search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விழுப்புரம் மாவட்டத்தில் தொடர் வழிப்பறியில் ஈடுபட்ட கும்பல் கைது
    X

    விழுப்புரம் மாவட்டத்தில் தொடர் வழிப்பறியில் ஈடுபட்ட கும்பல் கைது

    • விழுப்புரம் மாவட்டத்தில் தொடர் வழிப்பறியில் ஈடுபட்ட கும்பல் கைது செய்யப்ட்டனர்.
    • சிசிடிவி காட்சிகள் மூலம் போலீசார் கொள்ளை கும்பலை அதிரடியாக பிடித்தனர்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் புகையிலை உள்ளிட்ட போதை பொருள்கள் கடத்தல் மற்றும் விற்பனை கட்டுக்குள் வந்த நிலையில் தற்போது வழிப்பறிக் கொள்ளை நடைபெற்று வருகிறது. விழுப்புரம் மாவட்டம் புதிய பஸ் நிலையம் அருகில் அதிகாலை முதலே மீன் வியாபாரம் நடைபெறுவது வழக்கம். இந்நிலையில் மீன் வியாபாரிகள் அதிகளவில் விழுப்புரத்திற்கு வந்து மீன்களை வாங்கி விழுப்புரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் விற்பனை செய்து வருகின்றனர். தற்போது அதிகாலையில் மீன்களை வாங்க வரும் மீன் வியாபாரிகள் மற்றும் மோட்டார் சைக்கிளில் செல்லும் பொதுமக்களை மர்ம கும்பல் ஒன்று தாக்கி அவர்களிடம் கத்தியை காட்டி மிரட்டி வழிப்பறிக் கொள்ளையில் ஈடுபட்டு வருகிறது.

    மேலும் இந்த வழிப்பறி கொள்ளை கடந்த ஒரு மாதமாக விழுப்புரம் மற்றும் அதனை சுற்றியுள்ள செஞ்சி அனந்தபுரம் உள்ளிட்ட பகுதிகளிலும் அரங்கேறியுள்ளது. இதனால் விழுப்புரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பொதுமக்கள் அனைவரும் இரவில் அத்தியாவசிய பொருள் வாங்க வெளியில் வர பயந்து போய் வீட்டில் முடங்கியுள்ளனர். தகவல் அறிந்த விழுப்புரம் மாவட்ட எஸ்பி ஸ்ரீநாதா உத்தரவின் பேரில் டிஎஸ்பி பார்த்திபன் தலைமையிலான போலீசார் இரவு முழுவதும் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். மேலும் போலீசார் முக்கியமான பகுதிகளில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை கொண்டு ஆய்வு செய்ததில் இந்த மர்ம கொள்ளை கும்பல் பதிவு எண் இல்லாத திருட்டு மோட்டார் சைக்கிளில் பொதுமக்களை தாக்கி வழிப்பறியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனை எடுத்து சிசிடிவி காட்சிகள் மூலம் போலீசார் கொள்ளை கும்பலை அதிரடியாக பிடித்தனர்.

    இதனை அடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். மேலும் போலீசார் அவர்களிடம் விசாரணை செய்ததில் திருவண்ணாமலை மாவட்டம் சோமாட்சிபாடி பகுதியைச் சேர்ந்த சிவா என்கிற ராஜி (வயது 25), கலையரசன் (22), வீரமணி (20), செயின்ஷா (22), அருணாச்சலம் (25) என்பது தெரியவந்தது. மேலும் இவர்கள் திருவண்ணாமலை ஆரணி செஞ்சி போளூர் உள்ளிட்ட பகுதிகளில் வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்டதும் தெரிய வந்தது. மேலும் இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×