என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோவை பேரூர் அருகே பிளம்பர் வீட்டில் புகுந்து 8 பவுன் நகை, பணம் கொள்ளை
    X

    கோவை பேரூர் அருகே பிளம்பர் வீட்டில் புகுந்து 8 பவுன் நகை, பணம் கொள்ளை

    • தீபாவளிக்கு மாமியார் வீட்டுக்கு சென்றிருந்த நேரத்தில் துணிகரம்
    • உறவினர்கள் கைவரிசையா? போலீசார் விசாரணை

    பேரூர்,

    கோவை பேரூர், தீத்திபாளையம் காவேரி வீதியை சேர்ந்தவர் முருகேசன் (வயது 41). பிளம்பராக உள்ளார். இவரது மனைவி நித்யா, மகன் ஹரிநாத்.

    இந்த நிலையில் முருகேசன் தீபாவளியை முன்னிட்டு குடும்பத்துடன் சென்னனூரில் உள்ள மாமியார் வீட்டிற்கு புறப்பட்டு சென்றார். அங்கு தீபாவளி பண்டிகையை கொண்டாடிவிட்டு அடுத்த நாள் மாலை வீடு திரும்பினார்.

    அப்போது வீட்டின் முன்பக்க கதவு திறந்து கிடந்தது. எனவே அதிர்ச்சி அடைந்த முருகேசன் பதட்ட த்துடன் வீட்டுக்குள் சென்று பார்த்தார். அப்போது வீட்டுக்குள் துணிமணிகள் கலைந்து கிடந்தன. மேலும் பீரோ திறந்து கிடந்தது. எனவே முருகேசன் பீரோவில் தேடிப்பார்த்தார். அப்போது பீரோவில் இருந்த 8 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ.44 ஆயிரம் ரொக்கம் ஆகியவை மாயமானது தெரிய வந்தது.

    முருகேசன் குடும்பத்தினர் தீபாவளி பண்டி கைக்காக வெளியூருக்கு புறப்பட்டு செல்வதை முன்கூட்டியே அறிந்த சிலர் வீடுபுகுந்து பீரோவில் இருந்த நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து தப்பி சென்றது தெரிய வந்தது.

    இதுதொடர்பாக முருகேசன், பேரூர் போலீசில் புகார் செய்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவுசெய்து சம்பவ இடத்தில் உள்ள சி.சி.டி.வி. கண்காணிப்பு காமிராக்களை கைப்பற்றி தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மேலும் முருகேசனின் வீட்டுக்கு உறவினர்கள் சிலர் அடிக்கடி சென்று வந்ததாக தெரிகிறது. எனவே அவர்கள் ஒருவேளை மேற்கண்ட சம்பவத்தில் ஈடுபட்டு இருக்கலாமா என்று போலீசாருக்கு சந்தேகம் உள்ளது. எனவே கொள்ளைபோன வீட்டின் உரிமையாளர் முருகேசன் தொடர்புடைய உறவினர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×