search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பரமத்தி வேலூரில் பழக்கடையில் திடீர் தீ விபத்து
    X

    தீயணைப்பு துறையினர் தீயை அணைத்த போது எடுத்த படம்.

    பரமத்தி வேலூரில் பழக்கடையில் திடீர் தீ விபத்து

    • நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர்- நாமக்கல் செல்லும் சாலையில் உள்ள அரசு கால்நடை மருத்துவமனை அருகில் தார் சாலை ஓரத்தில் நெடுகிலும் கீற்றுகளால் நேயப்பட்ட பழக்கடைகள் உள்ளன.
    • மின்சார ஒயர்கள் உரசியதால் கீற்றுக்கொட்டையின் மீது தீப்பொறி பறந்து விழுந்ததில் பழக்கடையில் தீப்பிடித்தது.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர்- நாமக்கல் செல்லும் சாலையில் உள்ள அரசு கால்நடை மருத்துவமனை அருகில் தார் சாலை ஓரத்தில் நெடுகிலும் கீற்றுகளால் நேயப்பட்ட பழக்கடைகள் உள்ளன. இந்நிலையில் நேற்று இரவு சுமார் 11 மணியளவில் கீற்றுக் கொட்டகை உள்ள பழக்கடை வழியாக மேலே செல்லும் மின்சார ஒயர்கள் உரசியதால் கீற்றுக்கொட்டையின் மீது தீப்பொறி பறந்து விழுந்ததில் பழக்கடையில் தீப்பிடித்தது.

    இதில் சாலை ஓரத்தில் போடப்பட்டிருந்த கீற்றுக் கொட்டகை திடீரென தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. அதை பார்த்த அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து தீயை அணைக்க முயற்சி செய்தனர். இருப்பினும் தீயை அணைக்க முடிய வில்லை. இது குறித்து வேலாயுதம்பாளையம் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

    தகவலின் பேரில் நிலைய அலுவலர் திருமுருகன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பந்தப்பட்ட பகுதிக்கு விரைந்து சென்று வேகமாக எரிந்து கொண்டிருந்த தீயை அனைத்து கட்டுப்படுத்தி தீஅருகில் உள்ள கடைகளுக்கு பரவாமல் தடுத்தனர். இதனால் பெரும் தீ விபத்து தவிர்க்கப்பட்டது.இருப்பினும் பழக்கடை முழுவதும் எரிந்து சாம்பலாயின.

    Next Story
    ×