search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோவையில் ஆணி மேல் நின்று அருள்வாக்கு கூறும் பெண் பூசாரி
    X

    கோவையில் ஆணி மேல் நின்று அருள்வாக்கு கூறும் பெண் பூசாரி

    • கலாமணி மீது கருப்புராயன் இறங்கும் நிகழ்வு ஆச்சரியப்படுத்துவதாக இருக்கும்.
    • அருள்வாக்கு நிகழ்வை பார்ப்பதற்காக 1000-க்கும் மேற்பட்ட பக்தர்கள் திரண்டு வருவார்கள்.

    நிலாம்பூர்,

    கோவை மாவட்டம், அன்னூர் பகுதியில் கருப்புராயன் சுவாமி கோவில் உள்ளது. இங்கு அமாவாசைதோறும் கருப்புராயன், மாசாணி அம்மனுக்கு கறிப்படை சகிதம் சிறப்பு பூஜைகள் செய்து மதுபானம் ஊற்றி, கடந்த 4 தலைமுறையாக பக்தர்கள் வழிபட்டு வருகின்றனர்.

    கருப்புராயன் கோவிலில் அமாவாசை பூஜைக்கான அனைத்து நிகழ்வுகளையும் பெண் பூசாரி கலாமணி என்பவர் முன்னின்று நடத்துகிறார். அப்போது கலாமணி மீது கருப்புராயன் இறங்கும் நிகழ்வு ஆச்சரியப்படுத்துவதாக இருக்கும்.

    அதன்பிறகு அந்த பெண்மணி சாட்டை, அரிவாள், பிரம்பு எடுத்து துடும்பு இசைக்கேற்ப சூறாவளி வேகத்தில் கருப்புராயன் ஆட்டம் ஆடுவார். இதனை தொடர்ந்து பூசாரி கலாமணி ஆணிமுள் செருப்பில் நின்று கொண்டு அருள்வாக்கு சொல்கிறார். அதன்பிறகு கருப்பு ராயனுக்கு திருக்கல்யாணம் செய்து வைக்கும் நிகழ்வு நடக்கிறது.

    அன்னூர் கருப்புராயன் கோவில் அமாவாசை அருள்வாக்கு நிகழ்வை பார்ப்பதற்காக சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து 1000-க்கும் மேற்பட்ட பக்தர்கள் திரண்டு வருவார்கள். இதுகுறித்து பக்தர்கள் கூறுகையில், கருப்புராயன் கோவிலில் பூசாரி கலாமணி கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேல் பூசாரியாக உள்ளார். அமாவாசை நேரத்தில் அருள்வாக்கு கேட்கும் பக்தர்கள் வேண்டியது அனைத்தும் நடக்கும் என்று ஐதீகம் என்று பரவசத்துடன் கூறுகின்றனர்.

    Next Story
    ×