என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திட்டக்குடி அருகே சொத்துத் தகராறில் தொழிலாளியை தாக்கிய வாலிபர் கைதுபஸ் நிலையத்தில் போலீசார் மடக்கி பிடித்தனர்
    X

    திட்டக்குடி அருகே சொத்துத் தகராறில் தொழிலாளியை தாக்கிய வாலிபர் கைதுபஸ் நிலையத்தில் போலீசார் மடக்கி பிடித்தனர்

    • பரமசிவத்திடம் சொத்தை பிரித்து தருமாறு கேட்டுள்ளனர்.
    • வழிமறித்து கம்பியால் பலமாக தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பி சென்றனர்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த ஆக்கனூர் பகுதியை சேர்ந்தவர் பரமசிவம். இவருக்கு ராஜா என்ற ராஜேந்திரன், கிருஷ்ணன், அசோக்ராஜ், தர்மராஜ் என்ற 4 மகன்கள் உள்ளனர். ராஜேந்திரனை தவிர மற்று 3 பேரும் பரமசிவத்திடம் சொத்தை பிரித்து தருமாறு கேட்டுள்ளனர். அப்போது மூத்த மகன் ராஜேந்திரன் பின்னர் பார்ப்போம் என்று கூறி வந்தார். இந்நிலையில் கடைசி மகனான தர்மராஜ் மீண்டும் சொத்தை பிரித்து தருமாறு கேட்டுள்ளார்.

    இதனால் ஆத்திரமடைந்த ராஜேந்திரன் தனது மகன் மற்றும் கும்பலுடன் சேர்ந்து மோட்டார் சைக்களில் சென்ற தர்மராஜ் அவனது அண்ணன் அசோக்ராஜ்சை வழிமறித்து கம்பியால் பலமாக தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பி சென்றனர். இதுகுறித்து திட்டக்குடி போலீசார் வழக்குபதிவு செய்து அண்ணன் தம்பியை தாக்கிய கும்பலை வலைவீசி தேடி வந்தனர். இந்நிலையில் இந்த தாக்குதலில் தொட ர்புடைய ராஜேந்திரனின் மகன் சக்திவேல் திட்டக்குடி அடுத்த இளமங்களம் பஸ் நிலையத்தில் நின்று கொண்டிருந்தவரை மடக்கி பிடித்தனர். பின்னர் போலீசார் அவரை கைது செய்து அவரிடம் தாக்குதலில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியான ராஜேந்திரன் மற்றும் மற்றவர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×