என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ரெட்டிச்சாவடி அருகே சப்-இன்ஸ்பெக்டரை கத்தியால் தாக்க முயன்ற வாலிபர் கைது
    X

    ரெட்டிச்சாவடி அருகே சப்-இன்ஸ்பெக்டரை கத்தியால் தாக்க முயன்ற வாலிபர் கைது

    • பொது மக்களை தடுத்து நிறுத்தி மிரட்டி கொண்டிருந்தார்.
    • சப்- இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றார்.

    கடலூர்:

    ரெட்டிச்சாவடி அருகே சப்- இன்ஸ்பெக்டரை கத்தியால் தாக்க முயன்ற வாலிபர் கைது செய்யப்பட்டார். ரெட்டிச்சாவடி அடுத்த கீழ்குமாரமங்கலம் பகுதியில் வாலிபர் ஒருவர் கத்தியுடன் பொது மக்களை தடுத்து நிறுத்தி மிரட்டி கொண்டிருந்தார். இத்தகவல் அறிந்த ரெட்டிச்சாவடி போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றார்.

    பின்னர் கத்தியுடன் இருந்த வாலிபரை பிடித்து விசாரிக்க முயன்றார். அப்போது அந்த வாலிபர் திடீரென்று சப் இன்ஸ்பெக்டர் ஆறுமுகத்தை கத்தியால் தாக்க முயற்சித்தார். மேலும் பணி செய்ய விடாமல் தடுத்து கொலை மிரட்டல் விடுத்தார். இதனை தொடர்ந்து அந்த வாலிபரை பிடித்து விசாரணை நடத்திய போது, புதுச்சேரி மாநிலம் கரிக்கலாம்பாக்கத்தை சேர்ந்த சக்தி (வயது 30) என்பது தெரியவந்தது. இது குறித்து ரெட்டிச்சாவடி போலீசார் சக்தி மீது வழக்கு பதிவு செய்து அதிரடியாக கைது செய்தனர்.

    Next Story
    ×