search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    புளியங்குடி பவானி அம்மன் ஆலயத்தில் ஆடிமாத பவுர்ணமி பூஜை
    X

    ஆடிமாத பவுர்ணமி பூஜையையொட்டி பாலாபிஷேகம் நடைபெற்ற போது எடுத்த படம்.

    புளியங்குடி பவானி அம்மன் ஆலயத்தில் ஆடிமாத பவுர்ணமி பூஜை

    • காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை பக்தர்களுக்கு சிறப்பு அருள்வாக்கு நடைபெற்றது.
    • பூஜையில் மழை வேண்டி 1,008 லிட்டர் சிறப்பு பாலாபிஷேகம் நடந்தது.

    புளியங்குடி:

    புளியங்குடி முப்பெரும் தேவியர் பவானி அம்மன் ஆலயத்தில் உள்ள பெரியபாளையத்து பவானி அம்மன், நாகக்கன்னி அம்மன், நாகம்மன் தெய்வங்களுக்கு ஆடிமாத பவுர்ணமி பூஜை நடைபெற்றது. அதிகாலை 5 மணி அளவில் நடை திறக்கப்பட்டு அம்மன்களுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று.

    சிறப்பு பாலாபிஷேகம்

    தொடர்ந்து காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை பக்தர்களுக்கு சிறப்பு அருள்வாக்கு நடைபெற்றது. மாலை 7 மணிக்கு குருநாதர் சக்தியம்மா ஆடிமாத பவுர்ணமி பூஜை குறித்து ஆன்மீக சொற்பொழிவாற்றினார். பின்னர் பால், தயிர், மஞ்சள், இளநீர் உட்பட 18 நறுமண பொருட்கள் மற்றும் உலக மக்கள் நன்மைக்காகவும், மழை வேண்டியும் 1,008 லிட்டர் சிறப்பு பாலாபிஷேகம் நடந்தது.

    தொடர்ந்து பரிவார தெய்வங்களான பாலவிநாயகர், கல்யாண சுப்பிரமணியர், வள்ளி, தெய்வானை பதினெட்டாம்படி கருப்பசாமி, பவானி பத்திரகாளியம்மன், மகாகாளியம்மன், புற்றுக்காளி, நாகக்காளி, சூலக்காளி, ரத்தக்காளி, பேச்சியம்மன் ஆகிய தெய்வங்களுக்கு பால் அபிஷேகம் நடைபெற்றது.

    பின்னர் முப்பெரும் தேவியர் அம்மனுக்கு சந்தனகாப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. இரவு 9 மணிக்கு 108 திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இதில் திரளான பெண்கள் கலந்து கொண்டு பக்தி பாடல்கள் பாடி திருவிளக்கு பூஜை நடந்தது. தொடர்ந்து சிறப்பு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை குருநாதர் சக்தியம்மா மற்றும் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.

    Next Story
    ×