என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    FILE PHOTO
    X
    FILE PHOTO

    அரியலூரில் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கல்

    அரியலூரில் ரூ.1லட்சத்து 85 ஆயிரம் மதிப்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.
    அரியலூர்:

    அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகம்  சார்பில் 25 மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.1 லட்சத்து 85 ஆயிரம் மதிப்பீட்டில் நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

    நிகழ்ச்சியில், கலெக்டர் ரமண சரஸ்வதி கலந்து கொண்டு, செவித்திறன் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள் 5 பேருக்கு ரூ.62,500 மதிப்பில் திறன் பேசியும், 10 மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.90,500 மதிப்பில் மூன்று சக்கர சைக்கிள்களும்,

    2 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.18,950 மதிப்பில் சிறப்பு சக்கர நாற்காலிகளும், ஒரு மாற்றுத் திறனாளிக்கு ரூ.6,450 மதிப்பில் சக்கர நாற்காலியும், 3 மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.1,620 மதிப்பில் ஊன்று கோல்களும், 4 மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.5,176  மதிப்பில் பிரெய்லி வாட்ச் களும் என மொத்தம் 25 மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.1,85,196 மதிப்பில் விலையில்லா உதவி உபகரணங்களை வழங்கினார்.

    நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் இரா.ஜெய்னுலாப்தீன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சீனிவாசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×