என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஆத்தூரில் அட்மா திட்ட பயிற்சி முகாம்
- சேலம் மாவட்டம் ஆத்தூர் வட்டார விவ சாயிகள் அட்மா திட்டத்தின் கீழ் சந்தியூரில் உள்ள வேளாண்மை அறிவியல் நிலையத்திற்கு பட்டயறிவு பயணம் அழைத்து செல்லப்பட்ட னர்.
- விவசாயிகளுக்கு மக்காச்சோளம் சாகுபடி தொழில்நுட்பங்கள் குறித்து விளக்கம், பயிற்சி அளித்தார்.
ஆத்தூர்:
சேலம் மாவட்டம் ஆத்தூர் வட்டார விவ சாயிகள் அட்மா திட்டத்தின் கீழ் சந்தியூரில் உள்ள வேளாண்மை அறிவியல் நிலையத்திற்கு பட்டயறிவு பயணம் அழைத்து செல்லப்பட்ட னர். வேளாண்மை உதவி இயக்குனர்(பொ) ஆத்தூர் ஜானகி முன்னிலை வகித்து விவசாயிகளை அனுப்பி வைத்தார். அட்மா திட்ட தலைவர் செழியன் தலைமை வகித்து கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.
தொடர்ந்து வேளாண் அறிவியல் நிலையத்தின் தலைவர் ஜெகதாம்பாள் விவசாயிகளுக்கு மக்காச்சோளம் சாகுபடி தொழில்நுட்பங்கள் குறித்து விளக்கம், பயிற்சி அளித்தார். இறுதியாக அட்மா திட்ட வட்டார தொழில்நுட்ப மேலாளர் சுமித்ரா கலந்து கொண்டு அட்மா திட்டம் செயல்பாடுகள் குறித்து விளக்கம் அளித்தார். இதில் உதவி தொழில்நுட்ப மேலாளார் தமிழ்ச்செல்வி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Next Story