என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்

விசாரணைக்கு அழைத்து சென்றபோது போலீசாரிடம் இருந்து தப்பி ஓடிய வாலிபர்- பஸ் மோதி பலி

- சீனிவாசனின் சாவில் மர்மம் இருப்பதாகவும் இதுபற்றி உரிய விசாரணை நடத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.
- பதட்டமான சூழ்நிலை நிலவுவதால் கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம், அடுத்த குண்டுகுளம் பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன் (வயது26). நேற்று மாலை இவரை சட்டவிரோதமாக மதுபாட்டில் பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் கைது செய்தனர். பின்னர் விசாரணைக்காக சீனிவாசனை மோட்டார் சைக்கிளில் அமர வைத்து போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர்.
இதற்கிடையே போலீசாரிடம் இருந்து தப்பி ஓடியபோது பஸ்மோதிய விபத்தில் சீனிவாசன் பலத்த காயம் அடைந்ததாக கூறி அவரை சிகிச்சைக்காக காஞ்சிபுரம் அரசு ஆஸ்பத்திரியில் போலீசார் அனுமதித்தனர்.அங்கு சிகிச்சை பலனின்றி சீனிவாசன் பரிதாபமாக இறந்தார். அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டு உள்ளது. இறந்து போன சீனிவாசன் குறித்து போலீசார் முறையாக எந்த தகவலும் அவரது பெற்றோர் மற்றும் உறவினர்களுக்கு தெரிவிக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் சீனிவாசனின் உறவினர்கள் மற்றும் விடுதலை சிறுத்தை கட்சியினர் ஏராளமானோர் இன்று காலை காஞ்சிபுரம் அரசு ஆஸ்பத்திரி முன்பு குவிந்தனர். அவர்கள் போலீசார் மீது குற்றம்சாட்டி திடீர் மறியலில் ஈடுபட்டனர். சீனிவாசனின் சாவில் மர்மம் இருப்பதாகவும் இதுபற்றி உரிய விசாரணை நடத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.
இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. பதட்டமான சூழ்நிலை நிலவுவதால் கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர். போராட்டத்தில் ஈடுபட்டு உள்ள சீனிவாசனின் உறவினர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள்.