என் மலர்
அரியலூர்
பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த கோரி அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அரியலூர்:
தமிழகத்தின் நிதி அமைச்சர் சட்டமன்றத்தில் தி.மு.க. தேர்தல் வாக்குறுதிக்கு மாறாக பழைய பென்சன் திட்டத்தை அமல் படுத்துவதற்கான வாய்ப்பே இல்லை என அறிவித்ததை கண்டித்தும், தமிழக முதலமைச்சர் நடப்பு சட்டமன்ற கூட்டத் தொடரிலேயே அனைத்து அரசு ஊழியர்களுக்கு பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்தி அரசாணை வெளியிட வேண்டும் என வலியுறுத்தியும்.
சத்துணவு ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க கோரியும் தேர்தல் காலத்தில் முதலமைச்சர் கொடுத்த வாக்குறுதியின் படி கோரிக்கையை வலியுறுத்தி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஆர்ப்பாட்டத்திற்கு அரசு ஊழியர் சங்க வட்ட தலைவர் குமணன் தலைமை தாங்கினார். முன்னதாக கருவூலத்துறை அலுவலர் சங்கத்தின் மாவட்ட நிர்வாகி சிவசுப்பிரமணியம் வரவேற்றுப் பேசினார். வருவாய்த்துறை அலுவலர் சங்க வட்ட செயலாளர் ராஜேஷ், மாவட்ட நிர்வாகி சரவணன், கிராம உதவியாளர் சங்க செயலாளர் பஞ்சநாதன், ஆகியோர் முன்னிலை வகித்து பேசினார்.
ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் வேல்முருகன் கண்டன உரையாற்றினார், முடிவில் வருவாய்த்துறை அலுவலர் சங்க மாவட்ட இணை செயலாளர் சரவணன் நன்றி கூறினார்.
இதே போல் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு முன்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்க மாவட்ட பொருளாளர் முருகானந்தம் தலைமை தாங்கினார். சத்துணவு ஊழியர் சங்க ஒன்றிய தலைவர் சாந்தி, மாவட்ட இணை செயலாளர் சர்மிளா, மாவட்ட பொருளாளர் ஆனந்தவல்லி ஆகியோர் முன்னிலை வகித்து பேசினர்.
ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்க மாவட்ட இணைச்செயலாளர் சிபிரஜா கண்டன உரையாற்றினார். முடிவில் சாலை பணியாளர் சங்க வட்டத் தலைவர் தர்மலிங்கம் நன்றி கூறினார்.
ஆர்ப்பாட்டத்தில் வருவாய்துறை அலுவலர்கள், சத்துணவு ஊழியர்கள், கருவூலத் துறை ஊழியர்கள், சாலைப்பணியாளர்கள், ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், கிராம உதவியாளர்கள் உள்ளிட்ட பல்வேறு துறையைச் சார்ந்த அலுவலர்களும் கலந்து கொண்டனர்
முன்விரோதத்தில் வாலிபரை தாக்கிய 4 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
அரியலூர் :
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே சிந்தாமணி கிராமம் காலனி தெருவைச் சேர்ந்த வீரமணி இவருக்கும், அதே கிராமத்தைச் சேர்ந்த வீரமுத்து மனைவி ராணி ஆகியோருக்கும் நிலத்தகராறு காரணமாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது.
இந்நிலையில் தங்களது நிலத்தில் உள்ள பனை மரத்தில் இருந்த பனை நுங்குவை யாரோ வெட்டி சென்றுவிட்டதாக வீரமணியின் தாயார் சத்தம் போட்டதாக கூறப்படுகிறது.
அப்போது அங்கிருந்த அன்புமணி அவரது தம்பி, தாயார் ராணி மற்றும் அணைக்குடம் கிராமத்தைச் சேர்ந்த திருமுருகன் ஆகியோர் இது எங்களுக்கு சொந்தமான மரம் உனக்கு இங்கு என்ன வேலை என்று கேட்டு தகாத வார்த்தைகளால் திட்டி உள்ளனர்.
