என் மலர்tooltip icon

    அரியலூர்

    எல்.ஐ.சி. முகவர் வங்கி கணக்கிலிருந்து ரூ. 10 லட்சத்தை மோசடி செய்தவரை போலீசார் கைது செய்தனர்.
    அரியலூர்:


    அரியலூரை சேர்ந்தவர் கண்ணுப்பிள்ளை (வயது 63). எல்.ஐ.சி.முகவரான இவர், தனது செல்போனுக்கு வந்த அழைப்பை நம்பி ரூ.10 லட்சத்தை இழந்துவிட்டதாக அரியலூர் சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் செங்குட்டுவன் வழக்குப்பதிவு செய்தார். இச்சம்பவம் குறித்து அரியலூர் சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

    விசாரணையில் கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டத்தில் உள்ள முல்பாஹால் என்ற கிராமத்தை சேர்ந்த பூபாலன் (25) என்பவர், தான் பெங்களூரில் உள்ள நிறுவனத்தில் வேலை செய்வதாகவும், அந்த நிறுவனத்தில் வேலை செய்பவர்களுக்கு மொத்தமாக காப்பீடு பெற்றுத்தர கமிஷன் வேண்டும் என்றும், 

    பாலிசிதாரர் செல்போன் எண்ணை பெற்று, அதன்மூலம் கண்ணுப்பிள்ளையை செல்போனில் தொடர்பு கொண்டு பேசி, அவரது வங்கிக் கணக்கில் இருந்து சிறிது சிறிதாக ரூ.10 லட்சம் வரை எடுத்து மோசடி செய்தது தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர். 


    இதனை தொடர்ந்து பூபாலனை சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர். அப்போது அவரிடமிருந்து ரூ.1 லட்சம் ரொக்கம், ரூ. 1 லட்சத்து 75 ஆயிரம் மதிப்புள்ள நகைகள், இணைய மோசடிக்கு பயன்படுத்திய ஏ.டி.எம். கார்டு, வங்கி கணக்கு புத்தகம், செக் புத்தகம், செல்போன்கள் மற்றும் ஒரு கம்ப்யூட்டர் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

    விபத்தில்லா மாவட்டமாக அரியலூரை மாற்றுவதே காவலர்களின் இலக்கு என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்
    அரியலூர்:

    விபத்தில்லா மாவட்டமாக அரியலூரை மாற்றுவதே காவலர்களின் இலக்கு  என்று  மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கே.பெரோஸ்கான் அப்துல்லா தெரிவித்துள்ளார்.  இது குறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:

    அரியலூர் மாவட்டத்தில் காவல் துறையினர் சார்பில் சாலை பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து ஒழுங்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்படி சிமென்ட் ஆலை கனரக வாகனங்கள் மற்றும் மற்ற கனரக வாகனங்களும் அனுமதிக்கப்பட்ட நேரத்தில் மட்டுமே நகர்ப்புறம் ஊரக சாலைகளில் இயக்க அனுமதிக்கப்படுகின்றன.

    சாலை பாதுகாப்பு விதிகளை பின்பற்றாத, வாகனங்கள் மீது சட்டப்படி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில் கடந்த ஜனவரி முதல் ஏப்ரல் மாதம் வரையிலான 4 மாதங்களில் மாவட்டத்தில் மொத்தம் 210 சாலை விபத்துகள் நிகழ்ந்துள்ளன.

    அதில், கனரக வாகனங்களால் ஏற்பட்ட 29 விபத்துகளில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். இரு சக்கர வாகனங்களால் ஏற்பட்ட 112 விபத்துகளில் 36 பேர் உயிரிழந்துள்ளனர். பேருந்து, கார் மற்றும் இதர வாகனங்களால் ஏற்பட்ட 69 விபத்துகளில் 22 பேர் உயிரிழந்துள்ளனர்.

    விபத்து ஏற்படுத்தியவர் மீதும், வாகனத்தின் மீதும் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டன. பெரும்பாலான விபத்துகள் அதிவேகம், அஜாக்கிரதை மற்றும் மது போதையில் பயணம் செய்வதால் நடைபெற்று உள்ளன.

