என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோவையில் காதலி பேசாததால் வாலிபர் தற்கொலை
- ரெனில்குமார் கடந்த சில நாட்களாக மிகுந்த மனவேதனை அடைந்து காணப்பட்டார்.
- பெரியகடை வீதி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கோவை,
கேரள மாநிலம் பாலக்காட்டை சேர்ந்தவர் ரெனில்குமார் (வயது 35). இவர் கோவை பெரியக்கடை வீதியில் தங்கி இருந்து செல்போன் மெக்கானிக்காக வேலை செய்து வந்தார்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இவருக்கு பெங்களூரை சேர்ந்த இளம்பெண் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. 2 பேரும் அடிக்கடி நேரில் சந்தித்தும் செல்போனில் பேசியும் காதலை வளர்த்து வந்தனர்.
கடந்த வாரம் இளம் பெண்ணுக்கு ரெனில்கு மாருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதன் காரணமாக இளம் பெண் பேசுவதையும், பழகுவதையும் தவிர்த்தார்.
இதனால் ரெனில்குமார் கடந்த சில நாட்களாக மிகுந்த மனவேதனை அடைந்து காணப்பட்டார்.
சம்பவத்தன்று அறையில் இருந்த அவர் வாழ்க்கையில் விரக்தி அடைந்து தற்கொலை செய்வது என முடிவு செய்தார். அதன் படி விஷத்தை குடித்தார். பின்னர் பிளேடால் கை மற்றும் கழுத்தில் அறுத்து தற்கொலைக்கு முயன்றார்.
இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய ரெனில்குமாரை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவரை டாக்டர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளித்து வந்தனர்.
இந்தநிலையில் ரெனில்குமாரின் உறவினர்கள் அவரை மேல்சிகிச்சைக்காக பாலக் காடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்று சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த ரெனில்குமார் சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து பெரியகடை வீதி போலீசார் வழக்கு ப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.






