்டுள்ளது. இதில் சுமார் 5,800 பணியி டங்கள் குரூப்-2ஏ தேர்வு மூலமாகவும், 5255 பணியிடங்கள் குரூப்-4 தேர்வு மூலமாக நிரப்பப்பட உள்ளது.

    மாணவர்களை இத்தேர்வுக்கு சிறப்பாக தயார்படுத்தும் வகையில் கடந்த 7ஆண்டுகளாக 500-க்கும் மேற்பட்ட   வெற்றியாளர்களை  உருவாக்கிய அரியலூர் மற்றும்  பொய்யூரில் செயல்பட்டு வரும் ராஜேஷ் ஐ.ஏ.எஸ். அகடாமியில் 16 ஆண்டுகள் கல்வித் துறையில் அனுபவம் பெற்றவரான ராஜேஷால் பயிற்சி அளிக்கப்படுகிறது.

    தினசரி  வகுப்பு  வார இறுதி வகுப்பு மற்றும் மாலை நேரடி வகுப்பு ஆகியவை நேரடியாகவும், ஆன்லைன் மூலமும்   நடத்தப்படுகிறது. நாளை (20-ந்தேதி) அறிமுக வகுப்பு நடைபெற உள்ளது. இதில் கலந்துகொள்ள உள்ளவர்கள் 90951 06081 என்ற எண்ணிற்கு வாட்ஸ்அப் அல்லது  குறுஞ்செய்தி  மூலம் முன்பதிவு செய்து கொள்ளலாம்.

    அறிமுக வகுப்பில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் 2000 கட்டணச் சலுகை வழங்கப்படும். இந்த பயிற்சி அரியலூர்   துர்கா ஸ்டோர் இரண்டாவது  தளத்தில் வைத்து நடைபெறும். ஏற்கனவே பொய்யூரில் காவலர் தேர்வுக்கான பயிற்சி வகுப்பு விடுதி வசதியுடன் நடைபெற்று வருகிறது.
    வாக்குச்சாவடிகளுக்கு பொருட்கள் உரிய பாதுகாப்புடன் அனுப்பவேண்டும் என்று கலெக்டர் தெரிவித்துள்ளார்.
    அரியலூர்:

    தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் அறிவிப்பின்படி, அரியலூர் மாவட்டத்தில் உள்ள அரியலூர் நகராட்சி, ஜெயங்கொண்டம் நகராட்சி, உடையார்பாளையம் பேரூராட்சி மற்றும் வரதராஜன் பேட்டை பேரூராட்சிகளில் உள்ள வார்டு உறுப்பினர் பதவியிடங்களுக்கு உள்ளாட்சி பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்படவுள்ளனர்.

    இதன்படி, அரியலூர் மாவட்டத்தில் நாளை வாக்குப்பதிவும், 22-ந் தேதி அன்று வாக்கு எண்ணிக்கையும் நடை பெறவுள்ளது. வாக்குப்பதிவு மற்றும் வாக்கு எண்ணிக்கைக்கு தேர்தல் தொடர்பான பல்வேறு பணிகளை  கலெக்டர் பார்வையிட்டு, ஆய்வு செய்யதார்.

    இதில், அரியலூர் நகராட்சி அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையத்தினை பார்வையிட்டு, வாக்குப்பதிவு இயந்திரம் வைப்பறையிலிருந்து வாக்கு எண்ணும் இடத்திற்கு பாதுகாப்பாக வாக்குப்பதிவு இயந்திரம் கொண்டு செல்லும் வழி, வார்டு வாரியாக வாக்கு எண்ணும் வகையில் மேற்கொள்ளப்பட்டுள்ள பணிகள்,

    தேர்தல் நடத்தும் அலுவலர், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் அமரும் இடம், தேர்தல் பார்வையாளர் அமரும் இடம், வாக்கு எண்ணிக்கை இடம், தேர்தல் முடிவு அறிவிக்கும் இடம், ஒலிப்பெருக்கி, வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் வரும் வழி மற்றும் அமரும் இடம், பாதுகாப்பு தடுப்பு கட்டைகள், கண்காணிப்பு கேமராக்கள் உள்ளிட்ட வாக்கு எண்ணும் மையத்தில் அமைக்கப்பட்டுள்ள பல்வேறு பாதுகாப்பு ஆய்வு செய்தார்.

    அதனைத்தொடர்ந்து, அரியலூர் நகராட்சி அலுவலகத்தில் வாக்குப்பதிவு மையங்களுக்கு அனுப்புவதற்காக பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான வீல்சேர், வாக்குச்சாவடிகளுக்கு தேவையான பொருட்களை பார்வையிட்டு, வாக்குச்சாவடி வாரியாக அனுப்பும் வகையில் தயார் நிலையில் உள்ள வாக்குச்சாவடி பொருட்கள் குறித்து கேட்டறிந்து, உரிய பாதுகாப்பு வசதிகளுடன் வாக்குச் சாவடிகளுக்கு இப்பொருட்களை முறையாக அனுப்பவும் சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
    ×