என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோவையில் விபத்தில் சிறுவன் பலி
- நண்பரை பார்த்து விட்டு திரும்பி வீட்டிற்கு வந்த போது கோர விபத்து நடந்தது.
- விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கோவை,
கோவை கிணத்துக்கடவு அருகே உள்ள செங்குட்டைபாளையத்தை சேர்ந்தவர் வீரமுத்து. இவரது மகன் மோகன்தாஸ் (வயது 17). இவர் 10-ம் வகுப்பு வரை படித்து முடித்து விட்டு வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்தார்.
சம்பவத்தன்று இவர் மோட்டார் சைக்கிளில் மலுமிச்சம்பட்டியில் உள்ள நண்பரை பார்ப்பதற்காக சென்றார். பின்னர் மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு புறப்பட்டார். மோட்டார் சைக்கிள் கோவை- பொள்ளாச்சி ரோட்டில் வந்து கொண்டு இருந்த போது திடீரென கட்டுப்பாட்டை இழந்து ரோட்டின் நடுவே இருந்த தடுப்பு சுவரில் மோதியது.
இதில் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்த மோகன்தாஸ் சம்பவஇடத்திலயே பரிதாபமாக இறந்தார். இதனை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் கிணத்துக்கடவு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
பின்னர் விபத்தில் பலியான மோகன்தாசின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து கிணத்துக்கடவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.






