என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோவையில் வேலை கிடைக்காத விரக்தியில் ஆசிரியர் தற்கொலை
- தினேஷ்பாபு கடந்த 4 ஆண்டுகளாக எந்த வேலையும் கிடைக்காமல் வீட்டிலேயே இருந்து வந்தார்.
- சூலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை,
கோவை நீலாம்பூர் அருகே உள்ள மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் தினேஷ்பாபு (வயது 40).
இவரது மனைவி அனிதா. தினேஷ்பாபு கடந்த 10 ஆண்டுகளாக நீலாம்பூரில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வந்தார். கடந்த கொரோனா பரவல் கால கட்டத்தில் வேலையை விட்டு விலகினார்.
தற்போது பல பள்ளிகளில் ஆசிரியர் வேலை தேடி அலைந்தார். ஆனால் வேலை கிடைக்கவில்லை. கடந்த 4 ஆண்டுகளாக எந்த வேலையும் கிடைக்காமல் வீட்டிலேயே இருந்து வந்தார்.
வேலை கிடைக்காத விரக்தியில் தினேஷ்பாபு கடந்த சில நாட்களாக மிகுந்த மனவேதனை அடைந்து காணப்பட்டார். சம்பவத்தன்று வீட்டில் தனியாக இருந்த அவர் வாழ்க்கையில் விரக்தி அடைந்து தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
வேலைக்கு சென்று விட்டு வீட்டிற்கு திரும்பிய அவரது மனைவி அனிதா தனது கணவர் தற்கொலை செய்து கொண்டதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
பின்னர் அவர் இது குறித்து சூலூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். உடனடியாக போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
பின்னர் தற்கொலை செய்து கொண்ட தினேஷ் பாபுவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து சூலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






