search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சென்னையில் 15-ந் தேதி நடைபெறும் அ.ம.மு.க. பொதுக்குழு கூட்டத்திற்கு 20 ஆயிரம் பேர் செல்ல முடிவு - கயத்தாறில் நடந்த தென்மண்டல நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானம்
    X

    செயற்குழு உறுப்பினர்கள் கூட்டத்தில் அ.ம.மு.க. தென்மண்டலப் பொறுப்பாளர் மாணிக்கராஜா பேசிய போது எடுத்த படம்.


    சென்னையில் 15-ந் தேதி நடைபெறும் அ.ம.மு.க. பொதுக்குழு கூட்டத்திற்கு 20 ஆயிரம் பேர் செல்ல முடிவு - கயத்தாறில் நடந்த தென்மண்டல நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானம்

    நெல்லை மண்டலத்தில் நடைபெறவிருக்கும் மாநில செயற்குழு கூட்டத்திற்கு வருகை தரும் பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரனுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்படவேண்டும்.

    கயத்தாறு:

    கயத்தாறில் அ.ம.மு.க. சார்பில் கழக தலைமை நிலைய செயலாளர், தென் மண்டல பொறுப்பாளர், தென் மண்டல நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது.

    தீர்மானங்கள்

    நிகழ்ச்சிக்கு தலைமை நிலைய செயலாளரும், தென் மண்டல பொறுப் பாளருமான எஸ். வி.எஸ்.பி. மாணிக்கராஜா தலைமை தாங்கினார். கயத்தாறு மேற்கு ஒன்றிய செயலாளர் கணபதி பாண்டியன் வரவேற்புரையாற்றினார்.கூட்டத்தில் சென்னையில் வருகின்ற ஆகஸ்ட்- 15 ந் தேதி நடைபெறவிருக்கும் பொதுக்குழு கூட்டத்திற்கு தென் மண்டலத்தின் சார்பில் 20 ஆயிரம் பேர் வாகனங்களில் செல்ல வேண்டும் என்றும், தென்மாவட்டங்களில் அனைத்து கிராமங்களிலும் கட்சி கொடி ஏற்றவேண்டும். நெல்லை மண்டலத்தில் நடைபெறவிருக்கும் மாநில செயற்குழு கூட்டத்திற்கு வருகை தரும் பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரனுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்படவேண்டும். மேலும் வேறு முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    கலந்து கொண்டவர்கள்

    இந்த கூட்டத்திற்கு 12 மாவட்ட செயலாளர் மற்றும் மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.இதில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளர் சிவபெருமாள், வடக்கு மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் கருப்பசாமி பாண்டியன், தெற்கு மாவட்ட செயலாளர் பி.ஆர்.மனோகரன், மத்திய மாவட்ட கழக செயலாளர் பிரைட்டர், நெல்லை மாநகர் தெற்கு மாவட்ட கழக செயலாளர் எஸ். கே.முத்து, வடக்கு மாநகர் மாவட்ட கழக செயலாளர் பரமசிவம், கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட செயலாளர் ராகவன், மேற்கு மாவட்ட செயலாளர் ஸ்டீபன், தென்காசி தெற்கு மாவட்ட கழகச் செயலாளர் முருகையா பாண்டியன், வடக்கு மாவட்ட கழக செயலாளர் ராமச்சந்திரமூர்த்தி, விருதுநகர் மேற்கு மாவட்டம் கழகச் செயலாளர் காளிமுத்து, மத்திய மாவட்ட கழக செயலாளர் பயில்வான் கே, எஸ், சந்தோஷ்குமார், கிழக்கு மாவட்ட செயலாளர் சிவசாமி, மற்றும் கயத்தாறு கிழக்கு ஒன்றிய செயலாளர் மகேந்திரன், மாநில சிறுபாண்மை குழுத் தலைவர் மீரான் மைதீன், மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் உடையார்பாண்டியன், மகளிர் அணி நிர்வாகிகள் உள்பட பலரும் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×