search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோவையில் ஆயுதங்களுடன் சுற்றிய 7 பேர் கைது
    X

    கோவையில் ஆயுதங்களுடன் சுற்றிய 7 பேர் கைது

    • கோவை மாநகரில் போலீசார் சோதனையை தீவிரப்படுத்தி உள்ளனர்.
    • போலீசார் அந்த வாலி பர்களை விரட்டி சென்று மடக்கி பிடித்தனர்.

    கோவை,

    கோவையில் அடுத்தடுத்து 2 கொலை சம்பவங்கள் நடந்தது. இதனையடுத்து கோவை மாநகரில் போலீசார் சோதனையை தீவிரப்படுத்தி உள்ளனர்.

    2 நாட்களுக்கு முன்பு ரெயில் நிலையம் அருகே துப்பாக்கியுடன் சுற்றிய 3 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். இந்தநிலையில் நேற்று மேலும் 7 பேர் ஆயுதங்களுடன் சிக்கினர்.

    செல்வபுரம் போலீசார் சப்-இன்ஸ்பெக்டர் நடராஜன் தலைமையில் செல்வ சிந்தாமணிகுளம் வழியாக ரோந்து சென்றனர்.அப்போது அங்கு 3 வாலிபர்கள் சந்தேகப்படும் படியாக நின்று கொண்டு இருந்தனர்.

    அவர்கள் போலீசாரை பார்த்ததும் தப்பி ஓட முயன்றனர். இதனையடுத்து போலீசார் அந்த வாலி பர்களை விரட்டி சென்று மடக்கி பிடித்து சோதனை நடத்தினர். அப்போது அவர்கள் 3 பேரும் 3 கத்திகளை தங்களது உடலில் மறைத்து வைத்து இருப்பது தெரிய வந்தது.

    இதனை தொடர்ந்து போலீசார் பிடிபட்ட 3 பேரையும் போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் செல்வபுரம் விஜயலட்சுமி நகரை சேர்ந்த கனகராஜ் (வயது 32), சொக்கம்புதூரை சேர்ந்த பிரதாப் (23), தேவேந்திரா வீதியை சேர்ந்த இந்திரகுமார் (26) என்பது தெரிய வந்தது.

    இவர்கள் மீது ஏற்கனவே செல்வபுரம் போலீசில் நிலையத்தில் கொலை மிரட்டல், கொலை முயற்சி, அடிதடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் இருப்பதும் தெரிய வந்தது. 3 பேரிடம் போலீசார் கத்தியுடன் சுற்றியதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் வழிப்பறியில் சம்பவத்தில் ஈடுபடுவதற்காக கத்தியுடன் சுற்றியதாக தெரிவித்தனர். கைது செய்யப்பட்ட 3 பேரையும் போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

    சரவணம்பட்டி அருகே சாரதா சிட்டியில் உள்ள பெட்டிக்கடை முன்பு வாள், அரிவாள் மற்றும் பயங்கர ஆயுதங்களுடன் 2 மோட்டார் சைக்கிள்களில் 4 வாலிபர்கள் வந்தனர். அவர்கள் கீரநத்தத்தில் உள்ள டாஸ்மாக் கடையில் கொள்ளையடிப்பது குறித்து பேசிக்கொண்டு இருந்தனர். இதனை கேட்டு பெட்டிக்கடைக்காரர் அதிர்ச்சியடைந்தார். பின்னர் இதுகுறித்து அவர் சரவணம்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

    உடனடியாக போலீசார் தகவல் வந்த இடத்துக்கு விரைந்து சென்றனர். பின்னர் கொள்ளை சம்பவத்தை அரங்கேற்ற ஆயுதங்களுடன் நின்று கொண்டு இருந்த 4 வாலிபர்களையும் போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர். அவர்களிடம் இருந்த 2 மோட்டார் சைக்கிள், ஒரு வாள், ஒரு அரிவாள், 2 கத்தி ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். பின்னர் போலீசார் கைது செய்யப்பட்ட 4 பேரையும் போலீஸ் நிலையம் அைழத்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் கணபதியை காமராஜபுரத்தை சேர்ந்த கவுரிசங்கர் (24), சுகந்தராம் (23), சரவ ணம்பட்டி விநாயகா புரத்தை சேர்ந்த ரித்திக் (19), ஜெகதீஸ் (30) என்பது தெரிய வந்தது. போலீசார் கைது செய்யப்பட்ட 4 வாலிபர்களையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

    Next Story
    ×