என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  கராத்தே போட்டியில் வெற்றி பெற்ற ஆழ்வார்திருநகரி பள்ளி மாணவ- மாணவிகளுக்கு பாராட்டு
  X

  கராத்தே போட்டியில் வெற்றி பெற்ற மாணவ- மாணவிகளுடன் பேரூராட்சி தலைவர் சாரதா பொன் இசக்கி மற்றும் நகர செயலாளர் கோபிநாத் உள்ளனர்.

  கராத்தே போட்டியில் வெற்றி பெற்ற ஆழ்வார்திருநகரி பள்ளி மாணவ- மாணவிகளுக்கு பாராட்டு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • சென்னையில் 17-வது அகில இந்திய சிட்டோ ரியோ நிப்பான் கராத்தே டூ காய் இந்தியா சேம்பியன் போட்டி சென்னை மாநகராட்சி துணை மேயர் கராத்தே தியாகராஜன் தலைமையில் நடைபெற்றது.
  • கராத்தே போட்டியில் ஆழ்வார் திருநகரியை சேர்ந்த பள்ளி மாணவ -மாணவிகள் 60 பேர் கலந்து கொண்டனர்.

  தென்திருப்பேரை:

  சென்னையில் 17-வது அகில இந்திய சிட்டோ ரியோ நிப்பான் கராத்தே டூ காய் இந்தியா சேம்பியன் போட்டி சென்னை மாநகராட்சி துணை மேயர் கராத்தே தியாகராஜன் தலைமையில் நடைபெற்றது.

  இந்த கராத்தே போட்டியில் ஆழ்வார் திருநகரியை சேர்ந்த பள்ளி மாணவ -மாணவிகள் 60 பேர் கராத்தே தலைமை பயிற்சியாளர் ஷீகான் சங்கர் மற்றும் மாவட்ட பயிற்சி யாளர்கள் முத்துமாலை, முத்துசுடர், இசக்கியப்பன் ஆகியோர் தலைமையில் கலந்து கொண்டனர். அதில் முதல் பரிசு 13 பேரும், 2-வது பரிசு 23 பேரும், 3-வது பரிசு 13 பேரும் மொத்தம் 49 பரிசுகளும், சான்றிதழ்களும் பெற்றனர்.

  போட்டியில் கலந்து கொண்ட மாணவ- மாணவிகளை பேரூராட்சி தலைவர் சாரதா பொன் இசக்கி மற்றும் நகர செயலாளர் கோபிநாத் ஆகியோர் பாராட்டி நினைவு பரிசும் வாழ்த்துக்களையும் தெரிவித்தனர். மேலும் தங்களுக்கு தேவையான உதவிகளையும் செய்து கொடுப்பதாக கூறினார்கள்.

  நிகழ்ச்சியில் முன்னாள் நகர செயலாளர் முத்து ராமலிங்கம், மாவட்ட பிரதிநிதி பாலசந்திரன், போஸ், ரஞ்சித் மோகன், முகமது ரஸ்வி, சலீம் பாதுஷா, மந்திர மூர்த்தி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

  Next Story
  ×