    மாவட்டத்தில் இருசக்கர வாகன விபத்தில் தான் அதிக விபத்துகளும், உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளது. சிமென்ட் ஆலை கனரக வாகனங்களால் தான் அதிக விபத்துகள் ஏற்படுகின்றன என்ற பதிவுகள் சமூக வலைத்தளத்தில் பதிவிடப்படுகின்றன. 

    இது உண்மைக்கு புறம்பான செய்தியாகும். போக்குவரத்து விதிமுறைகளை மீறும் கனரக வாகனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அரியலூரை விபத்தில்லா மாவட்டமாக மாற்றும் கனவை இலக்காகக் கொண்டு முழுவீச்சில் காவல் துறையினர் செயல்பட்டு வருகின்றனர்.

    தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை பெற மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் தெரிவித்துள்ளார்.
    அரியலூர்:

    அரியலூர் மாவட்டத்திலுள்ள அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள், தங்களுக்கான தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை பெற வரும்  25-ந்  தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று கலெக்டர் பெ.ரமணசரஸ்வதி தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: மாதாந்திர பராமரிப்பு உதவித் தொகை ரூ.2,000 பெற்று வரும் அனைத்து மாற்றுத்திறனாளிகளும் தொடர்ந்து பெற்றிட ஏதுவாக மாற்றுத்திறனாளி களுக்கான தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை வழங்கப்படுகிறது.

    இதற்கு விண்ணப்பிக்க மருத்துவச் சான்றுடன் கூடிய தேசிய அடையாள அட்டை நகல், முகம் மட்டும் தெரியகூடிய புகைப்படம் 1 (பாஸ்போர்ட் சைஸ்) ஆதார் அட்டை நகல், குடும்ப அட்டை நகல், வாக்காளர் அடையாள அட்டை நகல் ஆகியவற்றுடன்  

    மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக வளாகத்தில் தரைத்தளம், அறை எண்: 17, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளை சார்ந்த எவரேனும் நேரில் வந்து விண்ணப்பித்து பயன்பெறலாம் என்று தெரிவித்துள்ளார்.
    தே.மு.தி.க.ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
    அரியலூர் :

    அரியலூர் செந்துறை சாலையிலுள்ள தே.மு.தி.க மாவட்ட அலுவலகத்தில் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அக்கட்சியின் மாவட்டச் செயலர் இராம.ஜெயவேல் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், 

    வரும் 25-ந் தேதி அரியலூர் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வருகை தரும் தே.மு.தி.க பொருளாளர் பிரேமலதா விஜயகாந்தை சிறப்பான வரவேற்பு அளிப்பது, மக்களவைத் தேர்தலில் தே.மு.தி.க வை மாபெரும் சக்தியாக உருவெடுக்க கட்சியினர் அர்ப்பணிப்போடு பணியாற்றுவது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    கூட்டத்துக்கு தலைமை செயற்குழு உறுப்பினர் ஆனந்தன் முன்னிலை வகித்தார். மாவட்ட தொழிற் சங்கச் செயலர் பாண்டியன், மாவட்ட தொண்டரணி துணைச் செயலர் ராமசந்திரன், மாவட்ட மாணவரணி துணைச் செயலர் சக்திவேல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    முன்னதாக ஒன்றியச் செயலர் மணிகண்டன் வரவேற்றார். முடிவில் கேப்டன் மன்ற ஒன்றியச் செயலர் பாலு கூறினார்.
    மண் வளத்தை பாதுகாக்க கோடை உழவு அவசியம் என்று கலெக்டர் தெரிவித்துள்ளார்.
    அரியலூர்:

    அரியலூர் கலெக்டர் பெ.ரமணசரஸ்வதி வெளியிட்ட செய்தி  குறிப்பில் தெரிவித்துள்ளதாவது,
    அரியலூர் மாவட்டம், முழுவதும் கோடை மழை பரவலாக பெய்து வருகிறது. விவசாயிகள் இம்மழையினை பயன்படுத்தி கோடை உழவு செய்தால் மண்ணின் மேற்பரப்பில் உள்ள கடினப்பகுதி உடைக்கப்பட்டு, மண்ணின் நீர் பிடிப்பு தன்மை அதிகரிக்கிறது. 