இதனை பார்த்த வீரமனணி இப்படி திட்டுகிறீர்கள் என கேட்டதற்கு அனைவரும் சேர்ந்து அவரை தாக்கி மிரட்டல் விடுத்துள்ளனர். இதனையடுத்து காயமடைந்த வீரமணி ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் கொடுத்த புகாரின் பேரில் தா.பழூர் காவல் உதவி ஆய்வாளர் ராஜசேகர் வீரமணியை தாக்கிய 4 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
தூர்வாரும் பணிகள் விரைந்து முடிக்க வேண்டும் என்று கலெக்டர் உத்தரவிட்டார்.
அரியலூர்:
தமிழக அரசு நீர்வளத் துறையின் சார்பில் தூர்வாரும் பணிகள் திட்டத்தை அறிவித்துள்ளார். இதன்படி, அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே மருதையாறு வடிநிலக்கோட்டம், அரியலூர் மற்றும் ஆற்று பாதுகாப்புக்கோட்டம், திருச்சி கட்டுப்பாட்டில் உள்ள வரத்து வாய்க்கால்கள்,
பாசன வாய்க்கால்கள், உபரி நீர் வாய்க்கால்கள், ஓடை மற்றும் வடிகால்கள் தூர்வார 16 பணிகள் 48.62 கி.மீ. நீளத்திற்கு மேற்கொள்ள ரூ.100 லட்சத்திற்கு நிர்வாக ஒப்புதல் வழங்கப்பட்டு மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டு கல்லணைக்கு தண்ணீர் வரும் காலத்திற்குள் பணிகளை முடிக்க ஆணையிடப்பட்டுள்ளது.
இதன் ஒரு பகுதியாக தா.பழூர் பகுதியில் நீர்வளத்துறையின் சார்பில் பொன்னார் பிரதான வாய்காலின் கிளை வாய்க்கால் தூர்வாரும் பணி நடைபெற்று வருகிறது. அதேபோல் தா.பழூர், வாழைக்குறிச்சி, இடங்கண்ணி, பாலசுந்தரம், அண்ணகாரன் பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் இயந்திரங்கள் மூலம் தூர்வாரும் பணி நடைபெற்று வருகிறது.
இதனை மாவட்ட கலெக்டர் ரமண சரஸ்வதி நேரில் சென்று பார்வையிட்டார். இப்பணிகளை விரைவாகவும், தரமாகவும் முடிப்பதுடன், கரைகளின் மேல் போடப்படும் மண் மீண்டும் கீழே விழாதவண்ணம் கரைகள் பலமாக இருக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.
செல்லியம்மன் கோவில் தேரோட்டம் நாளை நடக்கிறது.
அரியலூர் :
அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள சிறுகடம்பூர் ஏரிக்கரையில் அமைந்துள்ளது பிரசித்திபெற்ற செல்லியம்மன் கோவில். இந்த கோவிலுக்கு ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் தேர்த்திருவிழா நடைபெறுவது வழக்கம்.
கடந்த 2 ஆண்டுகளாக தேர் திருவிழா நடைபெறாத சூழ்நிலையில் கொரோனா தொற்று தடை நீக்கம் செய்யப்பட்டதால் தற்போது தேர் திருவிழா நடத்த கிராம மக்கள் முடிவு செய்தனர். இந்த பகுதியில் பிரசித்தி பெற்ற தேர் திருவிழா கடந்த 2 ஆம் தேதி அய்யனார் கோயில் கொடியேற்றத்துடன் தொடங்கியது.
அன்று முதல் அம்மன் வீதி உலாவு நடைபெற்றது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான 5 ஆம் நாள் படைத் தேரோட்டம் நடைபெற்றது. அப்போது கரகாட்டம் ஒயிலாட்டம் நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
தேர் திருவிழாவின் ஒன்பதாம் நாள் பெரும் தேரோட்டம் நாளை (புதன்கிழமை) நடக்கிறது. அதற்கான தேர் கட்டும் பணியினை கிராம மக்கள் மற்றும் இளைஞர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
தேர் திருவிழாவிற்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என்பதால் இரும்புலிக்குறிச்சி போலீசார் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்து உள்ளனர்.
