என் மலர்
அரியலூர்
சிறுமிக்கு பாலியல் தொல்லை வழக்கில் வாலிபருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை
அரியலூர்:
அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே சிறுமியை பாலியல் துன்புறுத்தல் செய்தவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து மகளிர் நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது.
ஆண்டிமடத்தை அடுத்த முன்னூரான்காடுவெட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் பிச்சைபிள்ளை (வயது 43) இவர் கடந்த 2020&ம் ஆண்டு அக்டோபர் மாதம் 11 வயது சிறுமியை தூக்கி சென்று பாலியல் துன்புறுத்தல் கொடுத்துள்ளார். இது குறித்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் ஜெயங்கொண்டம் மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து பிச்சை பிள்ளையை கைது செய்தனர்.
இது தொடர்பாக வழக்கு அரியலூர் மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை நேற்று விசாரித்த நீதிபதி ஆனந்தன், சிறுமியை கடத்திய குற்றத்துக்கு 5 ஆண்டுகள், பாலியல் துன்புறுத்தல் அளித்ததற்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். தண்டனையை ஏககாலத்தில் அனுபவிக்கவும் அவர் உத்தரவிட்டார்.
அரியலூர், ஜெயங்கொண்டம் நகராட்சி மற்றும் 2 பேரூராட்சி தலைவர்கள் பதவியேற்றுக் கொண்டனர்.
அரியலூர்:
அரியலூர் மாவட்ட நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அரியலூர் நகராட்சியில் 18 வார்டுகளுக்கு, 34 வாக்குச் சாவடிகளில் பதிவான வாக்குகள் அனைத்தும் வாக்கு எண்ணும் மையமான அரியலூர் நகராட்சி அலுவலகத்தில் அரியலூர் நகராட்சியில் 4 மேஜைகளில் 9 சுற்றுகளாக எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டது.
இதில் தி.மு.க. 7 இடங்களிலும், அ.தி.மு.க. 7 இடங்களிலும், சுயேட்டைகள் 4 இடங்களிலும் வெற்றி பெற்றது. இதில் நகராட்சியை கைப்பற்றும் முயற்சியில் இரண்டு கட்சிகளும் ஈடுபட்டுவந்த நிலையில். சுயேட்சையாக வெற்றி பெற்ற 4 கவுன்சிலர்கள் தி.மு.க.விற்கு தங்களது ஆதரவை தெரிவித்துள்ளதால், அரியலூர் நகராட்சி தலைவராக தி.மு.க.வை சேர்ந்த சாந்தி பதவியேற்றுக் கொண்டார்
.
இதே போல் ஜெயங்கொண்டம் நகராட்சியில் உள்ள 21 வார்டுகளில் தி.மு.க. 10 இடங்களையும், அ.தி.மு.க. மற்றும் பா.ம.க.வினர் தலா 4 இடங்களையும் விடுதலை சிறுத்தைகள் கட்சி 2 இடங்களையும், சுயேட்சை ஒரு இடத்திலும் வெற்றி பெற்றனர்.
இதில் 10&வது வார்டில் வெற்றி பெற்ற தி.மு.க. கூட்டணி கட்சியான விசிக&வை சேர்ந்த சுமதி ஜெயங்கொண்டம் நகராட்சி தலைவராக பதவியேற்றுக்கொண்டார்.
இதே போல் உடையார் பாளையம் பேரூராட்சியில் தி.மு.க.வை சேர்ந்த மலர்கொடியும், வரதராஜன் பேட்டையில் மார்கிரேட் ஆகியோர் பதவியேற்றுக் கொண்டனர்.

திருமானூரில் லாரி மோதி டி.எஸ்.பி. பலியானார்.
அரியலூர்:
அரியலூர் மாவட்டம் திருமானூர் போலீஸ் நிலை யத்தில் சிறப்பு டி.எஸ்.பி யாக பணிபுரிந்து வந்தவர் பாலசுப்பிரமணியன். இவரது மனைவி முத்து லெட்சுமி. இவர்களுக்கு நிவேதா(23) என்ற மகளும், விக்னேஷ்(19) என்ற மகனும் உள்ளனர்.