    மேலும் நிலத்தடி நீர்மட்டம் உயர ஏதுவாகிறது. கோடை உழவு செய்வதினால், மண்ணானது ஈரமும் மற்றும் காய்சலுமாக இருப்பதினால் மண்ணின் அமைப்பு மேம்படுத்தப்படுகிறது.

    களைக்கொல்லி மற்றும் பூச்சிக்கொல்லிகளின் எஞ்சிய நஞ்சு சிதைவுற்று மண்ணிற்கு பாதிப்பில்லாமல் பாதுகாக்கப்படுகிறது.

    கோடை மழை, வளி மண்டலத்திலுள்ள வளிமண்டல நைட்ரேட்டுடன் இணைந்து பெறப்படுவதினால் மண்ணின் வளம் மேம்படுத்தப்படுகிறது.

    பயிருக்கு தீங்கு செய்யக் கூடிய கூட்டுப் புழுக்கள் வெளிக்கொணரப்படும். அவற்றை கொக்கு, நாரை போன்ற பறவைகள் உண்டு அழிக்கின்றன. இத்தகைய பயன்தரக்கூடிய கோடை உழவினை அனைத்து விவசாயிகளும் தற்போது பெய்துள்ள மழையினை பயன்படுத்தி உழவு செய்யலாம்.

    இதற்காக வேளாண் பொறியியல் துறையின் மூலம் குறைந்த வாடகையில் உழவு செய்திட சம்பந்தப்பட்ட வேளாண் பொறியியல் துறையின் அலுவலர்களை தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என்று தெரிவித:துள்ளார்.

    அரியலூர் மாவட்டத்தில் வண்டல் மற்றும் சவுடு மண் எடுக்க விண்ணப்பம் செய்யலாம் என்று கலெக்டர் ரமண சரஸ்வதி தெரிவித்துள்ளார்.
    அரியலூர்:


    அரியலூர் மாவட்ட கலெக்டர் பெ.ரமணசரஸ்வதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: 

    அரியலூர் மாவட்டத்தில் நீர்வளத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள 92 ஏரிகள் (ஒருநீர்த்தேக்கம் உள்பட) மற்றும் ஊரக வளர்ச்சித்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள 454 குளம், ஏரிகளில் மட்டும் வண்டல் மண், சவுடு மண், கிராவல் மண் போன்ற கனிமங்களை, வேளாண் உபயோகம், சொந்த வீட்டு உபயோகம் மற்றும் மண்பாண்டம் தயாரித்தல் ஆகிய காரியங்களுக்காக இலவசமாக எடுத்துச் செல்ல அனுமதி வழங்கும் பொருட்டு, அரியலூர் மாவட்ட அரசிதழ்களில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

    எனவே, பொதுமக்கள், விவசாயிகள், மண்பாண்டம் தயாரிப்பாளர்கள் மற்றும் தமிழ்நாடு கூட்டுறவு சங்க சட்டத்தின் படி பதிவு செய்யப்பட்ட மண்பாண்டம் தயாரிக்கும் தொழிலாளர் கூட்டுறவு சங்கங்கள் , சம்மந்தப்பட்ட வட்டாட்சியர்களிடம் விண்ணப்பிக்கலாம்.

    மேற்படி விண்ணப்பங்கள் மீது சம்மந்தப்பட்ட வட்டாட்சியர்களால் உடன் விசாரணை மேற்கொண்டு வண்டல் மண் எடுத்துச் செல்ல உரிய அனுமதி வழங்கப்படும்.
    மேலும், அனுமதி கோரும் மனுதாரரின் வசிப்பிடம் அல்லது வேளாண் நிலமும், வெட்டி எடுக்கப்பட வேண்டிய இடமும் ஒரே வருவாய் கிராமத்தில் அல்லது அருகிலுள்ள வருவாய் கிராமத்தில் இருக்க வேண்டும்.

