search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    செஞ்சி அருகே  கியாஸ் குடோனில் சிலிண்டர்  வெடித்து மினி வேன் எரிந்து சேதம்
    X

    சிலிண்டர் வெடித்தலில் எரிந்த மினிவேனை படத்தில் காணலாம்.

    செஞ்சி அருகே கியாஸ் குடோனில் சிலிண்டர் வெடித்து மினி வேன் எரிந்து சேதம்

    • சுமார் 6 வேன்களில் 400-க்கும் மேற்பட்ட சிலிண்டர்கள் ஏற்றப்பட்டு இருந்தன.
    • இதில் 2 சிலிண்டர்கள் வெடித்து மினி வேன் முழுவதும் எரிந்தது.

    விழுப்புரம்:

    செஞ்சி -திண்டிவனம் சாலையில் ஊரணித்தாங்கல் கிராம எல்லையில் தனியார் கியாஸ் குடோன் உள்ளது. தீபாவளி சீசன் என்பதால் இன்று அதிகாலையில் சிலிண்டர்களை சப்ளை செய்வதற்காக நேற்று இரவு ஊழியர்கள் அவர்கள் கொண்டு செல்லும் டாட்டா ஏ.சி. மற்றும் மினி வேன் ஆகியவைகளில் சிலிண்டர்களை ஏற்றிவிட்டு ஓய்வெடுக்க சென்று விட்டனர் .சுமார் 6 வேன்களில் 400-க்கும் மேற்பட்ட சிலிண்டர்கள் ஏற்றப்பட்டு இருந்தன.

    இன்று அதிகாலை 4.30 மணி அளவில் சிலிண்டர் ஏற்றி வைக்கப்பட்ட மினி வேனில் இருந்து சிலிண்டர் வெடித்ததால் திடீரென வேன் தீப்பிடித்தது. இது மிக உயரத்தில் தெரிந்ததால் இது குறித்து அங்கு இரவு காவலில் இருந்த பரசுராமன் ஓடிச் சென்று அருகில் இருந்த டீக்கடைக்காரர் மற்றும் பொதுமக்களுக்கு தகவல் தெரிவித்தார். தகவல் அறிந்த டீக்கடைக்காரர் விரைந்து வந்து இது குறித்து உடனடியாக செஞ்சி தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தார்.

    விபத்து ஏற்பட்ட சுமார் 10 நிமிடங்களில் தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர். இதில் சி2 லிண்டர்கள் வெடித்து மினி வேன் முழுவதும் எரிந்தது. மேலும் அருகில் இருந்த ஒரு மினி வேன் பகுதியாக எரிந்தது. உடனடியாக விரைந்து வந்து தீயை அணைத்ததால் வேன்களில் இருந்த 400 சிலிண்டர்கள் மற்றும் குடோனில் இருந்த சுமார் 100 சிலிண்டர்கள் மீட்கப்பட்டு பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. வேனில்இருந்த பேட்டரியில் மின்கசிவு ஏற்பட்டு 2 சிலிண்டர் வெடித்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இச்சம்பவம் குறித்து செஞ்சி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×