என் மலர்
உள்ளூர் செய்திகள்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறித்து அவதூறு கருத்துக்களை சமூக வலைதளத்தில் பரப்பியவர் கைது
- கைது செய்யப்பட்ட பாலு சமீபத்தில் தி.மு.க.விலிருந்து விலகி பாட்டாளி மக்கள் கட்சியில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
எடப்பாடி:
சேலம் மாவட்டம் எடப்பாடி ஒன்றியத்திற்குட்பட்ட பக்கநாடு கிராமம் குண்டு மலைக்கரடு பகுதியை சேர்ந்தவர் பாலு (வயது 36). லாரி டிரைவர்.
இவர் சமீபகாலமாக தி.மு.க. தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் பற்றி பல்வேறு அவதூறு கருத்துக்களை ஆடியோ பதிவாக சமூக வலைதளங்களில் பரப்பி வந்ததாக கூறப்படுகிறது.
இது குறித்து விசாரணை மேற்கொண்டு வந்த பூலாம்பட்டி போலீசார் இன்று அதிகாலை பாலுவை கைது செய்து அவரிடம் முதலமைச்சரை பற்றி அவதூறான கருத்துக்களை பரப்பியது தொடர்பாக தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கைது செய்யப்பட்ட பாலு சமீபத்தில் தி.மு.க.விலிருந்து விலகி பாட்டாளி மக்கள் கட்சியில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story






