search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோவையில் வேகமெடுக்கும் புதிய வகை வைரஸ் காய்ச்சல்
    X

    கோவையில் வேகமெடுக்கும் புதிய வகை வைரஸ் காய்ச்சல்

    • சிகிச்சை அளிக்க 30 படுக்கையுடன் கூடிய தனி வார்டு திறக்கப்பட்டு உள்ளது.
    • இந்த வார்டில் தற்போது காய்ச்சல் பாதிப்பு காரணமாக 4 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    கோவை,

    நாடு முழுவதும் இன்புளூயன்சா வைரசான எச்3 என்2 என்ற வைரஸ் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இந்த காய்ச்சலால் குழந்தைகள், முதியவர்கள் மற்றும் இணை நோய் உள்ளவர்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

    கடந்த ஜனவரி 2-ந் தேதி முதல் மார்ச் 5-ந் தேதி வரை 9 வாரங்களில் இன்புளூயன்சா வைரஸ் காய்ச்சல் பாதிப்பு 451 பேருக்கு உறுதி செய்யப்பட்டு உள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது. இத னையடுத்து மாநிலங்களில் கண்காணிப்பு பணிகளை தீவிரப்படுத்த மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.

    இதனை தொடர்ந்து தமிழகத்தில் காய்ச்சல் சிறப்பு முகாம்கள் ஆயிரம் இடங்களில் நடத்தப்பட்டது. கோவை மாவட்டத்தில் 142 இடங்களில் நடத்தப்பட்ட முகாம்களில் 10 பேர் பங்கேற்றனர்.

    மேலும் சுகாதாரத்துறை மருத்துவ ஊழியர்கள், கர்ப்பிணிகள், இணை நோய் உள்ளவர்கள், 8 வயதுக்குட்பட்ட குழந்தை கள் ப்ளூ காய்ச்சல் தடுப்பூசியை செ லுத்திக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

    தற்போது கோவை மாவட்டத்தில் இன்பு ளூயன்சா மற்றும் கொரோனா பரவல் அதிகரித்து வருவதையொட்டி எச்ச ரிக்கை செய்யப்பட்டு உள்ளது.சுகாதாரத்துறை அதிகாரிகள் காய்ச்சல் அதிகமுள்ள பகுதிகளை கண்டறிந்து தடுப்பு நடவடிக்கை பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

    தற்போது கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு காய்ச்சல் பாதிப்பு காரணமாக சிகிச்சைக்கு வரும் புற நோ யாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதனை யடுத்து காய்ச்சல் பாதிப்புடன் கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு வருப வர்களுக்கு சிகிச்சை அளிக்க 30 படுக்கைகளுடன் தனி வார்டு தயார் படுத்தப்பட்டு உள்ளது. இந்த வார்டில் தற்போது காய்ச்சல் பாதிப்பு காரணமாக 4 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    இது குறித்து கோவை அரசு ஆஸ்பத்திரி டீன் நிர்மலா கூறியதாவது:-

    கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு காய்ச்சல் பாதிப்பு காரணமாக சிகிச்சைக்கு வரும் நோயாளிகளின் எண்ணி க்கை அதிகரித்துள்ளது. காய்ச்சல் பாதிப்பு அதிகமாக உள்ளவர்களை உள்நோயாளிகளான அனுமதித்து சிகிச்சை அளிக்க 30 படுக்கையுடன் கூடிய தனி வார்டு திறக்கப்பட்டு உள்ளது.

    இந்த வார்டில் அனுமதிக்கப்படும் நோயாளிகள் 24 மணி நேரமும் கண்காணி க்கப்படுவார்கள். மருந்து கள் மற்றும் மாத்திரைகள் போதிய அளவில் இருப்பு வைக்கப்பட்டு உள்ளது. காய்ச்சல் தடுப்பூசிகளும் உள்ளன. சுகாதா ரத்துறையின் மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் வழிகாட்டுதலின் பேரில் அனைத்து முன் எச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு உள்ளது.

    கோவை மாநகர் பகுதி மட்டும் அல்லாமல் ஊரக பகுதிகளிலும் இன்பு ளூயன்சா வைரஸ் காய்ச்சல் பரவி வருகிறது. காய்ச்சல் பாதிப்புகளை கட்டுப்படுத்த சுகாதாரத்துறையினர் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். அவர்கள் கிராம புறங்களில் காய்ச்சல் தொடர்பான விழிப்பு ணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.

    காய்ச்சல் பரவாமல் தடுக்க முக கவசம் அணிய வேண்டும். சமூக இடைவெளியை பின் பற்ற வேண்டும் என அறிவுறுத்தி வருகின்றனர். மேலும் காய்ச்சல் பாதிப்பு அதிகமுள்ள பகுதிகளை கண்டறிந்து தினசரி 100 முகாம்களை நடத்தி வருகின்றனர். இதன் மூலம் காய்ச்சல் பாதிப்பு உள்ளவர்களை கண்டறிந்து அவர்களுக்கு பரிசோதனை மற்றும் மருந்து, மாத்தி ரைகள் வழங்கப்பட்டு வருகின்றன. காய்ச்சல் பாதிப்பு அதிகம் உள்ள வர்கள் மற்றும் மூச்சு விட சிரமப்படும் நபர்களுக்கு ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.

    இது குறித்து மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குனர் அருணா கூறியதாவது:-

    மாவட்டத்தில் காய்ச்சல் பாதிப்பை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் காய்ச்சல் பரவுவது தொடர்பான விழிப்பு ணர்வையும் ஏற்படுத்தி வருகிறோம். தினசரி மாவட்டம் முழுவதும் 100 முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் தினமும் 3 ஆயிரம் பேர் பயனடைந்து வருகின்றனர். பொதுமக்கள் காய்ச்சல் பாதிப்பு இருந்தால் டா க்டர்களின் பரிந்துரையின்றி தன்னிச்சையாக மாத்திரைகளை வாங்கி சாப்பிட கூடாது என அறிவுறுத்தப்பட்டு வருகிறது. காய்ச்சல் பாதிப்பு உள்ளவர்கள் உரிய சிகிச்சை பெற்று 3 நாட்கள் வீட்டில் தனிமைப்படுத்தி கொள்ள வேண்டும். அவர்கள் முக கவசம் அணிய வேண்டும்.

    இந்த காய்ச்சல் முதல் 3 நாட்கள் அதிகமாக இருக்கும் என்பதால் வீட்டில் உள்ளவர்களுக்கு பரவும் வாய்ப்பு உள்ளது. எனவே தனிமைப்படுத்தி கொள்வதன் மூலம் காய்ச்சல் பரவுவதை தடுக்க முடியும். பொதுமக்கள் வெளியே செல்லும் போது முக கவசம் அணிந்து சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×