    விவசாய பணிக்கெனில், நஞ்சை நிலமாகயிருப்பின் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை ஒருஏக்கருக்கு 75 கன மீட்டர் அல்லது 25 டிராக்டர் லோடுகளும், புஞ்சை நிலமாகயிருப்பின் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒரு ஏக்கருக்கு 90 கன மீட்டர் அல்லது 30 டிராக்டர் லோடுகளும், சொந்த வீட்டு உபயோகத்துக்கு 30 கன மீட்டர் அல்லது 10 டிராக்டர் லோடுகளும், மண்பாண்டம் தயாரித்தலுக்கு 60 கனமீட்டர் அல்லது 20 டிராக்டர் லோடுகளும் இலவசமாக மண் எடுத்துச் செல்ல அனுமதி வழங்கப்படும்.

    மேலும், வேளாண் உபயோகத்துக்கு நிலத்திற்கான கணினி சிட்டா நகலும், வீட்டு உபயோகத்துக்கு வீட்டிற்கான நத்தம், கணினி சிட்டா நகலும், மண்பாணை தயாரிப்பு உபயோகத்துக்கு நலவாரிய அடையாள அட்டை நகலும் மற்றும் வசிப்பிட முகவரிக்கு ஆதாரமாக குடும்ப அட்டை நகல் அல்லது ஆதார் அட்டை நகலினை விண்ணப்பத்துடன் இணைத்து சமர்ப்பிக்க வேண்டும்.

    ஜெயங்கொண்டத்தில் ரூ.3 கோடிக்கும் மேல் டெபாசிட் தொகை பெற்ற தனியார் நிதி நிறுவனம் திடீரென்று மூடப்பட்டதால் அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் போலீசில் புகார் அளித்தனர்.
    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் தனியார் நிதி நிறுவனம் இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்தில் ஜெயங்கொண்டம் மற்றும் சுற்று வட்டார பகுதியைச் சேர்ந்த ஏராளமானோர் வைப்புத்தொகை கட்டியுள்ளனர். 

    மேலும் அப்பகுதியை சேர்ந்த தொழிலாளிகள் சாலையோர பூ மற்றும் தரைக்கடை வியாபாரிகள் மற்றும் இல்லத்தரசிகள் என நூற்றுக்கணக்கானோர் தினசரி சேமிப்பு என்ற முறையில் தினமும் அவர்களின் வருமானத்திற்கு ஏற்றவகையில் ரூ100 முதல் 5 ஆயிரம் வரை என தினசரி பணம்கட்டி சேமித்து வந்தனர். 

    இதற்காக தினசரி அலுவலக ஊழியர்கள் வாடிக்கையாளர்களிடம் நேரடியாக சென்று பணத்தை வசூல் செய்து வந்தனர். மேலும் நிரந்தர வைப்புத் தொகை என பலரும் செலுத்தியுள்ளனர்.

    இந்நிலையில் கடந்த சில நாட்களாக வசூல் செய்வதற்கு யாரும் வராததால் இதுகுறித்து நிறுவன தலைமை அலுவலகத்திற்கு பொதுமக்கள் தகவல் கொடுத்தும் உரிய பதில் கிடைக்கவில்லை. வாடிக்கையாளர்கள் நிறுவன அலுவலகத்திற்கு சென்று பார்த்தபோது கடந்த 10 நாட்களாக அலுவலகம் திறக்கப்பட்டாதது தெரியவந்தது. 

    இதனால் அதிர்ச்சி அடைந்த டெபாசிட் மற்றும் சேமிப்பு பணம் கட்டிய மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதனையடுத்து பாதிக்கப்பட்ட மக்கள் ஜெயங்கொண்டம் காவல் நிலையத்தில் புகார் செய்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். 

    சேமிப்பு காலம் பலருக்கு முதிர்வடைந்த நிலையில், சேமிப்பு தொகைக்காக வழங்கப்பட்ட காசோலை வங்கியில் கொடுத்தபோது,  பணம் இல்லாமல் காசோலை திரும்பியதாகவும் பலர் குற்றம் சுமத்தினர்.

