என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    FILE PHOTO
    X
    FILE PHOTO

    அரியலூர் மாவட்டத்தில் புதிய கவுன்சிலர்கள் பதவியேற்பு

    அரியலூர் மாவட்டத்தில் 2 நகராட்சிகள் மற்றும் 2 பேரூராட்சிகளில் வெற்றி பெற்ற 69 கவுன்சிலர்கள் இன்று பதவியேற்றுக்கொண்டனர்.
    அரியலூர்:

    அரியலூர் மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பெரும்பாலான வார்டு களில் தி.மு.க. வெற்றி பெற்றுள்ளது.

    அரியலூர் மாவட்டத்தில் அரியலூர், ஜெயங்கொண்டம் ஆகிய 2 நகராட்சிகளும், வரதராஜன்பேட்டை, உடையார்பாளையம் ஆகிய 2 பேரூராட்சிகளும் உள்ளன. இதில் அனைத்தையும் தி.மு.க. கைப்பற்றி உள்ளது.

    அரியலூர் நகராட்சியில் மொத்தமுள்ள 18 வார்டுகளில் தி.மு.க. 7, அ.தி.மு.க. 7, சுயேட்சைகள் 4 வார்டுகளிலும் வெற்றி பெற்றுள்ளன. இதில் சுயேட்சை கவுன்சிலர்கள் 3 பேர் அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கரை சந்தித்து தங்களது ஆதரவை தி.மு.க. அளிப்பதாக  தெரிவித்துள்ளனர்.

    இதேபோல் ஜெயங்கொண்டம் நகராட்சியில் மொத்தமுள்ள 21 வார்டுகளில் தி.மு.க. 10, பா.ம.க. 4, அ.தி.மு.க. 4, விடுதலை சிறுத்தைகள் 2, சுயேட்சை 1 வார்டிலும் வெற்றி பெற்றுள்ளன.

    வரதராஜன்பேட்டை பேரூராட்சியில் மொத்தமுள்ள 15 வார்டுகளில் தி.மு.க. 7, சுயேட்சைகள் 8 வார்டுகளிலும், உடையார்பாளையம் பேரூராட்சியில் உள்ள 15 வார்டுகளில் தி.மு.க. 7, காங்கிரஸ் 1, விடுதலை சிறுத்தைகள் கட்சி 1, அ.தி.மு.க. 1, பா.ம.க. 1, பா.ஜ.க. 1, சுயேட்சைகள் 3 வார்டுகளிலும் வெற்றி பெற்றுள்ளன.

    மாவட்டம் முழுவதும் வெற்றி பெற்ற 69 வார்டு கவுன்சிலர்களும் இன்று அந்தந்த நகராட்சி, பேரூராட்சியில் நடைபெற்ற விழாவில் பதவியேற்றுக்கொண்டனர்.
    Next Story
    ×