என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  வயல்வெளிகளில் விவசாயிகளை சந்தித்த வேளாண் அதிகாரிகள்
  X

  வயல்வெளிகளில் விவசாயிகளை வேளாண் அதிகாரிகள் சந்தித்த காட்சி.

  வயல்வெளிகளில் விவசாயிகளை சந்தித்த வேளாண் அதிகாரிகள்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • பயிர்களில் ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு என்ற தலைப்பில் செங்கோட்டை வட்டார துணை வேளாண்மை அலுவலர் ஷேக் முகைதீன் உரை யாற்றினார்.
  • நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை உதவி வேளாண்மை அலுவலர் அருணாசலம் செய்திருந்தார்.

  செங்கோட்டை:

  செங்கோட்டை அருகே இலத்தூர் கிராமத்தில் தென்காசி மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் தமிழ் மலர் தலைமையில் தென்காசி வேளாண்மை உதவி இயக்குனர் (பொறுப்பு) நபீஸா செங்கோட்டை வட்டார துணை வேளாண்மை அலுவலர் ஷேக் முகைதீன், இலத்தூர் உதவி வேளாண்மை அலுவலர் அருணாசலம் உள்ளிட்ட அலுவலர்கள் இலத்தூர் பகுதியில் முகாமிட்டு வேளாண் பெருமக்களை வயல்வெளியில் சந்தித்து அரசின் திட்டங்களை விளக்கி கூறினர். நிகழ்ச்சியில் ஒருங்கிணைந்த உர மேலாண்மை என்பது பற்றி வேளாண்மை உதவி இயக்குனர் பொறுப்பு நபிஸா உரையாற்றினார். பயிர்களில் ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு என்ற தலைப்பில் செங்கோட்டை வட்டார துணை வேளாண்மை அலுவலர் ஷேக் முகைதீன் உரை யாற்றினார்.

  நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை உதவி வேளாண்மை அலுவலர் அருணாசலம் செய்திருந்தார். வேளாண்மை இணை இயக்குனர், கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தில் இலவச தென்னங் கன்று மானியத்தில் வழங்கப்பட்ட தார்ப்பாய் பண்ணை கருவி கைத்தெளிப்பான் பெற்று பயன் அடைந்த விவசாயிகள் உடைய வயல்வெளிக்கு சென்று ஆய்வு பணியை மேற் கொண்டனர். வரப்பு பயிராக உளுந்து சாகுபடியையும் வேளாண்மை இணை இயக்குனர் தொடங்கி வைத்தார்.

  Next Story
  ×