    மேலும் பொதுமக்களிடமிருந்து வசூலிக்கப்பட்ட தொகை சுமார் ரூ.3 கோடிக்கு மேல் இருக்கும் என கூறப்படுகிறது. தனியார் நிறுவனம் பூட்டப்பட்ட சம்பவம் அங்கு பணம் கட்டிய பொதுமக்களிடையே மிகுந்த ஏமாற்றத்தை தந்துள்ளது. 

    மேலும் நிதி நிறுவன ஜெயங்கொண்டம் கிளை பொறுப்பாளர் சரவணன் என்பவரை ஜெயங்கொண்டம் இன்ஸ்பெக்டர் காவல்நிலையத்திற்கு அழைத்து விசாரணை செய்ததில் சரவணன் தலைமை அலுவலகத்தில் தொடர்பு கொண்டு பேசியபோது 10 நாட்களுக்குள் உரியவர்களுக்கு பணத்தை அனுப்பி வைப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    சிறுமி பாலியல் வழக்கில் மேலும் ஒருவர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
    அரியலூர்:

    ெஜயங்கொண்டம் அருகே சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய மற்றும் பாலியல் தொழிலுக்கு பயன்டுத்தப்பட்ட தனியார் விடுதி உரிமையாளர் உள்பட 12 பேர் அண்மையில் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். 

    இதில் 11 பேர் குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில், இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள கீழப்பழுவூரைச் சேர்ந்த ராஜேந்திரன்(66) என்பவரை குண்டர் சட்டத்தில் அடைக்குமாறு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கே.பெரோஸ்கான் அப்துல்லா பரிந்துரை செய்ததையடுத்து கலெக்டர் பெ.ரமணசரஸ்வதி உத்தரவிட்டார். அதன் நகலை திருச்சி மத்திய சிறை அதிகாரிகளிடம், அரியலூர் மாவட்ட காவல் துறையினர் வழங்கினர்.
    அரசு மருத்துவமனையில் ஊதியம் வழங்காததை கண்டித்து தூய்மை பணியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டன
    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் ஊதியம் வழங்காததை கண்டித்து அரசு மருத்துவமனை பணிபுரியும் தனியார் தூய்மைப்  

    பணியாளர்கள் வேலையை புறக்கணித்தும் தனியார் நிறுவனத்தின் வாகனத்தை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். 

    ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் 36 தூய்மைப் பணியாளர்கள் தனியார் நிறுவனம் மூலம் பணிக்கு அமர்த்தப்பட்டு பணி செய்து வருகின்றனர்.  

    இவர்களுக்கு ஏப்ரல் மாதம் ஊதியம் வழங்கப்பட வில்லை. இதைத் தொடர்ந்து ஊதியம் வழங்காததை கண்டித்து துப்புரவு பணியாளர்கள்  வேலைக்கு செல்லாமல் வேலையை புறக்கணித்தும், தனியார் நிறுவனத்தின் வாகனத்தை மறித்தும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  

    இதைத் தொடர்ந்து மருத்துவமனை தலைமை மருத்துவர் உஷா சம்பந்தப்பட்ட கம்பெனி பேசி சம்பளம் பெற்று தருவதாக உறுதி அளித்ததார். இைதத் தொடர்ந்து துப்புரவு பணிகள் வேலை நிறுத்தத்தை கைவிட்டு  கலைந்து சென்றனர்.

    அரியலூர் அருகே சிறுகடம்பூர் செல்லியம்மன் கோவில் சித்திரை தேர்த்திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு வடம் பிடித்து இழுத்தனர்.
    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம் செந்துறை அடுத்த சிறுகடம்பூர் கிராமத்தில் பிரசித்தி பெற்ற செல்லியம்மன் கோயில் அமைந்துள்ளது.இந்த கோவிலுக்கு கடந்த 200 ஆண்டுகளுக்கும் மேலாக சித்திரை தேர்திருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. 

    அதன்படி இந்த ஆண்டு தேர்த்திருவிழா கடந்த திங்கட்கிழமை 23-ந்தேதி ஐயனார் கோவில் கொடி ஏற்றத்துடன் தொடங்கியது. 

