search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பொது மக்கள் இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று கலெக்டர் அதில் தெரிவித்துள்ளார்.
    X
    பொது மக்கள் இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று கலெக்டர் அதில் தெரிவித்துள்ளார்.

    வண்டல் மண் எடுக்க விண்ணப்பிக்கலாம்: கலெக்டர் அறிவிப்பு

    அரியலூர் மாவட்டத்தில் வண்டல் மற்றும் சவுடு மண் எடுக்க விண்ணப்பம் செய்யலாம் என்று கலெக்டர் ரமண சரஸ்வதி தெரிவித்துள்ளார்.
    அரியலூர்:


    அரியலூர் மாவட்ட கலெக்டர் பெ.ரமணசரஸ்வதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: 

    அரியலூர் மாவட்டத்தில் நீர்வளத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள 92 ஏரிகள் (ஒருநீர்த்தேக்கம் உள்பட) மற்றும் ஊரக வளர்ச்சித்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள 454 குளம், ஏரிகளில் மட்டும் வண்டல் மண், சவுடு மண், கிராவல் மண் போன்ற கனிமங்களை, வேளாண் உபயோகம், சொந்த வீட்டு உபயோகம் மற்றும் மண்பாண்டம் தயாரித்தல் ஆகிய காரியங்களுக்காக இலவசமாக எடுத்துச் செல்ல அனுமதி வழங்கும் பொருட்டு, அரியலூர் மாவட்ட அரசிதழ்களில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

    எனவே, பொதுமக்கள், விவசாயிகள், மண்பாண்டம் தயாரிப்பாளர்கள் மற்றும் தமிழ்நாடு கூட்டுறவு சங்க சட்டத்தின் படி பதிவு செய்யப்பட்ட மண்பாண்டம் தயாரிக்கும் தொழிலாளர் கூட்டுறவு சங்கங்கள் , சம்மந்தப்பட்ட வட்டாட்சியர்களிடம் விண்ணப்பிக்கலாம்.

    மேற்படி விண்ணப்பங்கள் மீது சம்மந்தப்பட்ட வட்டாட்சியர்களால் உடன் விசாரணை மேற்கொண்டு வண்டல் மண் எடுத்துச் செல்ல உரிய அனுமதி வழங்கப்படும்.
    மேலும், அனுமதி கோரும் மனுதாரரின் வசிப்பிடம் அல்லது வேளாண் நிலமும், வெட்டி எடுக்கப்பட வேண்டிய இடமும் ஒரே வருவாய் கிராமத்தில் அல்லது அருகிலுள்ள வருவாய் கிராமத்தில் இருக்க வேண்டும்.

    விவசாய பணிக்கெனில், நஞ்சை நிலமாகயிருப்பின் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை ஒருஏக்கருக்கு 75 கன மீட்டர் அல்லது 25 டிராக்டர் லோடுகளும், புஞ்சை நிலமாகயிருப்பின் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒரு ஏக்கருக்கு 90 கன மீட்டர் அல்லது 30 டிராக்டர் லோடுகளும், சொந்த வீட்டு உபயோகத்துக்கு 30 கன மீட்டர் அல்லது 10 டிராக்டர் லோடுகளும், மண்பாண்டம் தயாரித்தலுக்கு 60 கனமீட்டர் அல்லது 20 டிராக்டர் லோடுகளும் இலவசமாக மண் எடுத்துச் செல்ல அனுமதி வழங்கப்படும்.

    மேலும், வேளாண் உபயோகத்துக்கு நிலத்திற்கான கணினி சிட்டா நகலும், வீட்டு உபயோகத்துக்கு வீட்டிற்கான நத்தம், கணினி சிட்டா நகலும், மண்பாணை தயாரிப்பு உபயோகத்துக்கு நலவாரிய அடையாள அட்டை நகலும் மற்றும் வசிப்பிட முகவரிக்கு ஆதாரமாக குடும்ப அட்டை நகல் அல்லது ஆதார் அட்டை நகலினை விண்ணப்பத்துடன் இணைத்து சமர்ப்பிக்க வேண்டும்.

    Next Story
    ×