என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஜவுளி குடோனில்  தீ விபத்தில்  ரூ.6 கோடி மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசம்
    X

    ஜவுளி குடோனில் தீ விபத்தில் ரூ.6 கோடி மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசம்

    • தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைத்தனர்.
    • தீ கட்டுக்குள் அடங்காமல் கொழுந்து விட்டு 100 அடி உயரத்திற்கு கரும் புகையுடன் எரிய தொடங்கியது.

    பர்கூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் பகுதியை சேர்ந்தவர் தங்கதுரை. இவருக்கு சொந்தமாக ஜெகதேவி சாலையில் குடோன் உள்ளது. இந்த குடோனை சின்ன பர்கூரைச் சேர்ந்த வடிவேல் என்பவர் வாடகைக்கு எடுத்து அதில் ஜவுளி பண்டல்களை அடுக்கி வைத்திருந்தார்.

    நேற்று இரவு 12 மணியளவில் திடீரென அந்த குடோன் தீப்பிடித்து எரிய தொடங்கியது. உடனடியாக அங்கு இருந்தவர்கள் பர்கூர் தீயணைப்பு மற்றும் மீட்பு பணி துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.

    தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைத்தனர். இருந்தாலும் தீ கட்டுக்குள் அடங்காமல் கொழுந்து விட்டு 100 அடி உயரத்திற்கு கரும் புகையுடன் எரிய தொடங்கியது.

    இதனால் சுமார் ரூ.6 கோடி மதிப்பிலான துணி பண்டல்கள் எரிந்து சாம்பல் ஆனது. இது குறித்து கடையின் உரிமையாளர் கொடுத்த புகாரின் பேரில் பர்கூர் போலீசார் வழக்கு பதிவு செய்து இந்த தீ விபத்து மின்கசிவால் ஏற்பட்டதா? அல்லது மர்ம நபர்கள் தீ வைத்து எரித்தனரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×