என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஜெயங்கொண்டம் விசாலாட்சி நகரைச் சேர்ந்த உக்ரைன் நாட்டிலிருந்து திரும்பி வந்த கீர்த்தனாவை பெற்றோர்கள் ஆரத்தி எடு
    X
    ஜெயங்கொண்டம் விசாலாட்சி நகரைச் சேர்ந்த உக்ரைன் நாட்டிலிருந்து திரும்பி வந்த கீர்த்தனாவை பெற்றோர்கள் ஆரத்தி எடு

    உக்ரைனில் தவித்த மருத்துவ மாணவி ஊர் திரும்பினார்

    உக்ரைன் நாட்டில் தவித்து வந்த ஜெயங்கொண்டத்தை சேர்ந்த மருத்துவ மாணவி பத்திரமாக சொந்த ஊர் திரும்பினார்.
    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் விசாலாட்சி நகரை சேர்ந்தவர் செல்வம்&ஜெகஸ்வரி தம்பதியின் மகள் கீர்த்தனா.

    இவர் கடந்த ஆண்டு டிசம்பர் 13-ந்தேதி உக்ரைன் நாட்டில் உள்ள ரூத்ருர் நேஷனல் யூனிவர்சிட்டியில் மருத்துவ படிப்பிற்காக சென்றார்.

    இந்நிலையில் கடந்த சில நாட்களாக ரஷ்யா-உக்ரைன் போர் தீவிரமாக நடைபெற்று வருவதையடுத்து மாணவ, மாணவிகள் இந்தியா திரும்பி வருகின்றனர். இதற்கிடையே உக்ரைனுக்கு சென்ற தனது மகள் பத்திரமாக திரும்ப வரவேண்டும் என்று கீர்த்தனாவுடன் தொடர்பில் இருந்த பெற்றோர்கள் காத்திருந்தனர்.

    மகளுக்காக காத்திருந்த செல்வத்தின் குடும்பத்தினருக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில் கீர்த்தனா நேற்று காலை பத்திரமாக திரும்பினார். மத்திய, மாநில  அரசுகள் முயற்சியால் இந்தியா முழுவதும் 117 மாணவ, மாணவிகள் மற்றும் தமிழ்நாட்டில் 21 மாணவ, மாணவிகள் அரசு செலவில் திரும்பினர்.

    இதில் அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் கீர்த்தனாவுக்கு அவருக்கு ஆரத்தி எடுத்து கட்டித்தழுவி பெற்றோர்கள் வரவேற்று நெகிழ்ச்சி அடைந்தனர்.

    பின்னர் மாணவி கீர்த்தனா கூறுகையில், நாங்கள் இருந்த பகுதியில் சுமார் 150&க்கும் மேற்பட்ட தமிழ் மாணவர்கள் பயின்று வந்ததாகவும் அங்கு போர் பதற்றம் தெரியவில்லை எனவும் தெரிவித்தார்.

    நேற்று முன்தினம் புதாபஸ்ட் விமான நிலையத்தில் இருந்து டெல்லி வந்து அங்கிருந்து சென்னை வந்து காலை வீடு திரும்பியுள்ளேன் என கூறினார்.

    மேலும் தன்னுடன் தென்காசி, திருநெல்வேலி பகுதிகளைச் சேர்ந்த மாணவிகள் வந்ததாகவும் தெரிவித்தார். மத்திய, மாநில அரசுகளுக்கு தனது குடும்பத்தின் சார்பாக நன்றியை மாணவி கீர்த்தனா தெரிவித்துக்கொண்டார்.
    Next Story
    ×