இந்த நிலையல் பாலசுப்பிரமணியன் நேற்று,இரவு பணியை முடித்துவிட்டு தனது மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பி கொண்டிருந்தார்.
அப்போது அரியலூர் தஞ்சாவூர் & நெடுஞ்சாலையில் திருமானூர் சர்க்கரை ஆலை அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதியதில் சம்பவ இடத்திலேயே பலியானார்.
இது குறித்து அப்பகுதி மக்கள் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு வந்த திருமானூர் போலீசார், பாலசுப்பிரமணின்உடலை கைப்பற்றி பிரேத பரிசோத னைக்காக அரிய லூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோரிக்கைகளை வலியுறுத்தி திருமானூரில் சாலை மறியல் போராட்டம் நடை பெற்றது.
அரியலூர்:
அரியலூர் மாவட்டம் திருமானூரில் அகிலஇந்திய விவசாயசங்கம் மற்றும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் நெல் கொள்முதலில் விவசாயி களிடம் நேரடியாக ஆன்லைனில் பதிவு முறையை விட்டு விட்டு பழைய முறைப்படி சிட்டா,
அடங்கல், விவசாயிகளி டம் பெற்றுக்கொண்டு அரசு நேரடி நெல்கொள்முதல் நிலையத்தில் பதிவு செய்ய அரசு அனுமதி வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி திருமானூர் பஸ் நிலையத்தில் விவசாயிகள் சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.
போராட்டத்திற்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்கமாவட்ட தலைவர் மணி தலைமை வகித்தார். தங்கமலை, வைத்தியலிங்கம், வரப்பிரசாதம், ராஜதுரை, கணேசன், ஜெகநாதன், தங்கராசு, பாப்பா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மகாராஜன், ஜெகநாதன், சிவகுரு, கரும்பாயிரம், ஆறு முகம், ஆகியோர் கண்டன உரை நிகழ்த்தினர். இந்த சாலை மறியல் போராட்டத்தால் போக்கு வரத்து பாதிக்கப் பட்டது.
இது குறித்து தகவல் அறிந் ததும் திருமானூர் போலீசார் சம்பவ இடத்திற்குசென்று சாலை மறியலில் ஈடுபட்ட வர்களை கைது செய்து அங்கிருந்த தனியார் மண்ட பத்தில் வைத்தனர்.
இதனால் திருமானூர் பஸ் நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
தவக்காலத்தை முன்னிட்டு தேவாலயங்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
அரியலூர்:
கிறிஸ்தவர்களின் 40 நாள் தவக்காலம் புதன்கிழமை தொடங்கியது. அனைத்து தேவலாயங்களிலும் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றன.
இயேசு சிலுவையில் உயிர் நீத்த நாள் புனித வெள்ளியாகவும், இயேசு உயிர்த்தெழுந்த 3 ஆம் நாள் ஈஸ்டர் பண்டி கையாகவும் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் நிகழாண்டு ஈஸ்டர் தினம் ஏப்ரல் 17&ந் தேதி கொண்டாடப்படுகிறது. இதற்காக 40 நாள்கள் தவக்காலத்தை கிறிஸ்தவர்கள் புதன்கிழமை தொடங்கினர்.
இதனை முன்னிட்டு, அரியலூர் மாவட்டத்திலுள்ள அனைத்து கிறிஸ்தவ தேவலாயங்களிலும் சிறப்பு திருப்பலிகள் நடைபெற்றன. அருட் தந்தையர்கள், கிறிஸ்தவர்கள் நெற்றியில் சாம்பல் பூசி தவக்காலத்தை தொடங்கி வைத்தனர்.
திருமானூர் அருகே ஏலாக் குறிச்சியில் உள்ள அடைக்கல அன்னை ஆலயத்தில் பங்கு தந்தை சுவைக்கின் தலைமையில், சிறப்பு திருப்பலி நடைபெற்றன. இதில் கலந்து கொண்ட கிறிஸ்தவர்களுக்கு அவர், சாம்பல் பூசி தவக்காலத்தை தொடங்கி வைத்தார்.