    அதனை தொடர்ந்து  நாள் தோரும் செல்லியம்மன் சிங்க வாகனத்திலும், மாரியம்மன் மயில் வாகனத்திலும் காலை மாலை இரண்டு வேலையும் வீதியுலா வந்து பக்தர்களுக்கு  அருள் பாலித்தார். 

    திருவிழாவில் மூன்றாம் நாள் படைத்தேர் விழாவும் ஏழாம் நாள் மாதிரி தேரோட்ட விழாவும் சிறப்பாக நடைபெற்றது. அதனை தொடர்ந்து கிராமமக்கள் தேர்கட்டும் பணியில் ஈடுபட்டனர். 

    கூலி ஆட்கள் இல்லாமல் சிறுகடம்பூர் கிராம மக்களே இணைந்து தேரின் அனைத்து கட்டுமானப் பணிகளையும் மேற்கொண்டு தேரினை இழுத்து செல்வது இந்த ஊர் தேர் திருவிழாவின் தனிச் சிறப்பு ஆகும். 

    அதன்படி தேர் கட்டுமானப் பணிகள் முடிந்து தேர் சீலைகளால் அலங்கரிக்கப்பட்டது. விவசாயிகள் விவசாயம் செழிக்க வேண்டி தங்களது நிலங்களில் விளைந்த முந்திரி, மா, பலா ஆகியவற்றை கயிறுகளில் கோர்த்து தேரில் கட்டி தொங்கவிட்டனர். 

    அதனை தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட செல்லியமனையும் மாரியம்மனையும் அருகருகே தேரில் ஏற்றி அமர்த்தினார்கள். அதன் பின்னர் காலை ஒன்பது மணிக்கு தேர் பொது மக்களால் வடம்பிடித்து இழுக்கப்பட்டது. 

    ஏரிக்கரையில் உள்ள செல்லியம்மன் கோயில் சன்னதியில் இருந்து புறப்பட்ட தேர் பிள்ளையார் கோயில் மாரியம்மன் கோயில் உள்ளிட்ட தேரோடும் 4 முக்கிய வீதிகள் வழியாக மாலை சந்நிதியை வந்தடைந்தது. 

    தேரினை ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்து வந்தனர். தேர் சன்னதியை அடைந்ததும் ஆண்கள் கோவிலை சுற்றி அங்கப்பிரதட்சனமும், பெண்கள் நடை கும்பிடு போட்டும் தங்களது நேர்த்தி கடன்களை செலுத்தினார்கள். 

    நாளை மஞ்சள் நீராட்டுடன் திருவிழா நிறைவு பெறுகிறது. திருவிழாவை முன்னிட்டு இரும்புலிக்குறிச்சி போலீசார் பலத்த 
    அரியலூரை சேர்ந்த வீரர் இந்திய ஆக்கி அணிக்கு தேர்வு செய்யப்பட்டு உள்ளார்.
    அரியலூர்:

    அரியலூர் நகரை சேர்ந்த கார்த்திக். 20 ஆண்டுகளுக்கு பிறகு தமிழகத்தில் இருந்து இந்திய ஹாக்கி அணிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். மிகவும் ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்த இவருடைய தந்தை செல்வம், வங்கியில் இரவு நேர காவலராக பணியாற்றி தற்போது அரியலூர் அரசு கலைக்கல்லூரியில் காவலராக பணியாற்றி வருகிறார். 

    தாய் வளர்மதி வீடுகளில் பத்து பாத்திரம் தேய்த்து வீட்டு வேலை செய்து கார்திக்கை படிக்க வைத்துள்ளார். இந்நிலையில் கார்த்திக் 7 ஆம் வகுப்பு வரை அரியலூரில் உள்ள தூய மேரி மேல்நிலைப்பள்ளியில் படித்து வந்தார். பின்னர் சென்னையில் உள்ள ஒய்.எம்.சி.ஏ.வில் 7 முதல் 10 ஆம் வகுப்பு வரை படித்துள்ளார். 

