search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நெல்லை மாவட்டத்தில் வளர்ச்சி பணிகளுக்காக ரூ.6 கோடி ஒதுக்கீடு - மாவட்ட பஞ்சாயத்து கூட்டத்தில் தீர்மானம்
    X

    கூட்டத்தில் மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஷ் பேசிய காட்சி. இதில் துணைத்தலைவர் செல்வலெட்சுமி, ஊராட்சி செயலர் சுப்பிரமணியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    நெல்லை மாவட்டத்தில் வளர்ச்சி பணிகளுக்காக ரூ.6 கோடி ஒதுக்கீடு - மாவட்ட பஞ்சாயத்து கூட்டத்தில் தீர்மானம்

    • பாளை கே.டி.சி.நகரில் உள்ள மாவட்ட பஞ்சாயத்து அலுவலகத்தில் மாவட்ட பஞ்சாயத்து கூட்டம் நடந்தது. மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஷ் தலைமை தாங்கினார்.
    • கூட்டத்தில், உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பதவியேற்றதற்கு வாழ்த்து தெரிவித்து தீர்மானம நிறைவேற்றப்பட்டது.

    நெல்லை:

    பாளை கே.டி.சி.நகரில் உள்ள மாவட்ட பஞ்சாயத்து அலுவலகத்தில் மாவட்ட பஞ்சாயத்து கூட்டம் நடந்தது. மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஷ் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் செல்வ லெட்சுமி முன்னிலை வகித்தார்.

    தொடர்ந்து தலைவர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஷ் பேசுகையில், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அந்தந்த ஊராட்சி பகுதிகளில் போதைப்பொருள் தடுப்பு குறித்து விழிப்புணர்வு பேரணி நடத்த வேண்டும் என்றார்.

    கூட்டத்தில், உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பதவியேற்றதற்கு வாழ்த்து தெரிவித்து தீர்மானம நிறைவேற்றப்பட்டது. மேலும் ஊரக உள்ளாட்சி பகுதிகளில் உள்ள 9 யூனியன்களில் வள்ளியூர், ராதாபுரம், அம்பை ஆகிய 3 யூனியன்களை தவிர மீதம் உள்ள யூனியன்களில் முதல் கட்டமாக அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளிகள், நடுநிலைப்பள்ளிகள் என மொத்தம் 208 பள்ளிகளுக்கு ஸ்மார்ட் வகுப்பறைகள் அமைக்க ரூ.4 கோடியே 16 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    மேலும், மாவட்டம் முழுவதும் வளர்ச்சி பணிக்காக சுமார் ரூ.6 கோடி ஒதுக்குவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    இதில் கவுன்சிலர்கள் வட்டார வளர்ச்சி அலுவ லர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    முன்னதாக போதைப்பொருள் ஒழிப்பு உறுதிமொழி ஏற்கப்பட்டது.

    Next Story
    ×