என் மலர்
உள்ளூர் செய்திகள்

நெல்லை அருகே 15 வயது சிறுமி தூக்குப்போட்டு தற்கொலை
- பிரியா 10-ம் வகுப்பு முடித்துவிட்டு வீட்டில் இருந்து வந்தார்.
- கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு விபத்து ஒன்றில் சிக்கி தங்கராஜ் உயிரிழந்தார்.
நெல்லை:
நெல்லையை அடுத்த வன்னிகோனேந்தல் பகுதியை சேர்ந்தவர் தங்கராஜ். இவருக்கு மனைவி, 2 மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். இதில் 2-வது மகள் பிரியா (வயது 15). இவர் 10-ம் வகுப்பு முடித்துவிட்டு வீட்டில் இருந்து வந்தார். தங்கராஜின் மனைவி அவரை விட்டு பிரிந்து சென்று விட்டதால் 3 குழந்தைகளையும் தங்கராஜ் கவனித்து வந்தார். இந்நிலையில் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு விபத்து ஒன்றில் சிக்கி தங்கராஜ் உயிரிழந்தார்.
இதையடுத்து 3 குழந்தைகளையும், தங்கராஜ் சகோதரி நேசமணி (35) என்பவர் கவனித்து வந்த நிலையில் நேற்று மாலை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பிரியா சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த தேவர்குளம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பிரியா உடலை மீட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனைக்காக சேர்த்தனர். மேலும் பிரியா எதற்காக தற்கொலை செய்து கொண்டார்? என்பது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






