என் மலர்
உள்ளூர் செய்திகள்

FILEPHOTO
ஜெயங்கொண்டத்தில் கள் விற்ற 2 பேர் கைது
ஜெயங்கொண்டத்தில் கள் விற்ற வழக்கில் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
அரியலூர்:
ஜெயங்கொண்டம் அருகே கல்லாத்தூர் கிராமத்தில் பனை மரத்தல் இருந்து கள் இறக்கி விற்பனை செய்வதாக போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் போலீஸ் சப்இன்ஸ்பெக்டர் கல்யாணராமன் தலைமையிலான போலீசார், அப்பகுதிக்கு நேரில் சென்று சோதனையிட்டனர்.
அப்போது அங்கிருந்த பனைமரத்திலிருந்து கள் இறக்கியவரை பிடித்து விசாரித்ததில் அவர் பதனீர் இறக்குவதாக கூறியுள்ளனர்.
உடனே போலீசார் அதனை பரிசோதித்த போது கள் தான் என்பதை உறுதி செய்தனர்.
இதைத்தொடர்ந்து பனை மரத்தில் இருந்து கள்ளை இறங்கி விற்பனை செய்த விருதுநகர்மாவட்டம் ராஜபாளையம் மேலவரகுணபுரம் பகுதி தெற்கு தெருவை சேர்ந்த முத்துராமன் (37) என்பவரை கைது செய்தனர்.
இதே போல் கூவத்தாரில் ஆண்டிமடம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நடேசன் தலைமையிலான போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
அப்போது விருதுநகர் மாவட்டம் தெற்குதெருவை சேர்ந்த செம்புலிங்கம் (62) என்பவரையும் கள் விற்ற வழக்கில் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story