    பின்னர் கார்த்திக்கின் விளையாட்டு திறனை பார்த்த திருச்சி தமிழ்நாட்டு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் பயிற்சியாளர் கார்த்திக்கை அழைத்து விளையாட்டு திறனை மேம்படுத்தியுள்ளார். பின்னர் விளையாட்டு திறனை பார்த்த கோவில்பட்டி எஸ்.எஸ்.துரைசாமி நாடார் கல்லூரியில் இளங்கலை வரலாறு படித்து வருகிறார். அங்கிருந்து அவரது விளையாட்டு திறனை பார்த்த பெங்களூர் சாய் விளையாட்டு மையத்திற்கு தேர்வு செய்யப்பட்டார்.

    முதலில் எக்லான்ஸ் அணிக்காக தேர்வு செய்யப்பட்டார். அங்கு பல போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்றார். தற்போது இந்தோனேஷியால் நடைபெறயிருக்கும் ஆசிய கோப்பைக்கான ஹாக்கி போட்டியில் இந்திய அணியில் முன்கள ஆட்டக்காரராக விளையாட‌ தேர்வு செய்யப்பட்டுள்ளார். 

    இப்போட்டி வரும் 23 ஆம் தேதி தொடங்கவுள்ளது. தொடக்க போட்டி பாகிஸ்தானுடன் விளையாட உள்ளதாக தெரிகிறது. ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்த கார்த்திக் விளையாட்டுக்காக தன்னுடைய விடா முயற்சியில் மற்றும் தன்னுடைய ஆட்ட திறனால் 20 ஆண்டுகளுக்கு பிறகு கார்த்திக் தேர்வு செய்யப்பட்டு அரியலூருக்கும், தமிழ்நாட்டிற்கும் பெருமை சேர்த்துள்ளார்.

    அரியலூர் அருகே நள்ளிரவில் தனியாருக்கு சொந்தமான மீன் கடையை சூறையாடிய மர்ம நபர்கள் அங்கிருந்த பொருட்களை திருடி சென்றனர்.
    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம் செந்துறை போலீஸ் நிலையம் அருகே நகைக்கடை வைத்திருப்பவர் செல்வராசு. இவருக்கு சொந்தமான இடம் ஜெயங்கொண்டம் செல்லும் சாலையில் பிள்ளையார் கோவில் அருகே உள்ளது. அதில் பலர் வாடகைக்கு வியாபாரம் செய்து வருகின்றனர். 

    அதேபோன்று வல்லம் கிராமத்தைச் சேர்ந்த பெரியசாமி என்பவர் மீன் கடை வைத்து நடத்தி வருகிறார். இந்த நிலையில் நேற்று நள்ளிரவில் மீன் கடையின் தகர சீட்டுகளை ஆக்ஸா பிளேடு கொண்டு அறுத்து உள்ளே சென்ற மர்ம நபர்கள் கடையில் மீன் வெட்ட வைத்திருந்த கத்தியை எடுத்து கடையில் சுவருக்காக அடைக்கப்பட்டிருந்த தகர சீட்டுகள் அனைத்தையும் வெட்டி சேதப்படுத்தி சென்றுள்ளனர். 

    மேலும் கடையில் வைத்திருந்த மீன்களையும் அள்ளி சென்றதாக கூறப்படுகிறது. அதேபோன்று அருகில் கொட்டகை அமைக்க நடப்பட்டு இருந்த சிமெண்ட் தூண்களையும் உடைத்து சேதப்படுத்தி சென்றுள்ளனர். 

    இன்று காலை வழக்கம் போல் காலை மீன் வியாபாரம் செய்ய வந்த பெரியசாமி கடை சூறையாடப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அதனைத் தொடர்ந்து இடத்தின் உரிமையாளரிடம் தகவல் தெரிவித்தார். 

    அதன்பேரில் நில உரிமையாளர் செல்வராசு செந்துறை போலீசில் கொடுத்த புகாரின் பேரில் மீன் கடையை சூறையாடிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். ஆள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியில் மீன் கடை சூறையாடப்பட்ட சம்பவம் செந்துறை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ×