என் மலர்
உள்ளூர் செய்திகள்

FILEPHOTO
சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபருக்கு 7 ஆண்டு சிறை
சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
அரியலூர்:
அரியலூர் பள்ளத்தெருவை சேர்ந்தவர் சீனிவாசன் வயது23. இவர், கடந்த 2018ம் ஆண்டு, அதே பகுதி அம்பேத்கர் நகரைச் சேர்ந்த 14 வயது சிறுமியை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
இது குறித்து புகாரின் பேரில் அரியலூர் மகளிர் காவல் துறையினர், சீனிவாசனை போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்த வழக்கு விசாரணை அரியலூர் மகளிர் நீதி மன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் நேற்று விசாரணை முடிந்து தீர்ப்பளிக்கப்பட்டது.
வழக்கை விசாரித்த நீதிபதி ஆனந்தன், குற்றம் சாட்டப் பட்ட சீனிவாசனுக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.
Next Story