ஜெயங்கொண்டத்தில் கள் விற்ற வழக்கில் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
அரியலூர்:
ஜெயங்கொண்டம் அருகே கல்லாத்தூர் கிராமத்தில் பனை மரத்தல் இருந்து கள் இறக்கி விற்பனை செய்வதாக போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் போலீஸ் சப்இன்ஸ்பெக்டர் கல்யாணராமன் தலைமையிலான போலீசார், அப்பகுதிக்கு நேரில் சென்று சோதனையிட்டனர்.
அப்போது அங்கிருந்த பனைமரத்திலிருந்து கள் இறக்கியவரை பிடித்து விசாரித்ததில் அவர் பதனீர் இறக்குவதாக கூறியுள்ளனர்.
உடனே போலீசார் அதனை பரிசோதித்த போது கள் தான் என்பதை உறுதி செய்தனர்.
இதைத்தொடர்ந்து பனை மரத்தில் இருந்து கள்ளை இறங்கி விற்பனை செய்த விருதுநகர்மாவட்டம் ராஜபாளையம் மேலவரகுணபுரம் பகுதி தெற்கு தெருவை சேர்ந்த முத்துராமன் (37) என்பவரை கைது செய்தனர்.
இதே போல் கூவத்தாரில் ஆண்டிமடம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நடேசன் தலைமையிலான போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
அப்போது விருதுநகர் மாவட்டம் தெற்குதெருவை சேர்ந்த செம்புலிங்கம் (62) என்பவரையும் கள் விற்ற வழக்கில் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

அரியலூர் மாவட்டத்தில் அரசின் அனைத்து திட்டங்களும் முழுமையாக மக்களை சென்றடைய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் உறுதியளித்தார்.
அரியலூர்:
அரியலூர் அலுவலக கூட்டரங்களில், நடைபெற்ற நிகழ்ச்சியில், மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்ட தமிழக அரசின் ஓர் ஆண்டு சாதனை மலரை கலெக்டர் ரமணசரஸ்வதி வெளியிட்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்று ஒராண்டு நிறைவடைந்துள்ளது. இந்த ஓராண்டு காலத்தில், அரியலூர் மாவட்டத்தில் அரசின் பல்வேறு துறைகளின் சார்பில் பல எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தியுள்ளார். அரசின் அனைத்து திட்டங்களும் மக்களை முழுமையாக சென்றடைய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஆட்சி பொறுப்பினை ஏற்ற 100 நாட்களுக்குள் உங்கள் தொகுதியில் முதல்வர் திட்டத்தின் கீழ் பெறப்பட்டட 7,937 மனுக்களில் 4,349 மனுக்கள் ஏற்கப்பட்டு ரூ.2.30 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. இதில் சிறப்பாக பணியாற்றியமைக்காக அரியலூர் மாவட்டத்திற்கு சிறப்பு பரிசு வழங்கப்பட்டது.
இதுவரையில் இல்லாத அளவாக அதிகபட்சமாக 2,289 விவசாயிகளுக்கு ரூ.33.33 கோடி மதிப்பீட்டில் புதிய மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளது. வேளாண் மக்கள் மற்றும் நலிந்த பிரிவினர் பயன் பெறும் வகையில் 20,838 நபர்களுக்கு ரூ.734 கோடி மதிப்பிலான நகைக்கடன் தள்ளுபடி மற்றும் 2,672 மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ரூ.14.80 கோடி கடன்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
மேலும் கொரோனா நோய் தடுப்பு பணிகளில் தொடர் மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தி அனைத்து பிரிவு மக்களுக்கும் முதல் தவணை தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது. அதவும் குறுகிய காலத்தில் 100 சதவீதம் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
2 பெற்றோர்களையும் இழந்த ஆதரவற்ற 3 குழற்தைகளுக்கு ரூ.5 லட்சம் வைப்பீடும், மாதம் ரூ.3000 பராமரிப்புச் செலவும் வழங்கப்பட்டுள்ளது. ஒரு பெற்றோரை இழந்த 110 குழந்தைகளுக்கு ரூ.3 லட்சம் வைப்பீடு வழங்கப்பட்டுள்ளது. இது மட்டுமல்லாமல் கொரோனாவினால் உயிரிழந்த 521 நபர்களின் குடும்பத்தாருக்கு தலா ரூ.50,000 உதவி தொகை வழங்கப்பட்டுள்ளது.
