என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  அயப்பாக்கத்தில் நாளை அ.ம.மு.க. ஆலோசனை கூட்டம்- டி.டி.வி. தினகரன் பங்கேற்பு
  X

  அயப்பாக்கத்தில் நாளை அ.ம.மு.க. ஆலோசனை கூட்டம்- டி.டி.வி. தினகரன் பங்கேற்பு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் கலந்துகொண்டு ஆலோசனை வழங்குகிறார்.
  • டி.டி.வி. தினகரனுக்கு பிரம்மாண்ட வரவேற்பு அளிக்க திருவள்ளூர் ஒருங்கிணைந்த மாவட்ட நிர்வாகிகள் முடிவு செய்துள்ளனர்.

  அம்பத்தூர்:

  அம்பத்தூர் அருகே அயப்பாக்கத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக திருவள்ளுர் ஒருங்கிணைந்த மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நாளை (ஞாயிற்றுக்கிழமை) மாலை நடைபெறுகிறது.

  இதில் அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் கலந்துகொண்டு ஆலோசனை வழங்குகிறார். கூட்டத்தில் அ.ம.மு.க. துணை பொது செயலாளரும், முன்னாள் அமைச்சருமான ஜி.செந்தமிழன், மண்டல பொறுப்பாளர், பொறியாளர் அணி செயலாளரும், செங்கல்பட்டு வடக்கு மாவட்ட கழகச் செயலாளருமான கரிகாலன், திருவள்ளூர் தெற்கு மாவட்ட செயலாளர் இ.லக்கிமுருகன் மற்றும் மாநில, மாவட்ட, ஒன்றிய, பகுதி, வட்ட, கிளை கழக நிர்வாகிகள் என சுமார் 2,000 பேர் கலந்து கொள்கிறார்கள். ஆலோசனைக் கூட்டத்திற்கு வருகை தரும் பொது செயலாளர் டி.டி.வி. தினகரனுக்கு பிரம்மாண்ட வரவேற்பு அளிக்க திருவள்ளூர் ஒருங்கிணைந்த மாவட்ட நிர்வாகிகள் முடிவு செய்துள்ளனர்.

  Next Story
  ×