search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆறுமுகநேரி மெயின் பஜாரில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க ஆம்னி பஸ்களுக்கு தனி நிறுத்தம்
    X

    ஆம்னி பஸ்களுக்கான நிறுத்தம் அமையும் இடத்தை இயக்குனர் வில்லியம் ஜேசுதாஸ் பார்வையிட்ட போது எடுத்த படம். 

    ஆறுமுகநேரி மெயின் பஜாரில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க ஆம்னி பஸ்களுக்கு தனி நிறுத்தம்

    • ஆம்னி பஸ்களுக்கு டிக்கெட் வழங்கும் அலுவலகங்கள் மெயின் பஜாரிலேயே அமைந்துள்ளன.
    • ஆம்னி பஸ்கள் நின்று செல்ல நவீன வசதிகளுடன் கூடிய பஸ் நிறுத்தத்தை அமைக்க முடிவு செய்யப்பட்டது.

    ஆறுமுகநேரி:

    திருச்செந்தூர், உடன்குடி ஆகிய பகுதிகளில் இருந்து ஆறுமுகநேரி வழியாக சென்னை, கோவை, பெங்களூரு ஆகிய இடங்களுக்கு தினசரி ஆம்னி பஸ்கள் இயங்கி வருகின்றன. அதன்படி மாலையில் தொடங்கி இரவு 9 மணி வரையில் 40-க்கும் மேற்பட்ட ஆம்னி பஸ்கள் ஆறுமுகநேரி மெயின்பஜார் வழியாக செல்கின்றன.

    ஆம்னிபஸ்

    இவற்றிற்காக டிக்கெட் வழங்கும் தனியார் அலுவலகங்கள் மெயின் பஜாரிலேயே அமைந்துள்ளன. இதனால் பயணிகளை ஏற்றி செல்வதற்காக ஆம்னி பஸ்கள் மெயின் பஜாரில் வழி நெடுக அடுத்தடுத்து நிற்கின்ற நிலை உள்ளது. குறுகிய சாலை என்பதாலும் போக்குவரத்து மிகுந்த நேரம் என்பதாலும் அங்கு போக்கு வரத்து நெரிசல் அதிகரிக்கும் நிலைமைக்கு ஆம்னி பஸ்கள் காரணமாகி விடுகின்றன. இந்த பிரச்சனைக்கு தீர்வு காண முடியாத நிலையே இருந்து வந்தது. இதனிடையே ஆறுமுகநேரி பேரூராட்சி அலுவலகத்திற்கு எதிரே நீண்ட காலமாக மற்றொரு தீரா பிரச்சனையாக இருந்து வந்த ஒரு ஏக்கர் பரப்பளவு குப்பை கிடங்கு ரூ. 1.40 கோடி செலவில் அகற்றப்பட்டு தற்போது புதிய நிலப்பரப்பாக காட்சி யளிக்கிறது. ஆறுமுகநேரி பேரூராட்சி தலைவர் கலாவதி கல்யாணசுந்தரம், துணைத் தலைவர் கல்யாணசுந்தரம், செயல் அலுவலர் கணேசன் ஆகியோரின் தீவிர ஆலோ சனைக்கு பிறகு பேரூராட்சி அலுவலகத்திற்கு எதிரே ஆம்னி பஸ்கள் நின்று செல்வதற்கான நவீன வசதிகளுடன் கூடிய பஸ் நிறுத்தத்தை அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதற்காக பேரூராட்சி மன்றத்தில் தீர்மா னமும் நிறைவேற்றப்பட்டது.

    இந்த நிலையில் ஆம்னி பஸ் நிறுத்தத்திற்கான இடத்தை நெல்லை மண்டல பேரூராட்சி களின் உதவி இயக்குனர் வில்லியம் ஜேசுதாஸ் நேரில் பார்வை யிட்டார். பஸ் நிறுத்தத்தின் மற்றொரு பகுதியில் ஆட்டுச் சந்தை அமைக்கப்பட இருப்பதையும் அவர் ஆய்வு செய்தார்.

    Next Story
    ×