இல்லம் தேடிக் கல்வித்திட்டத்தின் கீழ் 64,859 மாணவ மாணவிகளுக்கு 2,648 பெண் தன்னார்வலர்கள் மூலம் கல்வி கற்பிக்கப்பட்டு வருகிறது. இப்படி எண்ணற்ற திட்டங்கள் மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.

திருமானூரில் அனைத்து ஏரிகளில் உள்ள ஆக்ரமிப்புக்களை அகற்றி தூர்வாரப்படவேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் வலியுறுத்தியுள்ளனர்.
அரியலூர்:
அரியலூர் மாவட்டம் திருமானூரில் ஒன்றியத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 11வது ஒன்றிய மாநாடு ஒன்றிய செயலாளர் ஆறுமுகம் தலைமையில் நடைபெற்றது.
மாநில நிர்வாகக்குழு உறுப்பினர் த.இந்திரஜித் சிறப்புரை ஆற்றினார்.
கூட்டத்தில் திருமானூரில் கொள்ளிட ஆற்றில் கதவுகளுடன் தடுப்பணை கட்டவேண்டும், திருமானூரில் நவீன அரிசிஆலை அமைக்கவேண்டும்,
திருமானூரில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து ஏரிகள் ஆக்ரமிப்புக்களை அகற்றி தூர்வாரப்படவேண்டும்,
திருமானூரில் தீயணைப்பு நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டது.

கறிகோழி குஞ்சுகள் வளர்ப்பில் ஊதியத்தை உயர்த்தி தரகோரி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அரியலூர்:
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் அதிகப்படியாக தனியார் நிறுவனங்கள் மூலம் கறி கோழி குஞ்சுகளை விவசாயிகளிடம் வளர்ப்பதற்காக வழங்கி அதற்கு 1கிலோ கறிகோழிக்கு ரூ 6.50 பைசா வழங்கி வருகின்றனர்.
ஒரு கோழி 40 நாட்களில் 1 ½ முதல் 2 கிலோ வரை எடை கொண்டதாக வளர்ச்சி பெறும். இதற்கு ஆகும்செலவு தற்போது உள்ள விலைவாசி உயர்வு காரணமாகவும், ஆட்கள் சம்பளம், கரண்டு, தண்ணீர் செலவு இருப்பதால்
நஷ்டம் ஏற்ப்படுவதாகவும் 1கிலோ கோழி கறிக்கு 12 ரூபாய் வழங்க வேண்டும் என அரியலூர், கடலூர் மாவட்ட தமிழ்நாடு கறி கோழி பண்ணை விவசாயிகள் ஒருங்கிணைப்பு நல சங்கம் சார்பில்
ஜெயங்கொண்டம் பகுதியில் உள்ள 5 தனியார் நிறுவனங்களிடம் சுமார் 50 க்கும் மேற்பட்டோர் கோரிக்கை மனு அளித்தனர். மேலும் இனி கோழிக் குஞ்சுகளை வளர்க்க மாட்டோம் என தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து சம்பந்தப்பட்ட தனியார் நிறுவன மேலாளரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. மனுவை பெற்றுக்கொண்டு தனியார் நிறுவன ஒப்பந்ததாரர்களுக்கு தகவல் தெரிவிப்பதாக தெரிவித்தனர்.

ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் காதல் ஜோடிகள் பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்தனர்.
அரியலூர்:
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் பட்டக்கல் தெரு அம்பேத்கர் நகர் மேலக்காவேரியைச் சேர்ந்தவர் மாதவன் (27) பெயிண்டராக வேலை பார்த்து வருகிறார்.
இவர் அதே பகுதியைச் சேர்ந்த சிவலிங்கம் என்பவரது மகள் ஐஸ்வர்யா வயது 23 என்பவரை கடந்த மூன்று வருடங்களாக காதலித்து வந்துள்ளார்.
இந்நிலையில் இவர்களது திருமணத்திற்கு பெண் வீட்டார் சம்மதம் தெரிவிக்கவில்லை என கூறப்படுகிறது.
