search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அணைகளில் இருந்து திறக்கப்படும் நீர் குறித்து வதந்தி பரப்பினால் நடவடிக்கை -நெல்லை மாவட்ட கலெக்டர் எச்சரிக்கை
    X

    கலெக்டர் கார்த்திகேயன்

    அணைகளில் இருந்து திறக்கப்படும் நீர் குறித்து வதந்தி பரப்பினால் நடவடிக்கை -நெல்லை மாவட்ட கலெக்டர் எச்சரிக்கை

    • வேளாண், குடிநீர் தேவைக்கு வினாடிக்கு 750 கன அடி பயன்படுத்தினால் 10 முதல் 15 நாட்களுக்கு மட்டுமே நீரை பயன்படுத்த இயலும்.
    • ஒரு சில இடங்களில் விஷமிகள் தவறான நோக்கத்துடன் தேவையற்ற வதந்திகளை பரப்பி வருவதாக தெரிகிறது.

    நெல்லை:

    நெல்லை மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்ப தாவது:-

    நெல்லை மாவட்டத்தில் மழை பற்றாக்குறை காரணமாகவும், தாமிரபரணி குடிநீரையே நம்பி உள்ள 3 மாவட்ட மக்களின் நலன் காக்கும் விதமாகவும் பாபநாசம் அணையில் இருந்து பாசனத்திற்காக திறக்கப்படும் நீரின் அளவு நீர்வரத்தை பொறுத்து மட்டும் திறந்து விடுவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.

    மணிமுத்தாறு அணையிலும் போதிய நீர் இல்லாத நிலையில் தற்போது உள்ள நீரை குடிநீர் தேவைக்கு மட்டும் ஒரு நாளைக்கு 300 முதல் 350 கன அடி பயன்படுத்தினால் 40 முதல் 45 நாட்கள் வரை பயன்படுத்தலாம். வேளாண் மற்றும் குடிநீர் தேவை ஆகிய 2-க்கும் வினாடிக்கு 750 கன அடி பயன்படுத்தி னால் 10 முதல் 15 நாட்களுக்கு மட்டுமே பயன்படுத்த இயலும்.

    இது தொடர்பாக நீர்வளத்துறையால் விவசாயிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்களின் ஒத்துழைப்பும் கோரப்பட்டுள்ளது.

    இந்நிலையில், ஒரு சில இடங்களில் விஷமிகள் தவறான நோக்கத்துடன் தேவையற்ற வதந்திகளை பரப்பி வருவதாக தெரிகிறது. அதுபோன்ற அவ தூறான வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்படுகிறது.

    குடிநீர் தேவைக்காக மக்கள் நலன் கருதி எடுக்கப்படும் இந்த நடவடிக்கைகளின் அவசியத்தை அனைவரும் உணர்ந்து ஒத்துழைக்க வேண்டும். இதுகுறித்து வதந்தி பரப்பினால் நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    Next Story
    ×