என் மலர்
உள்ளூர் செய்திகள்

குமாரபாளையம் நகராட்சி பகுதியில் நகராட்சி நிர்வாக இயக்குனர் பொன்னையா ஆய்வு செய்த காட்சி.
குமாரபாளையம் நகராட்சி பகுதியில் நிர்வாக இயக்குனர் ஆய்வு
- குமாரபாளையம் நகராட்சி பகுதிகளில் நகராட்சி நிர்வாக இயக்குனர் பொன்னையா ஆய்வு செய்தார்.
- பழைய பள்ளிபாளையம் சாலையில் உயர்மட்ட பாலம் கட்டுமான பணி ஆகிய பணிகளை ஆய்வு செய்து ஆலோசனை வழங்கினார்.
குமாரபாளைம்:
குமாரபாளையம் நகராட்சி பகுதிகளில் நகராட்சி நிர்வாக இயக்குனர் பொன்னையா ஆய்வு செய்தார். அவர் அறிவு சார் மையம், தினசரி காய்கறி மார்க்கெட் கட்டுமான பணி, கோம்பு பள்ளம் சீரமைப்பு பணி, பழைய பள்ளிபாளையம் சாலையில் உயர்மட்ட பாலம் கட்டுமான பணி ஆகிய பணிகளை ஆய்வு செய்து ஆலோசனை வழங்கினார். வாரச்சந்தை சீரமைப்பு பணி, பேருந்து நிலைய சீரமைப்பு பணி, தூய்மை பணியாளர்கள் புதிய குடியிருப்பு கட்டுதல், பாதாள சாக்கடை திட்டம், 33 வார்டுகளில் வடிகால் மற்றும் தார்சாலை வசதி ஆகியவற்றிற்கான கோரிக்கை மனுவினை நகராட்சி சேர்மன் விஜய்கண்ணன், நகராட்சி நிர்வாக இயக்குனரிடம் வழங்கினார். இந்த ஆய்வில் நகராட்சி கமிஷனர் (பொறுப்பு) ராஜேந்திரன், கவுன்சிலர்கள், தி.மு.க. நிர்வாகிகள் உள்பட பலர் உடனிருந்தனர்.