இதை தொடர்ந்து இரண்டு நாட்களுக்கு முன்பு மாதவனும் ஐஸ்வர்யாவும் திருமணம் செய்ய முடிவெடுத்து அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள தா.பழூர் மாரியம்மன் கோயிலில் வைத்து இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.
பெற்றோர்களுக்கு தெரிந்தால் பிரச்சனை செய்து பிரித்து விடுவார்களோ? என எண்ணிய புதுமண தம்பதிகள் இருவரும் ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கு பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்தனர்.
இதுகுறித்து போலீஸ் இன்ஸ்பெக்டர் சுமதி விசாரணை செய்து பெண்ணின் பெற்றோரிடம் திருமணம் சம்பந்தமாக கூறியுள்ளார்.
இந்நிலையில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தனர். இருவரும் மேஜர் என்பதால் பாலக்கரை போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்து அங்கு காதல் ஜோடியை அனுப்பி வைத்தனர்.

16 வயது மாணவியுடன் கேரளாவுக்கு சுற்றுலா சென்ற வாலிபர் போலீசாரின் விசாரணைக்கு பயந்து காசுகளை விழுங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
செந்துறை:
அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள நக்கம்பாடி கிராமத்தை சேர்ந்தவர் என்ஜினீயர் விக்னேஷ் (வயது 22). தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கும் வாரியங்கால் கிராமத்தை சேர்ந்த அத்தை மகள் ஒருவருக்கும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.
இதற்கிடையே விக்னேஷ் அதே பகுதியை சேர்ந்த கலா (16) என்ற பிளஸ்-1 படிக்கும் மாணவியை காதலித்து வந்துள்ளார். திருமணத்திற்கு பிறகும் விக்னேஷ், அந்த மாணவியுடன் தனது காதலை தொடர்ந்து வருகிறார். இதனை அவரது உறவினர்கள் கண்டித்தும் விக்னேஷ் தன்னை திருத்திக்கொள்ளவில்லை. இதனால் அடிக்கடி குடும்பத்தில் பிரச்சினை ஏற்பட்டு வந்தது.
இந்தநிலையில் மாணவி கலாவை, விக்னேஷ் தனது மோட்டார் சைக்கிளில் அழைத்துக்கொண்டு கேரளாவுக்கு சுற்றுலா சென்றுள்ளார். வழியில் தேனி மாவட்டம் குமுளி அருகே சோதனைச்சாவடியில் பணியில் இருந்த கேரள மாநில போலீசார் விக்னேசை தடுத்து நிறுத்தி விசாரித்து உள்ளனர்.
அப்போது, தான் பிடிபட்டு விடுவோம் என்ற பயத்தில், விக்னேஷ் தன்னிடம் இருந்த சில்லறை காசுகளை திடீரென்று வாயில் போட்டு விழுங்கினர். இதனை சற்றும் எதிர்பாராத போலீசார் உடனடியாக அவரை மீட்டு குமுளி போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
பின்னர் அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், பெற்றோர் தனது விருப்பத்திற்கு மாறாக தனக்கு அத்தை மகளை திருமணம் செய்து வைத்து விட்டதாகவும், ஆனால் மாணவியும், காதலியுமான கலாவையே தான் திருமணம் செய்து கொள்ள விரும்புவதாகவும் அவர் கூறியுள்ளார்.
இதையடுத்து குமுளி போலீசார், மாணவி கலா மற்றும் விக்னேஷ் ஆகியோரை செந்துறை போலீசாரை வரவழைத்து அவர்களிடம் ஒப்படைத்தனர். அதனைத் தொடர்ந்து செந்துறை போலீசார் வாலிபரை தேனி மாவட்டத்தில் இருந்து கொண்டு வந்து அரியலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
அங்கே கொடுக்கப்பட்ட சிகிச்சையில் விக்னேஷ் விழுங்கியதில் 2 காசுகள் மட்டுமே வெளியே வந்தது. மேலும் 8 காசுகள் வெளியே வராத நிலையில் வாலிபரை அவர்களது பெற்றோர்களிடம் ஒப்படைத்தனர். அதனைத் தொடர்ந்து பெற்றோர்கள் அந்த வாலிபரை அரியலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் வைத்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இடிக்கப்பட்ட வீடுகளில் வசித்த மக்களுக்கு மாற்று இடம் வழங்கக் கோரி அரியலூர் ஆட்சியர் அலுவலகத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் பாதிக்கப்பட்ட மக்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அரியலூர்:
நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுமாறு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதையடுத்து, அரியலூர் மாவட்டத்தில் உள்ள நீர் நிலைகளில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள வீடுகள் இடிக்கும் பணிகள் அண்மைக் காலமாக நடைபெற்று வருகிறது.
