என் மலர்
உள்ளூர் செய்திகள்

FILEPHOTO
எல்.ஐ.சி. முகவர் வங்கி கணக்கிலிருந்து ரூ. 10 லட்சத்தை மோசடி
எல்.ஐ.சி. முகவர் வங்கி கணக்கிலிருந்து ரூ. 10 லட்சத்தை மோசடி செய்தவரை போலீசார் கைது செய்தனர்.
அரியலூர்:
அரியலூரை சேர்ந்தவர் கண்ணுப்பிள்ளை (வயது 63). எல்.ஐ.சி.முகவரான இவர், தனது செல்போனுக்கு வந்த அழைப்பை நம்பி ரூ.10 லட்சத்தை இழந்துவிட்டதாக அரியலூர் சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் செங்குட்டுவன் வழக்குப்பதிவு செய்தார். இச்சம்பவம் குறித்து அரியலூர் சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
விசாரணையில் கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டத்தில் உள்ள முல்பாஹால் என்ற கிராமத்தை சேர்ந்த பூபாலன் (25) என்பவர், தான் பெங்களூரில் உள்ள நிறுவனத்தில் வேலை செய்வதாகவும், அந்த நிறுவனத்தில் வேலை செய்பவர்களுக்கு மொத்தமாக காப்பீடு பெற்றுத்தர கமிஷன் வேண்டும் என்றும்,
பாலிசிதாரர் செல்போன் எண்ணை பெற்று, அதன்மூலம் கண்ணுப்பிள்ளையை செல்போனில் தொடர்பு கொண்டு பேசி, அவரது வங்கிக் கணக்கில் இருந்து சிறிது சிறிதாக ரூ.10 லட்சம் வரை எடுத்து மோசடி செய்தது தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
இதனை தொடர்ந்து பூபாலனை சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர். அப்போது அவரிடமிருந்து ரூ.1 லட்சம் ரொக்கம், ரூ. 1 லட்சத்து 75 ஆயிரம் மதிப்புள்ள நகைகள், இணைய மோசடிக்கு பயன்படுத்திய ஏ.டி.எம். கார்டு, வங்கி கணக்கு புத்தகம், செக் புத்தகம், செல்போன்கள் மற்றும் ஒரு கம்ப்யூட்டர் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
Next Story