வரதராஜன்பேட்டை புனித அலங்கார அன்னை ஆலயத்தில்பங்கு தந்தையர் பெலிக்ஸ் சாமுவேல் சிறப்பு திருப்பலி நடத்தி கிறிஸ்தவர்களின் நெற்றியில் சாம்பல் பூசி தவக்கலாத்தை தொடக்கி வைத்தார்.
அரியலூர் புனித லூர்து அன்னை ஆலயம், மைக்கேல்பட்டி புனித அன்னை ஆலயம், திருமானூர் புனித அருளானந்தர் ஆலயம், புதுக்கோட்டை தூய மங்கள மாதா ஆலயம், குலமாணிக்கம், கோக்குடி கிராமங்களிலுள்ள புனித இஞ்ஞாசியர் ஆலயம் மற்றும் ஆண்டிமடம், தென்னூர், செந்துறை, மீன்சுருட்டி உள்ளிட்ட தேவலாயங்களில் பங்கு தந்தையர்கள் சிறப்பு திருப்பலி நடத்தி, தவக்காலத்தை தொடங்கி வைத்தனர்.
தவக் காலங்களில் கிறிஸ்தவர்கள் அசைவ உணவுகளை உண்ணா திருத்தல், விரதம் இருத்தல் போன்ற வற்றை கடைபிடிப்பர். இதனால் நமது உடலும், மனமும் வலிமை பெற்று இறைவனின் அன்பை பெற முடியும் என்பது ஜதீகமாகும்.

சாலை பணியாளர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அரியலூர்:
அரியலூர் கோட்டப் பொறியாளர் அலுவலகம் முன்பு சாலைப்பணியாளர் சங்கத்தினர் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் காமராஜ் தலைமை வகித்தார். அரியலூர் கோட்ட பொறியாளரின் தொழிற்சங்க விரோதபோக்கு, உயரதிகாரிகள் மற்றும் அலுவலக பணிகளுக்கு சாலைப் பணியாளர்களை பயன்படுத்திக் கொள்வது ஆகியவற்றை கண்டித்தும்,
சாலைப் பணியாளர்களுக்கு காலணி, தளவாடப் பொருட்கள் வழங்க வேண்டும். 8 கி.மீக்கு 2 சாலைப் பணியாளர்களை பணியில் அமர்த்த வேண்டும். சாலைப் பணியாளர்களுக்கு ஊதிய ரசீது வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஜெயங்கொண்டம் அருகே கிணற்றில் தவறி விழுந்த விவசாயி உயிருடன் மீட்கப்பட்டார்.
அரியலூர்:
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள வெண்மான்கொண்டான் கிராமத்தைச் சேர்ந்தவர் மகாராஜன் வயது 45 விவசாய கூலி வேலை செய்து வருகிறார்.
இவர் தனது வயல்வெளியில் நள்ளிரவில் தூங்கி எழுந்து சிறுநீர் கழிக்க வந்த போது அருகில் இருந்த கிணற்றில் கால் தவறி விழுந்து விட்டார்.
இவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். பின்னர் இது குறித்து ஜெயங்கொண்டம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
தகவல் அறிந்து வந்த ஜெயங்கொண்டம் தீயணைப்புதுறை நிலைய அலுவலர் மோகன்ராஜ் தலைமையிலான வீரர்கள் விரைந்து சென்று கிணற்றுக்குள் விழுந்த மகாராஜனை கயிறு கட்டி பத்திரமாக மீட்டனர்.
பின்னர்அவர் சிகிச்சைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இது குறித்து உடையார்பாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
உக்ரைன் நாட்டில் தவித்து வந்த ஜெயங்கொண்டத்தை சேர்ந்த மருத்துவ மாணவி பத்திரமாக சொந்த ஊர் திரும்பினார்.
அரியலூர்:
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் விசாலாட்சி நகரை சேர்ந்தவர் செல்வம்&ஜெகஸ்வரி தம்பதியின் மகள் கீர்த்தனா.
இவர் கடந்த ஆண்டு டிசம்பர் 13-ந்தேதி உக்ரைன் நாட்டில் உள்ள ரூத்ருர் நேஷனல் யூனிவர்சிட்டியில் மருத்துவ படிப்பிற்காக சென்றார்.
இந்நிலையில் கடந்த சில நாட்களாக ரஷ்யா-உக்ரைன் போர் தீவிரமாக நடைபெற்று வருவதையடுத்து மாணவ, மாணவிகள் இந்தியா திரும்பி வருகின்றனர். இதற்கிடையே உக்ரைனுக்கு சென்ற தனது மகள் பத்திரமாக திரும்ப வரவேண்டும் என்று கீர்த்தனாவுடன் தொடர்பில் இருந்த பெற்றோர்கள் காத்திருந்தனர்.
மகளுக்காக காத்திருந்த செல்வத்தின் குடும்பத்தினருக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில் கீர்த்தனா நேற்று காலை பத்திரமாக திரும்பினார். மத்திய, மாநில அரசுகள் முயற்சியால் இந்தியா முழுவதும் 117 மாணவ, மாணவிகள் மற்றும் தமிழ்நாட்டில் 21 மாணவ, மாணவிகள் அரசு செலவில் திரும்பினர்.
இதில் அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் கீர்த்தனாவுக்கு அவருக்கு ஆரத்தி எடுத்து கட்டித்தழுவி பெற்றோர்கள் வரவேற்று நெகிழ்ச்சி அடைந்தனர்.
பின்னர் மாணவி கீர்த்தனா கூறுகையில், நாங்கள் இருந்த பகுதியில் சுமார் 150&க்கும் மேற்பட்ட தமிழ் மாணவர்கள் பயின்று வந்ததாகவும் அங்கு போர் பதற்றம் தெரியவில்லை எனவும் தெரிவித்தார்.
நேற்று முன்தினம் புதாபஸ்ட் விமான நிலையத்தில் இருந்து டெல்லி வந்து அங்கிருந்து சென்னை வந்து காலை வீடு திரும்பியுள்ளேன் என கூறினார்.
மேலும் தன்னுடன் தென்காசி, திருநெல்வேலி பகுதிகளைச் சேர்ந்த மாணவிகள் வந்ததாகவும் தெரிவித்தார். மத்திய, மாநில அரசுகளுக்கு தனது குடும்பத்தின் சார்பாக நன்றியை மாணவி கீர்த்தனா தெரிவித்துக்கொண்டார்.

அரியலூர் மாவட்டத்தில் 2 நகராட்சிகள் மற்றும் 2 பேரூராட்சிகளில் வெற்றி பெற்ற 69 கவுன்சிலர்கள் இன்று பதவியேற்றுக்கொண்டனர்.
அரியலூர்:
அரியலூர் மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பெரும்பாலான வார்டு களில் தி.மு.க. வெற்றி பெற்றுள்ளது.
அரியலூர் மாவட்டத்தில் அரியலூர், ஜெயங்கொண்டம் ஆகிய 2 நகராட்சிகளும், வரதராஜன்பேட்டை, உடையார்பாளையம் ஆகிய 2 பேரூராட்சிகளும் உள்ளன. இதில் அனைத்தையும் தி.மு.க. கைப்பற்றி உள்ளது.
அரியலூர் நகராட்சியில் மொத்தமுள்ள 18 வார்டுகளில் தி.மு.க. 7, அ.தி.மு.க. 7, சுயேட்சைகள் 4 வார்டுகளிலும் வெற்றி பெற்றுள்ளன. இதில் சுயேட்சை கவுன்சிலர்கள் 3 பேர் அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கரை சந்தித்து தங்களது ஆதரவை தி.மு.க. அளிப்பதாக தெரிவித்துள்ளனர்.
இதேபோல் ஜெயங்கொண்டம் நகராட்சியில் மொத்தமுள்ள 21 வார்டுகளில் தி.மு.க. 10, பா.ம.க. 4, அ.தி.மு.க. 4, விடுதலை சிறுத்தைகள் 2, சுயேட்சை 1 வார்டிலும் வெற்றி பெற்றுள்ளன.
வரதராஜன்பேட்டை பேரூராட்சியில் மொத்தமுள்ள 15 வார்டுகளில் தி.மு.க. 7, சுயேட்சைகள் 8 வார்டுகளிலும், உடையார்பாளையம் பேரூராட்சியில் உள்ள 15 வார்டுகளில் தி.மு.க. 7, காங்கிரஸ் 1, விடுதலை சிறுத்தைகள் கட்சி 1, அ.தி.மு.க. 1, பா.ம.க. 1, பா.ஜ.க. 1, சுயேட்சைகள் 3 வார்டுகளிலும் வெற்றி பெற்றுள்ளன.
மாவட்டம் முழுவதும் வெற்றி பெற்ற 69 வார்டு கவுன்சிலர்களும் இன்று அந்தந்த நகராட்சி, பேரூராட்சியில் நடைபெற்ற விழாவில் பதவியேற்றுக்கொண்டனர்.

அரியலூர் அருகே லாரி மோதி 20 பேர் படுகாயம் அடைந்தனர்.
அரியலூர்:
அரியலூர் பேருந்து நிலையத்தில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு கோட்டியால் நோக்கி அரசுப் பேருந்து ஒன்று புறப்பட்டுச் சென்றது. பேருந்தைஅணிக்குறிச்சியைச் சேர்ந்த கொளசியப்பன்வயது50 என்பவர் ஓட்டினார்.
கா.கைகாட்டி அருகே சென்ற போது, எதிரே முனியங்குறிச்சியில் இருந்து சுண்ணாம்புக் கல் ஏற்றிக் கொண்டு அரியலூர் நோக்கி வந்த லாரி பேருந்து மீது மோதியது.
இந்த விபத்தில் பேருந்து ஓட்டுநர் கொளஞ்சியப்பன், பேருந்து நடத்துநர் குமார் 57, பயணிகள் ராகவன் 18, அருண்குமார் 21, பார்த்தசாரதி 7, பாத்திமா மேரி 47, அஞ்சலாமேரி(50), அஞ்சம்மாள்(55), வன ரோஜா(32), சுவேதா 18 , தங்கமணி 45 , சுஜாதா 35 , புவனேஸ்வரி 41 , மீனாட்சி 50, கலைச் செல்வி 43 உள்ளிட்ட 20 பேர் படுகாயம் அடைந்தனர்.
இது குறித்து தகவல் அறிந்ததும் கயர்லாபாத் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று படுகாயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக அரியலூர் அரசு மருத்து வமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது குறித்து கயர்லாபாத் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

அரியலூரில் ரூ.1லட்சத்து 85 ஆயிரம் மதிப்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.
அரியலூர்:
அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகம் சார்பில் 25 மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.1 லட்சத்து 85 ஆயிரம் மதிப்பீட்டில் நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியில், கலெக்டர் ரமண சரஸ்வதி கலந்து கொண்டு, செவித்திறன் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள் 5 பேருக்கு ரூ.62,500 மதிப்பில் திறன் பேசியும், 10 மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.90,500 மதிப்பில் மூன்று சக்கர சைக்கிள்களும்,
2 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.18,950 மதிப்பில் சிறப்பு சக்கர நாற்காலிகளும், ஒரு மாற்றுத் திறனாளிக்கு ரூ.6,450 மதிப்பில் சக்கர நாற்காலியும், 3 மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.1,620 மதிப்பில் ஊன்று கோல்களும், 4 மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.5,176 மதிப்பில் பிரெய்லி வாட்ச் களும் என மொத்தம் 25 மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.1,85,196 மதிப்பில் விலையில்லா உதவி உபகரணங்களை வழங்கினார்.
நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் இரா.ஜெய்னுலாப்தீன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சீனிவாசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
அரியலூர்:
அரியலூர் பள்ளத்தெருவை சேர்ந்தவர் சீனிவாசன் வயது23. இவர், கடந்த 2018ம் ஆண்டு, அதே பகுதி அம்பேத்கர் நகரைச் சேர்ந்த 14 வயது சிறுமியை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
இது குறித்து புகாரின் பேரில் அரியலூர் மகளிர் காவல் துறையினர், சீனிவாசனை போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்த வழக்கு விசாரணை அரியலூர் மகளிர் நீதி மன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் நேற்று விசாரணை முடிந்து தீர்ப்பளிக்கப்பட்டது.
வழக்கை விசாரித்த நீதிபதி ஆனந்தன், குற்றம் சாட்டப் பட்ட சீனிவாசனுக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.