இதில் அரியலூர் மேலத் தெரு, குறிஞ்சி ஏரி, எருத்துக்காரன்பட்டி பிராதனச் சாலை(திட்டக்குடி சாலை), ஜயங்கொண்டம் வட்டத்தில் முத்துசேர்வமடம், பிள்ளைப்பாளையம், கங்கவடங்கநல்லூர், செந்துறை வட்டத்தில் நமங்குணம் ஆகிய பகுதிகளில் உள்ள நீர்நிலைகளில் ஆக்கமிக்கப்பட்டுள்ள வீடுகள் இடிக்கப்பட்டுள்ளது.
வீடுகளை இழந்த மக்களுக்கு உடனடியாக வீட்டுமனைப் பட்ட வழங்கிட வேண்டும். அதே போல் மாற்று இடம் வழங்காமல் வீடுகளை இடிக்கக் கூடாது என ஊர் மக்களும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரும் சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு மனு அளித்தும், போராட்டத்தில் ஈடுபட்டும் வருகின்றனர்.
மேலும் மே 6ம் தேதி ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட போவதாகவும் அறிவித்திருந்தனர்.
அதன்படி நேற்று வெள்ளிக்கிழமை வாலாஜ நகரம் அருகேயுள்ள ராஜீவ்காந்தி நகர் அருகே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழுத் தலைவர் எஸ்.வாலண்டினா,
மாவட்டச் செயலர் எம்.இளங்கோவன் ஆகியோர் தலைமையில் திரண்ட கட்சி நிர்வாகிகள் மற்றும் பாதிக்கப்பட்ட மக்கள், அங்கிருந்து பிரதானச் சாலையில் ஊர்வலமாக வந்து ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அங்கு வந்த காவல் துறையினர் அவர்களிடம் பேசி, 10 பேர் மட்டுமே ஆட்சியரை சந்தித்து மனு அளிக்க அனுமதி அளித்தனர். இதனையடுத்து பாதிக்கப்பட்ட மக்களிடமிருந்து பெறப்பட்ட 641 மனுக்களை, ஆட்சியர் பெ.ரமணசரஸ்வதியிடம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் அளித்தனர்.

ஜெயங்கொண்டம் த.சோழன்குறிச்சி ஆரம்ப சுகாதார நிலையத்தில் செவிலியர்களுக்கு தீ தடுப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடை பெற்றது.
அரியலூர்:
அரியலூர் மாவட்டம், ெஜயங்கொண்டம் அருகேயுள்ள த.சோழன்குறிச்சி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், பணி புரியும் மருத்துவர்கள்,
செவிலியர்கள் மற்றும் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கு, தீயணைப்பு துறை சார்பில் தீ தடுப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
ஜயங்கொண்டம் தீயணைப்பு நிலைய அலுவலர் மோகன்ராஜ் தலைமையில் வீரர்கள் கலந்து கொண்டு, தீ தடுப்பு விழிப்புணர்வு மற்றும் ஒத்திகை பயிற்சி அளித்தனர்.
கட்டட இடிப்பாடுகளில் சிக்கியவர்களை எவ்வாறு மீட்பது, விபத்தில் காயம் ஏற்பட்டு மயக்க நிலையில் இருப்பவரை எப்படி தூக்குவது,
காப்பாற்றுவது, தீப்பற்றினால் அதனை எவ்வாறு அனைப்பது உள்ளிட்டவைகள் பற்றி செயல்விளக்கத்துடன் தீயணைப்பு வீரர்கள் செய்து காண்பித்தனர்.