என் மலர்
உள்ளூர் செய்திகள்

தூத்துக்குடியில் அமைச்சர் வீட்டை முற்றுகையிட முயன்ற பா.ஜனதாவினர் 155 பேர் மீது வழக்கு
- சசிகலா புஷ்பா அளித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, ஒரு கவுன்சிலரை கைது செய்தனர்.
- அமைச்சர் வீட்டை முற்றுகையிட முயன்ற பா.ஜனதாவினர் 155 பேரை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி:
பா.ஜனதா கட்சியின் மாநில துணைத்தலைவரான சசிகலா புஷ்பாவுக்கு சொந்தமாக தூத்துக்குடி தபால் தந்தி காலனி 8-வது தெருவில் உள்ள வீட்டை 13 பேர் கும்பல் சூறையாடியது.
இதுதொடர்பாக சசிகலா புஷ்பா அளித்த புகாரின்பேரில் தி.மு.க. கவுன்சிலர்கள் உள்பட 13 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து, ஒரு கவுன்சிலரை கைது செய்தனர். இதற்கிடையே சசிகலா புஷ்பா வீட்டை சேதப்படுத்தியவர்களை கைது செய்யவேண்டும் என்று கூறி அமைச்சர் வீட்டை முற்றுகையிட முயன்ற பா.ஜனதாவினர் 155 பேரை போலீசார் கைது செய்தனர்.
இந்நிலையில் பொதுஅமைதிக்கு பங்கம் விளைவிக்கும் விதமாக முற்றுகை போராட்டத்தில் ஈடுபட முயன்ற மாவட்ட தலைவர் சித்ராங்கதன், பொதுச்செயலாளர் உமரிசத்தியசீலன், துணைத்தலைவர்கள் வக்கீல் வாரியார், சுவைதர் உள்பட 155 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
Next Story






