என் மலர்
உள்ளூர் செய்திகள்

லாரி மோதி முறிந்த மின்கம்பத்தை படத்தில் காணலாம்.
மேல்மலையனூர் அருகே லாரி மோதி மின்கம்பம் முறிந்தது
- கரும்பு ஏற்றிக் கொண்டு லாரி ஒன்று செம்மேடு சர்க்கரை ஆலைக்கு சென்று கொண்டிருந்தது.
- இச்சம்பவம் குறித்து அவலூர்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விழுப்புரம்:
மேல்மலையனூர் அருகே கரடிக்குப்பம் கிராமத்திலிருந்து நேற்று மாலை கரும்பு ஏற்றிக் கொண்டு லாரி ஒன்று செம்மேடு சர்க்கரை ஆலைக்கு சென்று கொண்டிருந்தது. அவலூர்பேட்டை செல்லியம்மன் கோவில் அருகில் சென்ற போது எதிர்பாரதவிதமாக சாலை ஓரம் இருந்த சிமெண்ட் மின்கம்பத்தில் மோதியது. இதனால் மின்கம்பம் முறிந்தது.இதுகுறித்து தகவலறிந்த மின்சார துறையினர் விரைந்து செயல்பட்டு மின் இணைப்பை துண்டித்தனர். இதனால் பெரும் மின் விபத்து தடுக்கப்பட்டது. இச்சம்பவம் குறித்து அவலூர்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story






